மாருதி ஸ்விஃப்ட், பலேனோ, பிரெஸ்ஸா கார்களுக்கு ரீகால்!

மாருதி ஸ்விஃப்ட், பலேனோ, பிரெஸ்ஸா உள்ளிட்ட பல முன்னணி கார்களில் இருக்கும் குறைபாடுடைய பாகத்தை மாற்றித் தருவதற்காக திரும்ப அழைக்கப்பட்டு வருகின்றன.

மாருதி ஸ்விஃப்ட், பலேனோ, பிரெஸ்ஸா கார்களுக்கு ரீகால்!

மாருதி நிறுவனத்தின் பல முன்னணி கார்களின் ஸ்டீயரிங் சிஸ்டத்தில் பிரச்னை இருப்பதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் அதிக அளவில் எழுந்தன. மாருதி ஸ்விஃப்ட், பலேனோ, டிசையர், பிரெஸ்ஸா மற்றும் எஸ் க்ராஸ் உள்ளிட்ட முன்னணி கார்களில் இந்த பிரச்னை இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

மாருதி ஸ்விஃப்ட், பலேனோ, பிரெஸ்ஸா கார்களுக்கு ரீகால்!

வளைவுகளில் திரும்பிய பின்னர் காரின் ஸ்டீயரிங் வீல் மீண்டும் இயல்பு நிலைக்கு வருவதில் சிக்கல் இருப்பதாகவும், உராய்வு சப்தம் வருவதாகவும் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து ஆய்வு செய்த மாருதி, பிரச்னை இருப்பதாக கருதப்படும் குறிப்பிட்ட கால இடைவெளியில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை திரும்ப அழைக்க டீலர்களை அறிவுறுத்தி இருக்கிறது.

மாருதி ஸ்விஃப்ட், பலேனோ, பிரெஸ்ஸா கார்களுக்கு ரீகால்!

ஸ்டீயரிங் வீலை தாங்கி பிடித்திருக்கும் ஸ்டீயரிங் காலம்ன் அமைப்பில் இருக்கும் குறைபாடுடைய பாகம் காரணமாக இந்த பிரச்னை வருவதாக மாருதி கருதுகிறது. எனவே, குறிப்பிட்ட உதிரிபாகம் பொருத்தப்பட்ட கார்களை திரும்ப அழைக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, பிரச்னை இருப்பதாக கருதப்படும் கார்களின் வின் நம்பர் மற்றும் எஞ்சின் நம்பர் வரிசைகளை குறிப்பிட்டு தகவல் அனுப்பி இருக்கிறது.

மாருதி ஸ்விஃப்ட், பலேனோ, பிரெஸ்ஸா கார்களுக்கு ரீகால்!

இந்த கார்களை திரும்ப அழைத்து, அதனை ஆய்வு செய்ய அறிவுறுத்தி இருக்கிறது. அத்துடன், குறைபாடுடைய பாகத்தை கட்டணமில்லாமல் மாற்றித் தருவதற்கும் டீலர்களை கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக, பிரச்னைக்குரிய கார்களை டீலர்கள் அழைத்து சரி செய்ய துவங்கி இருக்கின்றனர்.

மாருதி ஸ்விஃப்ட், பலேனோ, பிரெஸ்ஸா கார்களுக்கு ரீகால்!

மாருதி ஸ்விஃப்ட், பலேனோ, டிசையர் கார்களின் பெட்ரோல், டீசல் மாடல்களும், பிரெஸ்ஸா மற்றும் எஸ் க்ராஸ் கார்களின் டீசல் வேரியண்ட்டுகளும் திரும்ப அழைக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக, உங்களது அருகாமையிலுள்ள மாருதி டீலரை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

Most Read Articles

English summary
Maruti Suzuki has issued a Circular for recall formalities in case of Sticky Steering or Noise in Steering of Swift, Dzire, Baleno, Brezza, S Cross in India.
Story first published: Saturday, September 28, 2019, 15:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X