மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் முக்கியத் தகவல்கள் கசிந்தன!

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் சில நீள, அகலம் உள்ளிட்ட சில முக்கியத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவற்றை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் முக்கியத் தகவல்கள் கசிந்தன!

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் தனது சந்தையை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில், எஸ்யூவி ஸ்டைலிலான புதிய பட்ஜெட் கார் மாடலை மாருதி விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த மாருதியின் ஃப்யூச்சர் எஸ் கான்செப்ட் அடிப்படையில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் முக்கியத் தகவல்கள் கசிந்தன!

மாருதி எஸ் பிரெஸ்ஸோ என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய கார் ரெனோ க்விட் காருக்கு நேரடி போட்டியாக நிலைநிறுத்தப்பட இருப்பது தெரிந்த விஷயம்தான். இந்த நிலையில், இந்த காரின் நீள, அகல, உயரம் உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் முக்கியத் தகவல்கள் கசிந்தன!

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் 3,565 மிமீ நீளமும், 1,520 மமிமீ அகலமும், 1,564 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இந்த காரின் வீல் பேஸ் 2,380 மிமீ ஆக உள்ளது. எனினும், ரெனோ க்விட் காரைவிட நீள, அகலத்தில் குறைவாகவும், உயரத்தில் அதிகமாகவும் இருக்கிறது. ஆனால், இரண்டு கார்களுமே க்ரவுண்ட் க்ளிரயன்ஸ் 180 மிமீ ஆக உள்ளது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் முக்கியத் தகவல்கள் கசிந்தன!

ரெனோ க்விட் காரில் 28 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கும் நிலையில், இந்த எஸ் பிரெஸ்ஸோ காரில் 27 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, ரெனோ க்விட் காரில் 155/80 R13 டயர்கள் உள்ள நிலையில், எஸ் பிரெஸ்ஸோ காரில் 165/70 R14 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் முக்கியத் தகவல்கள் கசிந்தன!

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தத எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். இந்த எஞ்சின் 68 எச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது. 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் முக்கியத் தகவல்கள் கசிந்தன!

வரும் 30ந் தேதி புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரூ.3.5 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரையிலான விலைப்பட்டியலில் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் எதிர்பார்க்கப்படுகிறது. ரெனோ க்விட் கார் மட்டுமின்றி, டாடா டியாகோ, டட்சன் கோ உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டி போடும்.

Source: Autocarindia

More from DriveSpark

Article Published On: Thursday, September 5, 2019, 12:19 [IST]
English summary
Ahead of the launch of the Maruti Suzuki S-Presso on September 30, dimensions of the this new SUV styled budget car details have surfaced online.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+