நடமாடும் நெக்ஸா கார் ஷோரூம் சேவையை அறிமுகம் செய்தது மாருதி சுஸுகி!

விற்பனை வீழ்ச்சியை மனதில் வைத்து நடமாடும் நெக்ஸா கார் ஷோரூமை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

நடமாடும் நெக்ஸா கார் ஷோரூம் சேவையை அறிமுகம் செய்தது மாருதி சுஸுகி!

நாட்டின் மிகப்பெரிய கார் விற்பனை நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்குகிறது. தனது சாதாரண ரக கார்களை அரேனா என்ற ஷோரூம்கள் வாயிலாகவும், பிரிமீயம் ரக கார்களை நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாகவும் விற்பனை செய்து வருகிறது.

நடமாடும் நெக்ஸா கார் ஷோரூம் சேவையை அறிமுகம் செய்தது மாருதி சுஸுகி!

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் விற்பனை மிக கடுமையாக சரிந்து வருகிறது. இதனை மனதில் வைத்து சிறிய நகரங்களிலும் தனது வரத்தகத்தை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

நடமாடும் நெக்ஸா கார் ஷோரூம் சேவையை அறிமுகம் செய்தது மாருதி சுஸுகி!

இதற்காக மூன்றாம் நிலை மற்றும் சிறிய நகரங்களில் குறைவான முதலீட்டிலான நெக்ஸா ஷோரூம்களை திறக்க முடிவு செய்துள்ளது. அத்துடன், நடமாடும் ஷோரூம்கள் வாயிலாகவும் விற்பனையில் ஏற்பட்டுள்ள தொய்வை சரிகட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

நடமாடும் நெக்ஸா கார் ஷோரூம் சேவையை அறிமுகம் செய்தது மாருதி சுஸுகி!

அதன் ஒருபகுதியாக நடமாடும் நெக்ஸா ஷோரூம்களை மாருதி அறிமுகம் செய்துள்ளது. மாருதி நெக்ஸா டெர்மினல் என்ற பெயரில் இந்த நடமாடும் கார் ஷோரூம் குறிப்பிடப்படுகிறது. நெக்ஸா ஷோரூம்கள் இல்லாத வர்த்தக வாய்ப்புள்ள சிறிய நகரங்களில் இந்த நடமாடும் ஷோரூம் செல்ல இருக்கிறது.

நடமாடும் நெக்ஸா கார் ஷோரூம் சேவையை அறிமுகம் செய்தது மாருதி சுஸுகி!

பிரம்மாண்டமான வாகனத்தில் இந்த ஷோரூம் கட்டமைக்கப்பட்டுள்ளது. மாருதி நெக்ஸா டெர்மினல் ஷோரூம்களில் பலேனோ, இக்னிஸ், எஸ் க்ராஸ் மற்றும் சியாஸ் கார்களை வாங்குவதற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

நடமாடும் நெக்ஸா கார் ஷோரூம் சேவையை அறிமுகம் செய்தது மாருதி சுஸுகி!

ஏனெனில், நெக்ஸா பிரிமீயம் கார் ஷோரூம்கள் மெட்ரோ மற்றும் சில இரண்டாம் நிலை நகரங்களில் மட்டுமே செயல்படுகின்றன. எனவே, இந்த நடமாடும் ஷோரூம்கள் மூலமாக புதிய நகரங்களை இணைக்கும் முயற்சியில் மாருதி சுஸுகி ஈடுபட்டுள்ளது.

நடமாடும் நெக்ஸா கார் ஷோரூம் சேவையை அறிமுகம் செய்தது மாருதி சுஸுகி!

முழுமையான ஷோரூம்களை அமைப்பதைவிட இந்த நடமாடும் ஷோரூம்களுக்கான முதலீடு மிக குறைவாக இருப்பதுடன், வர்த்தக வாய்ப்புள்ள சிறிய நகரங்கள் மற்றும் ஊர்களை எளிதாக இணைக்கும் வாய்ப்பை இந்த நெக்ஸா டெர்மினல்கள் வழங்கும் என்று மாருதி நம்புகிறது.

நடமாடும் நெக்ஸா கார் ஷோரூம் சேவையை அறிமுகம் செய்தது மாருதி சுஸுகி!

மேலும், புதிய நகரங்களை இணைப்பதன் மூலமாக விற்பனையில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் இருக்கும் என்று மாருதி கார் நிறுவனம் கருதுகிறது. இந்த மொபைல்ஷோரூம்களில் வழக்கமான அனைத்து சேவைகளையும் வழங்குவதற்கான கட்டமைப்பு வசதிகளுடன் இந்த ஷோரூம்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 5, 2019, 11:54 [IST]
English summary
Maruti Suzuki has unveiled mobile Nexa terminal in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+