மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் டீசர் வெளியீடு!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் டீசர் வெளியீடு!

மாருதி நிறுவனத்தின் புதிய மைக்ரோ எஸ்யூவி கார் எஸ் பிரெஸ்ஸோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரூ.3.5 லட்சம் என்ற குறைவான பட்ஜெட்டில் எஸ்யூவி ஸ்டைலில் வரும் மாருதி கார் என்பதால் பெரும் ஆவலைத் தூண்டி இருக்கிறது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் டீசர் வெளியீடு!

இந்த நிலையில், பட்ஜெட் கார் வாங்க காத்திருப்போரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில், மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கார் மைக்ரோ எஸ்யூவி ஸ்டைலில் மிக சிறப்பான டிசைன் அம்ச்ங்களுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை மாருதி எர்டிகா, வேகன் ஆர் ஆகிய கார்கள் உருவாக்கப்பட்ட, மாருதி நிறுவனத்தின் ஹார்ட்டெக் பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட மாருதி ஃப்யூச்சர் எஸ் கான்செப்ட் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் டீசர் வெளியீடு!

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் 1.0 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் டீசர் வெளியீடு!

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல் எஞ்சின் பன்படுத்தப்பட இருக்கிறது. இலகுவான கட்டமைப்புடைய இந்த கார் எரிபொருள் சிக்கனத்திலும் மாருதியின் வாரிசு என்பதை நிரூபிக்கும்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் டீசர் வெளியீடு!

பெட்ரோல் எஞ்சின் மட்டுமின்றி, எல்பிஜி மற்றும் சிஎன்ஜியில் இயங்கும் மாடல்களும் எதிர்காலத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. ஆனால், டீசல் மாடல் கிடையாது என்பது உறுதியான விஷயம்தான்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் டீசர் வெளியீடு!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வர இருக்கிறது. அதேபோன்று, ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பல பாதுகாப்பு வசதிகளையும் இந்த கார் பெற்றிருக்கும்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் டீசர் வெளியீடு!

பண்டிகை காலத்தில் பட்ஜெட் கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு மாருதி எஸ் பிரெஸ்ஸோ மிகச் சிறந்த தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனை சரிவால் சோர்ந்து போயிருக்கும் மாருதியின் விற்பனையிலும் இந்த கார் ஊக்கம் அளிக்கும்.

Article Published On: Saturday, September 21, 2019, 12:37 [IST]
English summary
Maruti Suzuki has released a teaser of the upcoming S-Presso micro SUV in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+