மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன!

இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வர இருக்கும் மாருதியின் புத்தம் புதிய எஸ் பிரெஸ்ஸோ காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்துள்ளன.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன!

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் தனது வலுவான வர்த்தகத்தை தக்க வைக்கும் விதத்தில் புதிய காரை மாருதி சுஸுகி அறிமுகம் செய்ய இருக்கிறது. இது வழக்கமான ஹேட்ச்பேக் ரகத்தில் அல்லாமல், மினி எஸ்யூவி ஸ்டைலிலான மாடலாக வர இருக்கிறது. இதுதான் இந்த கார் மீதான ஆவலுக்கு முக்கிய காரணம்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன!

கடந்த ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த ஃப்யூச்சர் எஸ் கான்செப்ட்டின் அடிப்படையில் இந்த புதிய மாடல் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. எஸ் பிரெஸ்ஸோ என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த புதிய மாடலை வரும் 30ந் தேதி மாருதி கார் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன!

இந்த நிலையில், இந்த புதிய மாடலின் வேரியண்ட் விபரம் கசிந்துள்ளது. புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் வசதிகள் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகளை பொறுத்து 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன!

இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 68 எச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த கார் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது. அத்துடன், இந்த 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன!

மாருதி ஆல்ட்டோ கே10 காரில் பயன்படுத்தப்படும் அதே பெட்ரோல் எஞ்சின்தான். எனவே, இந்த புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 24.07 கிமீ மைலேஜ் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடைமுறையில் சராசரியாக 18 முதல் 20 கிமீ மைலேஜை எதிர்பார்க்கலாம்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன!

இந்த புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டருடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் இடம்பெற்றிருக்கும். இந்த கார் எஸ்யூவி ஸ்டைலுக்குரிய ஆக்சஸெரீகளுடன் வர இருக்கிறது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன!

புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் ரூ.3.5 லட்சம் முதலான ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மிக குறைவான பட்ஜெட்டில் எஸ்யூவி ஸ்டைலில் ரெனோ க்விட் காருக்கு நிகரான போட்டியாளராக நிலைநிறுத்தப்படும்.

Source: Autocarindia

More from DriveSpark

Article Published On: Tuesday, September 3, 2019, 15:11 [IST]
English summary
According to media report, Maruti S Presso will offer in four variants, of which, the higher-spec variants will get the AMT gearbox option.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+