அடுத்த மாதம் அறிமுகமாகிறது அசத்தலான மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்?

அடுத்த மாதம் மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அடுத்த மாதம் அறிமுகமாகிறது அசத்தலான மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்?

கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த மாருதி கான்செப்ட் ஃப்யூச்சர் எஸ் என்ற கான்செப்ட் மாடல் தயாரிப்பு நிலைக்கு உகந்த மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் எஸ் பிரெஸ்ஸோ என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

அடுத்த மாதம் அறிமுகமாகிறது அசத்தலான மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்?

பட்ஜெட் விலையில் எஸ்யூவி போன்ற ஸ்டைலுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த கார் மாருதி கார் பிரியர்களையும், முதல்முறை கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் மத்தியிலும் அதிக ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், இந்த புதிய கார் அடுத்த மாத இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அடுத்த மாதம் அறிமுகமாகிறது அசத்தலான மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்?

இது மைக்ரோ எஸ்யூவி ரகத்தில் நிலைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளது. ஏனெனில், இது பட்ஜெட் மாடலாக இருந்தாலும் எஸ்யூவி ஸ்டைலில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, ரெனோ க்விட் கார் மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்பட இருக்கிறது.

அடுத்த மாதம் அறிமுகமாகிறது அசத்தலான மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்?

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் சிறிய பானட் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள், வலிமையான வீல் ஆர்ச்சுகள், அலாய் வீல்கள், செவ்வக வடிவிலான டெயில் லைட் க்ளஸ்ட்டர்களுடன் வர இருக்கிறது.

அடுத்த மாதம் அறிமுகமாகிறது அசத்தலான மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்?

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

உட்புறத்தை பொறுத்தவரையில் இதன் ரகத்தில் சிறப்பான இடவசதியை பெற்றிருக்கும் மாடலாக எதிர்பார்க்கலாம். தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரில் இடம்பெற இருக்கிறது.

அடுத்த மாதம் அறிமுகமாகிறது அசத்தலான மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்?

இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ்சின் பிஎஸ்- 6 மாசு உமிழ்வு அம்சத்தை பெற்றிருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வரலாம்.

அடுத்த மாதம் அறிமுகமாகிறது அசத்தலான மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்?

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மாருதி கார். ஹரியானா மாநிலம், ரோதக்கில் உள்ள மாருதியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் அறிமுகமாகிறது அசத்தலான மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்?

ரூ.4 லட்சம் பட்ஜெட்டில் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டிருப்போரை குறிவைத்து இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. ரெனோ க்விட், டாடா டியாகோ உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Source: Gaadiwaadi

More from DriveSpark

Article Published On: Friday, July 5, 2019, 18:46 [IST]
English summary
Maruti Suzuki is planning to launch S presso micro SUV by the last week of August or in early September in the domestic market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+