வாடிக்கையாளர்களுக்கு எளிய கடன் வசதி... ஃபெடரல் வங்கியுடன் கைகோர்த்தது மாருதி!

வாடிக்கையாளர்களுக்கான சேவையில் மாருதி நிறுவனம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், வாடிக்கையாளர்களுக்கு எளிய முறையில் விரைவான கடன் வசதியை அளிக்கும் விதத்தில் ஃபெடரல் வங்கியுடன் மாருதி கார் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி கார்களுக்கு ஃபெடரல் வங்கி மூலமாக எளிய கடன் வசதி!

கேரளாவை சேர்ந்த ஃபெடரல் வங்கி தென் இந்தியாவின் முக்கிய நகரங்களில் வங்கி சேவைகளை அளித்து வருகிறது. இந்தநிலையில், டீலர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் எளிய முறையில் கடன் திட்டத்தை வழங்கும் வகையில் ஃபெடரல் வங்கியுடன் கைகோர்ந்துள்ளது மாருதி கார் நிறுவனம்.

மாருதி கார்களுக்கு ஃபெடரல் வங்கி மூலமாக எளிய கடன் வசதி!

கடந்த ஆகஸ்ட் மாதம் டீலர்களுக்கு கடன் வழங்குவதற்கு ஃபெடரல் வங்கியுடன் மாருதி கார் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இதன்மூலமாக, டீலர்கள் எளிய முறையில் கார்களை மாருதி நிறுவனத்திடமிருந்து பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.

மாருதி கார்களுக்கு ஃபெடரல் வங்கி மூலமாக எளிய கடன் வசதி!

இந்த நிலையில், தற்போது மாருதி கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஃபெடரல் வங்கியிலிருந்து எளிய முறையில் கடன் பெறும் திட்டத்திற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் மிக விரைவான கடன் திட்டத்தை மாருதி கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

மாருதி கார்களுக்கு ஃபெடரல் வங்கி மூலமாக எளிய கடன் வசதி!

அத்துடன், நடைமுறைகளும் மிக எளிதாக இருப்பதுடன், கால தாமதங்களும் தவிர்க்கப்படும். மாதத் தவணை மற்றும் வட்டி வீதங்களில் சிறப்பு திட்டங்களை மாருதி கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

மாருதி கார்களுக்கு ஃபெடரல் வங்கி மூலமாக எளிய கடன் வசதி!

இதுகுறித்து மாருதி கார் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஷசாங்க் ஸ்ரீவத்சவா கூறுகையில்,"ஃபெடரல் வங்கியுடன் செய்துள்ள இந்த ஒப்பந்தம் டீலர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கு அதிக பயன் தரும் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

மாருதி கார்களுக்கு ஃபெடரல் வங்கி மூலமாக எளிய கடன் வசதி!

கேரளா மற்றும் அண்டை மாநிலங்களில் ஃபெடரல் வங்கி சிறப்பான சேவையையும், அதிக சேவை மையங்களையும் பெற்றிருப்பதன் மூலமாக எங்களது வாடிக்கையாளர் வட்டத்தை அதிகரிக்க வாய்ப்பு கிடைக்கும். எமது நிறுவனமும், ஃபெடரல் வங்கியும் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவோம்," என்று தெரிவித்தார்.

மாருதி கார்களுக்கு ஃபெடரல் வங்கி மூலமாக எளிய கடன் வசதி!

இதேபோன்று, ஃபெடரல் வங்கியின் நிர்வாக இயக்குனர் ஷ்யாம் சீனிவாசன் கூறுகையில்," இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, மாருதி டீலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த கடன் வசதி தீர்வுகளை அளிக்க இருக்கிறோம். மாருதியின் சந்தை வலுப்படுவதற்கு எங்களது இந்த கடன் வசதி திட்டம் முக்கியமானதாக இருக்கும்," என்று தெரிவித்தார்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 14, 2019, 17:13 [IST]
English summary
Maruti Suzuki has joined hands with Federal Bank to provide dealer finance and customized auto retail financing solutions to customers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+