மாருதி விட்டாரா எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம்!

விரைவில் வரும் கியா செல்டோஸ், டாடா ஹாரியர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக வர இருக்கும் புதிய மாருதி விட்டாரா எஸ்யூவி இந்தியாவில் தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

மாருதி விட்டாரா எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம்!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் தொடர்ந்து பல புதிய மாடல்கள் களமிறக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாருதி நிறுவனம் ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மிட்சைஸ் எஸ்யூவி கார்களுடன் போட்டி போடக்கூடிய ரகத்தில் விட்டாரா எஸ்யூவியை விரைவில் களமிறக்க உள்ளது.

மாருதி விட்டாரா எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம்!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியைவிட இந்த புதிய விட்டாரா எஸ்யூவி அதிக பிரிமீயம் அம்சங்களுடன் விலை உயர்ந்த மாடலாக வர இருக்கிறது. மாருதி நிறுவனத்திடம் இருந்து வரும் இந்த புதிய எஸ்யூவி மாடல் வடிவமைப்பில் இந்தியர்களை கவரும் வகையில் இருக்கும்.

மாருதி விட்டாரா எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம்!

மாருதி விட்டாரா எஸ்யூவி 4,175 மிமீ நீளமும், 1,775 மிமீ அகலமும், 1,610 மிமீ உயரமும் கொண்டது. இந்த எஸ்யூவி 2,500 மிமீ வீல் பேஸ் கொண்டது. 185 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றுள்ளது. இது 5 சீட்டர் மாடலாக மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

மாருதி விட்டாரா எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம்!

புதிய மாருதி விட்டாரா எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பூஸ்டர்ஜெட் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 111 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதுதவிர, 1.4 லிட்டர் பூஸ்டர்ஜெட் எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

மாருதி விட்டாரா எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

மற்றொரு 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 117 பிஎஸ் பவரையும், 156 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலில் 1.6 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுக்கு கூட வாய்ப்புள்ளது.

மாருதி விட்டாரா எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம்!

ஆனால், டீசல் கார் உற்பத்தியை நிறுத்தப்போவதாக மாருதி ஏற்கனவே தெரிவித்துள்ளதால் சந்தேகம் நிலவுகிறது. மொத்தத்தில் எஞ்சின் தேர்வு பற்றி தெளிவான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. எனினும், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக வர இருப்பதாக தற்போது கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.

மாருதி விட்டாரா எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இந்தியாவில் சாலை சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் மாருதி விட்டாரா எஸ்யூவியானது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலாக தெரிய வந்துள்ளது. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோ், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், டியூவல் சென்சார் பிரேக் சப்போர்ட், பனோரமிக் சன்ரூஃப், கீ லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

மாருதி விட்டாரா எஸ்யூவி இந்தியாவில் சோதனை ஓட்டம்!

மாருதி விட்டாரா எஸ்யூவியில் எல்இடி பகல்நேர விளக்குகள், 17 அங்குல அலாய் வீல்கள், வட்ட வடிவிலான பனி விளக்குகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. டேஷ்போர்டு சிறப்பாக அமைந்துள்ளதுடன், செங்குத்தான திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

Source: Gaadiwaadi

Article Published On: Thursday, July 11, 2019, 18:27 [IST]
English summary
The Maruti Suzuki Vitara has been spotted once again in India. The premium SUV from Maruti Suzuki had been spotted testing earlier this year and it confirmed rumours of the SUV coming to the Indian market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+