அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...

மாருதி சுசுகி நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகமான எஸ்-பிரெஸ்ஸோ பிஎஸ்6 மாடல் இந்திய மார்கெட்டில் மிக சிறப்பான முறையில் விற்பனையாகி வருகிறது. தீபாவளி பண்டிக்கை வேறு இடையில் வந்ததால் எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனையை எந்த நிறுவனத்தாலும் தடுக்க முடியவில்லை.

அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...

இதற்கிடையில் இந்த மாடலின் சிஎன்ஜி வேரியண்ட்டும் விரைவில் அறிமுகமாகவுள்ளது. இந்த சிஎன்ஜி 1.2 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்டின் சோதனை ஓட்டம் சமீபத்தில் மாசு உமிழ்வு அளவை கணக்கிடும் கருவிகளுடன் நடைபெற்றுள்ளது.

அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...

சோதனை ஓட்டத்திற்காக இந்த காரில் ஒட்டப்பட்டுள்ள டேப்புகள் தான் இந்த கார் எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் என்ற அடையாளத்தையே நமக்கு தருகிறது. இந்த காரில் சிலிண்டர் பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது என்பது வெளியாகியுள்ள புகைப்படங்களே பார்த்தாலே தெரிகிறது.

அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...

தற்சமயம் விற்பனையாகி வருகின்ற எஸ்-பிரெஸ்ஸோவில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 67 பிஎச்பி பவரையும் 90 என்எம் டார்க் திறனையும் வெளியிடுகிறது. இதைவிட குறைவான பிஎச்பி பவர் மற்றும் டார்க் திறனையே 2020 மாருதி எஸ்-பிரெஸ்ஸோ சிஎன்ஜி பிஎஸ்6 வேரியண்ட் வெளிப்படுத்தும்.

அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...

வெளியாகியுள்ள சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் பார்த்தால் சிஎன்ஜி சிலிண்டர் காரின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் வாகனங்களை சிஎன்ஜி சிலிண்டர் அமைப்பிற்கு உட்படுத்த கட்டாயப்படுத்துவதே, மாருதியின் இந்த சிஎன்ஜி வேரியண்ட்டிற்கு முக்கிய காரணம். இந்த எஸ்-பிரெஸ்ஸோ மாடலில் மட்டுமல்லாமல் தனது அனைத்து சிறிய அளவிலான மாடல்களிலும் சிஎன்ஜி வேரியண்ட்டை தயாரிக்கும் பணியிலும் மாருதி நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...

ஏனெனில் சிஎன்ஜி வாகனங்கள் பெட்ரோல், டீசல் வேரியண்ட்களை விட குறைவான மாசுவையே வெளியிடுகின்றன. இவ்வாறான சிஎன்ஜி வாகனங்கள் சாலைகளில் அதிகமாக தென்பட ஆரம்பித்துள்ளதால் அடுத்த வருடத்தில் மட்டும் சுமார் 10,000 சிஎன்ஜி எரிபொருள் நிலையங்கள் நிறுவப்பட இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...

மேலும் வாகனங்களின் மாசு உமிழ்வை அவற்றின் வயது ஏற்றப்படி சரிப்பார்க்கும் வேலையிலும் ஏஆர்ஏஐ (ஆட்டோமோட்டிவ் ரீசார்ஜ் அசோஸியேஷன் ஆப் இந்தியா) என்ற அமைப்பு தீவிரமாக இறங்கியுள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் சாலைகளில் பிஎஸ்6-கான சோதனை கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்களை அதிகளவில் பார்க்கலாம்.

அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...

மாருதி சுசுகி நிறுவனம் எஸ்-பிரெஸ்ஸோ மாடலில் மிகவும் அதிக வெளியிடும் ஆற்றலை கொண்ட வேரியண்ட்டை உருவாக்கும் திட்டத்திலும் உள்ளது. ஏனெனில் எஸ்-பிரெஸ்ஸோவின் இந்த சிஎன்ஜி வேரியண்ட்டில் கொடுக்கப்பட்டுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் பிஎஸ்6 என்ஜின் ஏற்கனவே ஸ்விஃப்ட், டிசைர் மற்றும் பலேனோ மாடல்களில் 82 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் என்கிற வெளியிடும் ஆற்றல் அளவுகளுடன் உள்ளது.

அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...

சிஎன்ஜி வேரியண்ட்டில் கொடுக்கப்பட்டுள்ள 1.2 லிட்டர் என்ஜினுடன் 5 வேக நிலைகளை வழங்கக்கூடிய மேனுவல் ட்ரான்ஸ்மிஷம் இணைக்கப்பட்டுள்ளது. மற்றொரு தேர்வாக 5 வேக நிலைக்கான ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...

மாருதி சுசுகி நிறுவனம் இந்த சிஎன்ஜி வேரியண்ட்டை மகிழ்ச்சியுடன் தயாரித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் மாருதி சுசுகியின் கார்கள் ஏழு வருடங்கள் கழிந்து இந்த மாதத்தில் தான் ஒரு வருட விற்பனை ஒப்பிடுகையில் (2018 அக்டோபர் Vs 2019 அக்டோபர்) 2.3 என்ற விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளன.

Most Read Articles
English summary
2020 Maruti S Presso CNG BS6 spied with emission equipment
Story first published: Monday, November 11, 2019, 20:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X