வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... மாருதி வெளியிட்ட தகவலால் ஏமாற்றம்!

எலெக்ட்ரிக் வேகன் ஆர் கார் அறிமுகம் குறித்து மாருதி தலைவர் ஆர்.சி.பர்கவா தெரிவித்துள்ள தகவல் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... மாருதி வெளியிட்ட தகவலால் ஏமாற்றம்!

எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகியவை ஏற்கனவே மின்சார கார்களை சந்தைக்கு கொண்டு வந்துவிட்டன. இதில், டாடா டிகோர் தனிநபர் பயன்பாட்டிற்கும் கிடைக்கிறது. நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் கூட கடந்த ஜூலையில் முதல் மின்சார மாடலாக கோனா எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துவிட்டது.

வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... மாருதி வெளியிட்ட தகவலால் ஏமாற்றம்!

இதில், தனிநபர் பயன்பாட்டு சந்தையை குறிவைத்து களமிறக்கப்பட்ட ஹூண்டாய் கோனா கார் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி வழக்கம்போல் பட்ஜெட் ரகத்தில் வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் மாடலை திட்டமிட்டுள்ளது.

வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... மாருதி வெளியிட்ட தகவலால் ஏமாற்றம்!

சில மாதங்களுக்கு முன்பு வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரின் சாலை சோதனை ஓட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைத்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலமாக வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை மாருதி சுஸுகி பொது பார்வைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... மாருதி வெளியிட்ட தகவலால் ஏமாற்றம்!

ஆனால், மாறாக வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் அறிமுகத்தில் மாருதி சுஸுகி புதிய முடிவை எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மாருதி சுஸுகி தலைவர் ஆர்.சி.பர்கவா பகிர்ந்துகொண்டுள்ள தகவலில், வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படாது. அடுத்த ஆண்டு இரண்டாவது கட்ட சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளது.

வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... மாருதி வெளியிட்ட தகவலால் ஏமாற்றம்!

நடைமுறை பயன்பாட்டுக்கு திருப்திகரமாக அமைந்தால் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்படும். அப்படி இருந்தாலும், அடுத்த ஆண்டு தனிநபர் பயன்பாட்டு சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படாது. மேலும், பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்களுக்குத்தான் அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... மாருதி வெளியிட்ட தகவலால் ஏமாற்றம்!

இது தனிநபர் வாடிக்கையாளர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், சந்தையிலேயே மிக குறைவான விலை மாடலாக மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் எதிர்பார்க்கப்பட்டது. வழக்கம்போல் எலெக்ட்ரிக் கார்களுக்கான குறைவான விலை பட்ஜெட் மார்க்கெட்டிலும் மாருதி சுஸுகி புதிய வேகன் ஆர் எலெக்ட்ரிக் மூலமாக குறிப்பிடத்தக்க அளவு சந்தையை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... மாருதி வெளியிட்ட தகவலால் ஏமாற்றம்!

இந்த நிலையில், அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படாது. அப்படி அறிமுகம் செய்யப்பட்டாலும், டாக்சி மார்க்கெட்டை குறிவைத்தே விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்ற ரீதியில் பர்கவா கூறி இருக்கிறார். எனவே, வரும் 2021ம் ஆண்டுவாக்கில்தான் புதிய வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் தனிநபர் சந்தைக்காக விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

ஹூண்டாய் கோனா உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்கள் கைக்கு எட்டாத விலையில் இருக்கும் நிலையில், மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால், இப்போதைக்கு மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கைக்கு கிடைக்காது என்றாலும், சற்றே கூடுதல் பட்ஜெட்டில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வர இருக்கிறு. அதாவது, இந்த கார் மிக சவாலான விலையில் வர இருப்பது சற்று ஆறுதல் தரும் விஷயமாக இருக்கிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

தற்போது இந்த மாடலானது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் அதீத செயல்திறன் மிகச் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், டாடா நிறுவனம் இந்த காரை பிரபலப்படுத்துவதற்கான முயற்சிகளிலும் இறங்கி இருக்கிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

அப்போது இந்த காரின் சிறப்பம்சங்கள் குறித்த சில தகவல்களும் வெளியாகி இருக்கின்றன. அதன்படி, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் ஹாரியர் எஸ்யூவியில் இருப்பது போன்ற அனலாக் ஸ்பீடோமீட்டர் மற்றும் பெரிய மல்டிபங்ஷன் திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற இருப்பது தெரிகிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

அதேபோன்று, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் ஸிப்ட்ரான் என்ற நவீன பேட்டரி, மின்மோட்டார் அடங்கிய தொகுப்பு பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த தொகுப்பானது ஒருங்கிணைந்த முறையில் காருக்கு அதீத செயல்திறனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்காக விசேஷ மொபைல் செயலியும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த செயலி மூலமாக காரின் பேட்டரியில் இருக்கும் சார்ஜ் அளவு, எவ்வளவு தூரம் பயணிக்கலாம் உள்ளிட்ட பல முக்கியத் தகவல்களை பெற முடியும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் லிக்யூடு கூல்டு லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த பேட்டரியானது 8 ஆண்டுகள் வரை ஸ்டான்டர்டு வாரண்டியுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

புதிய டாடா நெக்ஸான் காரின் தோற்றத்தில் பெரிய அளவிலான மாறுதல்கள் இருக்காது. எலெக்ட்ரிக் காருக்கான பேட்ஜ் உள்ளிட்ட சில கூடுதல் விஷயங்களுடன் இந்த புதிய நெக்ஸான் எலெக்ட்ரிக் வர இருக்கிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் இந்த புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரூ.15 லட்சம் முதல் ரூ.17 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு வருகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் வர இருக்கும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

சரி, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி மட்டும்தான் சாய்ஸா என்பவர்களுக்கு, மற்றுமொரு அருமையான சாய்ஸும் வர இருக்கிறது. இதே ரகத்திலான மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரும் அடுத்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வர இருக்கிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

ஸ்டாண்டர்டு ரேஞ்ச் (Standard Range) மற்றும் லாங் ரேஞ்ச் (Long Range) என்ற 2 வெர்ஷன்களில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரவுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், எலெக்ட்ரிக் வாகனம் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதே 'ரேஞ்ச்' என குறிப்பிடப்படுகிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் அந்த குறையை தகர்த்து எறியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் லாங் ரேஞ்ச் வெர்ஷனில் ஒரு முறை சார்ஜ் செய்தால், 350-400 கிலோ மீட்டர்கள் வரை மிக எளிதாக பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

அதே நேரத்தில் எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரின் ஸ்டாண்டர்டு வெர்ஷனில் ஒரு முறை சார்ஜ் செய்தால், 200 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரின் பேட்டரிக்காக மஹிந்திரா மற்றும் எல்ஜி செம் (LG Chem) ஆகிய நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

இந்திய கால நிலைகள் மற்றும் சாலைகளுக்கு ஏற்ற வகையில் இந்த பேட்டரி இருக்கும். நிக்கல் - மாங்கனீசு - கோபால்ட் அடிப்படையிலான லித்தியம் இயான் பேட்டரிகளையும் இந்த கூட்டணி உருவாக்கவுள்ளது. இந்த பேட்டரிகள், ஆற்றல் அடர்த்தி (Energy Density) என்ற விஷயத்தில் சிறப்பாக செயல்படக்கூடியவை. இந்த பேட்டரியானது, அளவில் கச்சிதமாக இருக்கும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

இருந்தபோதும் எலெக்ட்ரிக் கார்களுக்கு உரிய நியாயமான விலைதான் நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அனேகமாக எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரின் விலை 20 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Maruti Suzuki has revealed that the Wagon R electric car will not be launched in India by 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X