பழைய கார் அழிப்பு ஆலையை இணைந்து அமைக்கும் மாருதி - டொயோட்டா!

பழைய கார்களை அழிப்பதற்கான ஆலையை இணைந்து அமைப்பதற்கு மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா கூட்டணி திட்டமிட்டுள்ளது.

பழைய கார் அழிப்பு ஆலையை இணைந்து அமைக்கும் மாருதி - டொயோட்டா!

ஆட்டோமொபைல் துறையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக, பழைய கார்களை அழிப்பதற்கான புதிய திட்டத்தை வகுத்து வருவதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதன்மூலமாக, புதிய கார்களின் விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

பழைய கார் அழிப்பு ஆலையை இணைந்து அமைக்கும் மாருதி - டொயோட்டா!

இதனை மனதில் வைத்து பழைய கார்களை அழிப்பதற்கான ஆலையை அமைக்கும் முயற்சியில் மாருதி சுஸுகி - டொயோட்டா கூட்டணி இறங்கியுள்ளது. மாருதி நிறுவனமும், டொயோட்டா கார் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் டொயோட்டா சூஸோ நிறுவனமும் இணைந்து இந்த புதிய கார் அழிப்பு ஆலையை அமைக்க உள்ளன.

பழைய கார் அழிப்பு ஆலையை இணைந்து அமைக்கும் மாருதி - டொயோட்டா!

கார்களை அழித்து அதன் பாகங்களையும், உலோக பொருட்களையும் விற்பனை செய்யும் பொறுப்பை இந்த புதிய நிறுவனம் மேற்கொள்ள இருக்கின்றது. டொயோட்டா சூஸோ நிறுவனம் ஏற்கனவே கார் உதிரிபாகங்கள் சப்ளை மற்றும் உலோக பாகங்கள் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது.

பழைய கார் அழிப்பு ஆலையை இணைந்து அமைக்கும் மாருதி - டொயோட்டா!

இதனால், இந்த புதிய ஆலையை வெற்றிகரமாக செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மஹிந்திரா நிறுவனம் பொதுத் துறை நிறுவனத்துடன் இணைந்து கிரேட்டர் நொய்டாவில் கார் அழிப்பு ஆலையை அமைத்துள்ளது.

பழைய கார் அழிப்பு ஆலையை இணைந்து அமைக்கும் மாருதி - டொயோட்டா!

இந்த ஆலையில் பிரித்து எடுக்கப்படும் கார் உதிரிபாகங்கள் மற்றும் உலோக உதிரிபாகள் விற்பனை செய்யப்படுவதுடன், சில பாகங்கள் மறுசுழற்சி செய்தும் பயன்படுத்தப்படும்.

பழைய கார் அழிப்பு ஆலையை இணைந்து அமைக்கும் மாருதி - டொயோட்டா!

பழைய கார்களை அழிப்பதற்கான புதிய திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன்மூலமாக, பழைய காரை அழிப்பதற்கு கொடுக்கும் வாடிக்கையாளர்கள் புதிய கார்கள் வாங்கும்போது சிறப்புத் தள்ளுபடி மற்றும் சேமிப்புச் சலுகைகளை வழங்குவதற்கான திட்டமும் பரிசீலனையில் உள்ளது.

பழைய கார் அழிப்பு ஆலையை இணைந்து அமைக்கும் மாருதி - டொயோட்டா!

இதன்மூலமாக, பழைய வாகனங்களிலிருந்து வெளியேறும் அபரிமிதமான நச்சுப் புகையை கட்டுப்படுத்த முடிவதுடன், பராமரிப்பு குறைவான பழைய வாகனங்கள் மூலமாக ஏற்படும் விபத்துக்களையும் தவிர்க்கும் வாய்ப்பு ஏற்படும். புதிய கார்களின் விற்பனையும் ஊக்கம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Timesofindia

Most Read Articles
English summary
Country's largest car maker Maruti Suzuki is planning to set up a old vehicles scrapage plant along with a subsidiary of Toyota.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X