இன்று அறிமுகமாகிறது மாருதி சுஸுகி எக்ஸ்எல்6: நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் மாருதி சுஸுகி நிறுவனத்தின், எக்ஸ்எல்-6 எம்பிவி ரக கார் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கார்குறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

இன்று அறிமுகமாகிறது மாருதி சுஸுகி எக்ஸ்எல்6: நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

மாருதி சுஸுகி நிறுவனம், அதன் புத்தம் புதிய எக்ஸ்எல்6 காரை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த கார்கள் நெக்ஸா ஷோரூம் வழியாக காட்சியளிக்க உள்ளது. ஆகையால், இந்த ஷோரூம்களில் காட்சியளிக்க முதல் எம்பிவி ரக கார் என்ற பெருமையை இந்த புதிய எக்ஸ்எல்-6 சீட்டர் பெற இருக்கின்றது.

இன்று அறிமுகமாகிறது மாருதி சுஸுகி எக்ஸ்எல்6: நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

எக்ஸ்எல்-6 கார், ஜெட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய இரு விதமான பெட்ரோல் வேரியண்டுகளில் கிடைக்க உள்ளது. இந்த காருக்கான புக்கிங் ரூ. 11 ஆயிரம் என்ற முன்தொகையில் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

அதேசமயம், இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருகின்றது. அதற்கேற்ப வகையில், இது அதிக இடவசதியைக் கொண்ட மாடலாக களமிறங்க உள்ளது. இதன் நீளம் 4,445 மிமீட்டராகவும், அகலம் 1,775 மிமீட்டராகவும், உயரம் 1,700 மிமீட்டராகவும் உள்ளது.

இன்று அறிமுகமாகிறது மாருதி சுஸுகி எக்ஸ்எல்6: நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

இந்த பரப்பளவால் எக்ஸ்எல் காரின் பூட் ஸ்பேஸ் 209 லிட்டராக இறுக்கின்றது. பின் இருக்கையை மடித்து வைத்துக்கொள்வதன்மூலம் இதனை அதிகரித்துக் கொள்ள முடியும். இதே இட வசதிதான் எர்டிகா காரிலும் இருக்கின்றது.

புதிய எக்ஸ்எல்6 கார், எர்டிகா மாடலை தழுவி உருவாக்கப்பட்டாலும், சில தனித்துவமான டிசைன் தாத்பரியங்களை அது பெற்றிருக்கின்றது.

இன்று அறிமுகமாகிறது மாருதி சுஸுகி எக்ஸ்எல்6: நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

அந்தவகையில், பிரத்யேகமான கிளாடிங் அமைப்பை காரின் அனைத்து பகுதிக்கும் மாருதி சுஸுகி வழங்கியுள்ளது. இத்துடன், பிளாக்கட் அவுட் மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிசைன் அதன் முகப்பு பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, அலாய் வீல், மல்டி ரெஃப்ளெக்டர், எல்இடி மின் விளக்கு மற்றும் டிஆர்எல்கள் உள்ளிடவற்றிற்கும் புது டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று அறிமுகமாகிறது மாருதி சுஸுகி எக்ஸ்எல்6: நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

இதைத்தொடர்ந்து, இன்டீரியரிலும் கணிசமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில், புதிய டார்க் நிறம் கொண்ட டேஷ்போர்டு கொடுக்கப்பட்டுள்ளது. இதில், வெள்ளி நிறத்திலான அக்செண்டுகளும் காணப்படுகின்றது.

இன்று அறிமுகமாகிறது மாருதி சுஸுகி எக்ஸ்எல்6: நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

காஸ்மெடிக்ஸ் மட்டுமின்றி, சொகுசு வசதியையும் சிறப்பானதாக மாருதி சுஸுகி நிறுவனம் செய்துள்ளது. அந்தவகையில், ஆறு இருக்கைகளைக் கொண்ட இந்த காரில் இரண்டாவது வரிசைக்கு கேப்டன் இருக்கை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் அனைத்து இருக்கைகளுக்கும் மிருதுவான லெதர் போர்வை கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று அறிமுகமாகிறது மாருதி சுஸுகி எக்ஸ்எல்6: நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

இந்த எக்ஸ்எல் காரில் கே15பி 1.5 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் 4-சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 104.69 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

இன்று அறிமுகமாகிறது மாருதி சுஸுகி எக்ஸ்எல்6: நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

இத்துடன், இதில் ட்யூவல் பேட்டரி மைல்ட்-ஹைபிரிட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வருத்தத்தமளிக்கும் விதமாக இந்த எக்ஸ்எல்6 மாடலில் டீசல் ஆப்ஷன் இல்லை என்பது வருத்தமளிக்கும் வகையில் உள்ளது.

இன்று அறிமுகமாகிறது மாருதி சுஸுகி எக்ஸ்எல்6: நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

மேலும், அப்கமிங் எக்ஸ்எல்6 காரில் மதிப்புகூட்ட அம்சமாக 7 இன்சிலான ஸ்மார்ட் ப்ளே ஸ்டுடியோ டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், பனி விளக்கு, எல்இடி ஹெட்லேம்ப், டிஆர்எல்கள், ரூஃப் ரெயில்கள் மற்றும் கான்ட்ராஸ்ட் ஓஆர்விஎம்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றது.

இன்று அறிமுகமாகிறது மாருதி சுஸுகி எக்ஸ்எல்6: நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

மிக முக்கியமாக, இவற்றுடன் பாதுகாப்பு வசதியாக ட்யூவல் ஏர்பேக் மற்றும் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி இதில் உள்ளது.

இன்று அறிமுகமாகிறது மாருதி சுஸுகி எக்ஸ்எல்6: நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

இதில், உயர் ரக மாடலாக களமிறங்கும் ஆல்ஃபா ட்ரிம்மில் லெதர் இருக்கை, எலக்ட்ரிக்கலாக ஃபோல்ட் செய்யும் ஓஆர்விஎம்கள், பிளாக் அலாய் வீல்கள், ஆட்டோ ஹெட்லேம்ப் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற இருக்கின்றது.

இத்துடன், ஆட்டோமேட்டிக் வேரியண்டுகளில் இஎஸ்பி மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது.

இன்று அறிமுகமாகிறது மாருதி சுஸுகி எக்ஸ்எல்6: நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

மாருதி சுஸுகியின் இந்த கார் ரெனால்ட் லாட்ஜி மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்க உள்ளது. ஆகையால், இந்த கார் ரூ.9 லட்சம் முதல் 11.5 லட்சம் ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வரலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 20, 2019, 16:41 [IST]
English summary
Maruti Suzuki XL6 Launching Tomorrow: All You Need To Know. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+