ஸ்மார்ட்ஃபோனை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாக பயன்படுத்தும் வசதி: மாருதி அறிமுகம்!
ஸ்மார்ட்ஃபோனை இன்ஃபோடயின்மென்ட் சிஸ்டமாக புதிய வசதியை மாருதி கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

போது விற்பனைக்கு வரும் பட்ஜெட் கார்கள் முதல் சொகுசு கார்கள் வரை தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் என்பது இன்றியமையாத அம்சமாக மாறிவிட்டது. மியூசிக் சிஸ்டம், நேவிகேஷன் மற்றும் கார் இயக்கம் பற்றிய தகவல்களை ஒருங்கிணைந்து தரும் இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் தொடுதிரை வசதியுடன் வருவதால் இயக்குவதற்கும் எளிதாக இருக்கின்றது.

எனினும், அதிக சிறப்பம்சங்கள் கொண்ட விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் மட்டுமே தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதனால், ஆரம்ப மற்றும் நடுத்தர வேரியண்ட்டுகளை வாங்குவோர் தொடுதிரை அல்லாத இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை மட்டுமே பெற முடிகிறது.

சிலர் வெளியில் வாங்கி பொருத்துகின்றனர். ஆனால், அதில் வாரண்டி உள்ளிட்ட பிரச்னைகளை மனதில் வைத்து சிலர் தவிர்த்து விடுகின்றனர்.இதுபோன்று தொடுதிரை இல்லாத இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் விற்பனை செய்யப்படும் கார்களுக்காக சிறப்பு மொபைல் செயலியை மாருதி கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ டாக் ஆப் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த செயலியை மொபைல்போனில் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் காரில் இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் டெக் யூனிட்டுடன் இதனை புளூடூத் அல்லது ஆக்ஸ் போர்ட் கேபிள் வழியாக இணைத்துக் கொள்ள முடியும்.

மியூசிக் சிஸ்டம், நேவிகேஷன் வசதிகள் மட்டுமின்றி, காரில் குறைந்த எரிபொருள் அளவு எச்சரிக்கை, மைலேஜ், சீட் பெல்ட் ரிமைன்டர், கதவுகள் திறந்திருப்பது குறித்த எச்சரிக்கை ஆகியவற்றையும் இந்த செயலி மூலமாக பெற முடியும்.

இந்த ஸ்மார்ட்ஃபோன் டாக் ஆப்பை ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.. ஆனால், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய செயலிகளை இந்த ஸ்மார்ட்போன் டாக் ஆப் சப்போர்ட் செய்யாது.

தற்போது புதிய மாருதி வேகன் ஆர் காருக்கு மட்டுமே இந்த ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வரும் மாதங்களில் மாருதியின் பிற மாடல்களுக்கும் இந்த ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை சப்போர்ட் செய்யும் வசதி அளிக்கப்படும் என்று தெரிகிறது.

ந்த ஸ்மார்ட்ஃபோன் டாக் ஆப்பை பதிவிறக்கம் செய்த பின்னர், வாடிக்கையாளர்கள் தங்களது காரின் வின் நம்பரை கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர், இதனை தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போல பயன்படுத்தும் வாய்ப்பை பெறலாம்.


Click it and Unblock the Notifications







