அடுத்த மாதமே இந்தியாவில் அறிமுகமாகிறது 7 சீட்டர் மாருதி வேகன் ஆர்!

மாருதி வேகன் ஆர் காருக்கு இந்திய பட்ஜெட் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. சிறந்த வசதிகள், ஹெட்ரூம் இடவசதியுடன் சரியான பட்ஜெட்டில் கிடைப்பதே வரவேற்புக்கு காரணம். விற்பனையிலும் மாருதி கார் நிறுவனத்தின் மிக முக்கிய மாடலாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், மாருதி வேகன் ஆர் காரின் அடிப்படையிலான 7 சீட்டர் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், அடுத்த மாத இறுதியில் புதிய மாருதி வேகன் ஆர் 7 சீட்டர் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கார் அண்ட் பைக் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

அடுத்த மாதமே இந்தியாவில் அறிமுகமாகிறது 7 சீட்டர் மாருதி வேகன் ஆர்!

மாருதி வேகன் ஆர் காரின் 7 சீட்டர் மாடல் வெளிநாடுகளில் ஷோலின் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவிலும் புதிய பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. மாருதியின் நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

அடுத்த மாதமே இந்தியாவில் அறிமுகமாகிறது 7 சீட்டர் மாருதி வேகன் ஆர்!

புதிய மாருதி வேகன் ஆர் கார் 4 மீட்டர் நீளத்திற்குள் இருக்கும். ஆனால், 7 இருக்கைகளை அமைக்கும் விதத்தில் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் சில மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கும். தற்போது விற்பனையில் உள்ள மாருதி வேகன் ஆர் காரின் 5 சீட்டர் மாடலானது 3,655 மிமீ நீளம் கொண்டது. ஆனால், 7 சீட்டர் மாடலானது 3,995 மிமீ நீளம் கொண்டதாக இருக்கிறது.

அடுத்த மாதமே இந்தியாவில் அறிமுகமாகிறது 7 சீட்டர் மாருதி வேகன் ஆர்!

மாருதி வேகன் ஆர் காரின் 5 சீட்டர் மாடலில் 1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த நிலையில், 7 சீட்டர் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் 82 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வரும்.

அடுத்த மாதமே இந்தியாவில் அறிமுகமாகிறது 7 சீட்டர் மாருதி வேகன் ஆர்!

புதிய மாருதி வேகன் ஆர் 7 சீட்டர் மாடலில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது. நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக வருவதால் அதிக தொழில்நுட்ப வசதிகளை எதிர்பார்க்கலாம்.

அடுத்த மாதமே இந்தியாவில் அறிமுகமாகிறது 7 சீட்டர் மாருதி வேகன் ஆர்!

புதிய மாருதி வேகன் ஆர் கார் ரூ.5.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் இடையிலான ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, மாருதி வேகன் ஆர் 5 சீட்டர் மாடலைவிட ரூ.1.5 லட்சம் கூடுதல் விலையில் வரும் வாய்ப்புகள் உள்ளன. மறுபுறத்தில் மாருதி எர்டிகா காரைவிட ரூ.2.5 லட்சம் குறைவான விலையிலான 7 சீட்டர் மாடலாக இருக்கும்.

அடுத்த மாதமே இந்தியாவில் அறிமுகமாகிறது 7 சீட்டர் மாருதி வேகன் ஆர்!

டட்சன் கோ ப்ளஸ், மஹிந்திரா கேயூவி100 மற்றும் விரைவில் வரும் ரெனோ ட்ரைபர் ஆகிய மாடல்களுடன் போட்டி போடும். விலை சவாலாக இருப்பதுடன் மாருதியின் தயாரிப்பு என்பது இந்த காருக்கு அதிக வலு சேர்க்கும் விஷயமாக கூறலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 8, 2019, 11:22 [IST]
English summary
According to reports, Maruti is planning to launch Wagon R based 7 seater MPV in India by next month.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+