பெங்களூர் தொழிற்சாலையில் மாருதி சுஸுகி காரை உற்பத்தி செய்கிறது டொயோட்டா... காரணம் இதுதான்...

பெங்களூரில் உள்ள டொயோட்டா நிறுவனத்தின் தொழிற்சாலையில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெங்களூர் தொழிற்சாலையில் மாருதி சுஸுகி காரை உற்பத்தி செய்கிறது டொயோட்டா... காரணம் இதுதான்...

மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய இரண்டு முன்னணி கார் நிறுவனங்களும் கூட்டணி அமைத்து செயல்படுவதற்கான பணிகளை கடந்த 2017ம் ஆண்டு வரை செய்து வந்தன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மாருதி சுஸுகி - டொயோட்டா கூட்டணி, இறுதியாக கடந்த 2018ம் ஆண்டு உறுதியானது. கார்களை இணைந்து தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை, மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் இந்தியா ஆகிய இரண்டு நிறுவனங்களும், கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்படுத்தி கொண்டன.

பெங்களூர் தொழிற்சாலையில் மாருதி சுஸுகி காரை உற்பத்தி செய்கிறது டொயோட்டா... காரணம் இதுதான்...

மாருதி சுஸுகி பலேனோதான் இவ்விரு நிறுவனங்களின் கூட்டணியில் விற்பனைக்கு வரவுள்ள முதல் கார் என்பது குறிப்பிடத்தக்கது. மாருதி சுஸுகி பலேனோ காரானது, டொயோட்டா பிராண்டில் க்ளான்ஸா என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. டொயோட்டா க்ளான்ஸா கார் இந்திய மார்க்கெட்டில் விரைவில் களமிறக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர மாருதி சுஸுகி நிறுவனத்தின் சியாஸ், எர்டிகா மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய கார்களும் டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

பெங்களூர் தொழிற்சாலையில் மாருதி சுஸுகி காரை உற்பத்தி செய்கிறது டொயோட்டா... காரணம் இதுதான்...

இதில், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரானது காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். அதிகம் விற்பனையாகும் மாருதி சுஸுகி நிறுவன கார்களில் ஒன்றாகவும், இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தும் கார்களில் ஒன்றாகவும் விட்டாரா பிரெஸ்ஸா திகழ்கிறது. ஆனால் இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் டொயோட்டா நிறுவனத்திற்கு இடமில்லாத நிலை காணப்படுகிறது. எனவே விட்டாரா பிரெஸ்ஸா கார் டொயோட்டா பிராண்டில் வெளிவந்தால், அந்நிறுவனத்திற்கு பயன் அளிப்பதாக அமையும்.

பெங்களூர் தொழிற்சாலையில் மாருதி சுஸுகி காரை உற்பத்தி செய்கிறது டொயோட்டா... காரணம் இதுதான்...

இப்படிப்பட்ட சூழலில், விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி கார்கள், பெங்களூர் அருகே உள்ள பிடாடி என்னும் இடத்தில் இயங்கி வரும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா கூறுகையில், ''டொயோட்டா நிறுவனத்தின் பெங்களூர் தொழிற்சாலையில், உதிரியாக இடவசதி உள்ளது. விட்டாரா பிரெஸ்ஸா கார்களை உற்பத்தி செய்ய நாங்கள் அதனை பயன்படுத்தி கொள்ள உள்ளோம்'' என்றார். இதுகுறித்து கார்அண்ட்பைக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பெங்களூர் தொழிற்சாலையில் மாருதி சுஸுகி காரை உற்பத்தி செய்கிறது டொயோட்டா... காரணம் இதுதான்...

பெங்களூரின் புறநகர் பகுதியான பிடாடி எனும் இடத்தில் டொயோட்டா நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. ஆனால் அந்த தொழிற்சாலையின் முழு உற்பத்தி திறனையும் டொயோட்டா நிறுவனம் பயன்படுத்தி கொள்ளவில்லை. இந்த தொழிற்சாலை பேஸ் I (Phase I) கடந்த 1997ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது. ஆண்டுக்கு 1 லட்சம் கார்கள் என்ற ரீதியில் இந்த பேஸ் I முழு வீச்சில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இங்கு டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பெங்களூர் தொழிற்சாலையில் மாருதி சுஸுகி காரை உற்பத்தி செய்கிறது டொயோட்டா... காரணம் இதுதான்...

அதே சமயம் இந்த தொழிற்சாலையின் பேஸ் II கடந்த 2010ம் ஆண்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஒரு ஆண்டுக்கு 2,10,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் இதற்கு உண்டு. ஆனால் இதன் முழு உற்பத்தி திறனையும் டொயோட்டா நிறுவனம் பயன்படுத்தி கொள்ளவில்லை. எனவேதான் விட்டாரா பிரெஸ்ஸா கார்களின் உற்பத்தியை அங்கு மாற்றி விட மாருதி சுஸுகி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Article Published On: Friday, April 26, 2019, 17:35 [IST]
English summary
Toyota To Manufacture The Vitara Brezza For Maruti Suzuki At Bangalore Plant. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+