கடந்த நிதியாண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் சாதித்தது இதுதான்...

2018-19 நிதியாண்டு முடிவடைந்து புதிய நிதியாண்டு பிறந்துள்ளது. இந்த சூழலில் கடந்த நிதியாண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் என்ன சாதித்தது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த நிதியாண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் சாதித்தது இதுதான்...

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, 2019ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. கடந்த மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் உள்நாட்டில் 1,47,613 கார்களை விற்பனை செய்துள்ளது. அதே சமயம் 10,463 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. 2018ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் உள்நாட்டு விற்பனை 0.7 சதவீதமும், ஏற்றுமதி 12.9 சதவீதமும் சரிவடைந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் சாதித்தது இதுதான்...

2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்த மொத்த கார்களின் எண்ணிக்கை (உள்நாட்டு விற்பனை+ஏற்றுமதி) 1,58,076. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1,60,598ஆக இருந்தது. இது 1.6 சதவீத வீழ்ச்சியாகும். முன்னதாக 2018-19 நிதியாண்டு நேற்றுடன் (மார்ச் 31) முடிவடைந்து புதிய 2019-20 நிதியாண்டு பிறந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் சாதித்தது இதுதான்...

எனவே மார்ச் மாத விற்பனை நிலவரத்துடன் சேர்த்து, 2018-19ம் நிதியாண்டிற்கான விற்பனை நிலவரங்களையும் மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி 2018-19ம் நிதியாண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் உள்நாட்டில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 1,753,700. ஏற்றுமதி செய்த கார்களின் எண்ணிக்கை 1,08,749.

கடந்த நிதியாண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் சாதித்தது இதுதான்...

கடந்த 2018-18ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், உள்நாட்டு விற்பனை 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் ஏற்றுமதியானது 13.7 சதவீதம் என்கிற அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் கடந்த 2018-19ம் நிதியாண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் 1,862,449 கார்களை (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2017-18ம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கையானது 1,779,574 ஆக மட்டுமே இருந்தது. இது 4.7 சதவீத வளர்ச்சியாகும்.

கடந்த நிதியாண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் சாதித்தது இதுதான்...

மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிட்டுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்டின் அடிப்படையில் பார்த்தால், அதன் மினி செக்மெண்ட் மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருப்பது தெரியவருகிறது. புதிய வேகன் ஆர் காரின் விற்பனையை மாருதி சுஸுகி நிறுவனம் மினி செக்மெண்ட்டில் கணக்கிடாததே இதற்கு காரணம் அதற்கு மாறாக புதிய வேகன் ஆர் காரானது தற்போது காம்பேக்ட் செக்மெண்ட்டிற்கு ப்ரமோட் செய்யப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் சாதித்தது இதுதான்...

ஏற்கனவே மினி செக்மெண்ட்டில் இக்னிஸ், செலிரியோ, ஸ்விப்ட், பலினோ, டிசையர் ஆகிய கார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மினி செக்மெண்ட்டில் ஆல்டோ மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஆனால் புதிய வேகன் ஆர் காரை சேர்த்திருப்பதன் காரணமாக காம்பேக்ட் செக்மெண்ட் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் காம்பேக் செக்மெண்ட்டில் விற்பனை நிலவரம் 82,532. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 68,885 ஆக மட்டுமே இருந்தது. இது 19.8 சதவீத வளர்ச்சியாகும்.

கடந்த நிதியாண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் சாதித்தது இதுதான்...

அதே நேரத்தில் ஆல்டோ செக்மெண்ட்டின் விற்பனை எண்ணிக்கை 37,511 யூனிட்களில் இருந்து வெறும் 16,826 யூனிட்களாக சரிவடைந்துள்ளது. இது 55 சதவீத வீழ்ச்சியாகும். இந்த சூழலில் புதிய தலைமுறை ஆல்டோ காரை களமிறக்கும் பணிகளில் மாருதி சுஸுகி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்த கார் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அனேகமாக வரும் அக்டோபர் மாதம் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஆல்டோ 800 மற்றும் ஆல்டோ கே10 கார்களுக்கு இது மாற்றாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, April 1, 2019, 18:48 [IST]
English summary
Maruti Suzuki Sales Report For March 2019. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+