மாருதி சுஸுகியின் புதிய ஜென் எஸ்யூவி : தீபாவளி விருந்தாக விற்பனைக்கு வருகிறது

மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான மாருதி ஜென் எஸ்யூவி காரினை வருகிற தீபாவளி பண்டிகைக்கு முன்பு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இந்த செய்தியில் மேலும் காணலாம்.

மாருதி சுஸுகியின் புதிய ஜென் எஸ்யூவி : தீபாவளி விருந்தாக விற்பனைக்கு வருகிறது

இந்தியாவின் முன்னணி நிறுவனமான மாருதி சுஸுகி நவீன ரக கார்களை தயாரித்து வருகிறது. கார் வியாபார சந்தையில் ஏற்படும் கடும் போட்டியை தொடர்ந்து மாருதி சுஸுகி நிறுவனம் பல கார்களை அறிமுகம் செய்கிறது. வரும் ஜூன் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் தனது வேகன் ஆர் 7 சீட்டர் காரினை அறிமுகம் செய்யவுள்ளது.

மாருதி சுஸுகியின் புதிய ஜென் எஸ்யூவி : தீபாவளி விருந்தாக விற்பனைக்கு வருகிறது

மக்களின் அமோக வரவேற்பினை பெற்ற மாருதி ஸ்விஃப்ட் காரின் டூயல் ஜெட் என்ற புதிய வேரியண்ட் காரினை மாருதி சுஸுகி நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது மாருதி ஜென் எஸ்யூவி என்ற மினி எஸ்யூவி காரினை வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்பு அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மாருதி சுஸுகியின் புதிய ஜென் எஸ்யூவி : தீபாவளி விருந்தாக விற்பனைக்கு வருகிறது

கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி ஜென் எஸ்யூவி கார் கான்செப்ட் ஃபியூட்டர் ஆர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்போது இந்த கார் மாருதி ஜென் எஸ்யூவி என்ற பெயரில் விற்பனைக்கு வரும் என இணையதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஜென் எஸ்யூவி என்ற பெயர் குறித்து மாருதி சுஸுகி நிறுவனம் அதிகாரபூர்வ தகவலை இதுவரை வெளியிடவில்லை என இந்தியாகார்நியூஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மாருதி சுஸுகியின் புதிய ஜென் எஸ்யூவி : தீபாவளி விருந்தாக விற்பனைக்கு வருகிறது

மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய ஜென் எஸ்யூவி காரின் டிசைன் நவீன ட்ரெண்டிற்கு ஏற்றார் போல அட்டகாசாமான லுக்கை தருகிறது. இதன் முன்புறத்தில் மெல்லிய க்ரில் அமைப்புடன்கூடிய எல்இடி ஹெட்லைட்டுகள் மாற்றும் வெள்ளைநிற ஒளிரும் பார்டருடன் கூடிய விண்ட்ஷீல்ட் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் இதன் சி ஷேப் பனி விளக்குகளும் காண்பவரை கவர்கிறது.

மாருதி சுஸுகியின் புதிய ஜென் எஸ்யூவி : தீபாவளி விருந்தாக விற்பனைக்கு வருகிறது

இதன் பக்கவாட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான வீல் ஆர்ச்சுகள் மற்றும் கார் வண்ணமான ஆரஞ்சு வண்ணத்தை ஒட்டிய கார் வீல்கள். மற்றும் இதன் பின்புறத்தில் உள்ள எல்இடி பிரேக் லைட்டுகள், அலுமினிய ஸ்கிட் பிளேட் ஆகியவை காருக்கு மேலும் வசீகரத்தை கூடுகிறது. மாருதி நிறுவனம் தற்போது காரினை ஆரஞ்சு நிறத்துல மட்டுமே அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸுகியின் புதிய ஜென் எஸ்யூவி : தீபாவளி விருந்தாக விற்பனைக்கு வருகிறது

இதன் இன்டிரியரில் உள்ள பியானோ பிளாக் நிறத்திலான சென்ட்ரல் கன்சோல் காரினுள் வெளிநாட்டு அதி நவீன காரில் அமர்வது போன்ற அனுபத்தை தரும் என தெரிகிறது. இதில் வழங்கப்பட்டுள்ள செடிரிங் வீலில் மல்டி கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் இதில் உள்ள இருக்கைகள் சவுகரியமான பயண அனுபவத்தை பெற கட்சிதமாக வடிவமைத்துள்ளது மாருதி சுஸுகி நிறுவனம்.

மாருதி சுஸுகியின் புதிய ஜென் எஸ்யூவி : தீபாவளி விருந்தாக விற்பனைக்கு வருகிறது

புதிய ஜென் எஸ்யூவி 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 1.2 கே.சீரியஸ் பெட்ரோல் என இரண்டு பிஎஸ்6 என்ஜின் தேர்வுகளில் வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் நவீன 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும் மற்றும் 91 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும் இதன் சக்திவாய்ந்த 1.2 கே.சீரியஸ் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும் மற்றும் 115 என்எம் டார்க் திறனை தருகிறது.

மாருதி சுஸுகியின் புதிய ஜென் எஸ்யூவி : தீபாவளி விருந்தாக விற்பனைக்கு வருகிறது

பட்ஜெட் எஸ்யூவியாக விற்பனைக்கு களமிறங்கும் ஜென் எஸ்யூவி மாருதி பிரீஸா காரினை விட விலை குறைவாக ரூபாய் 4.5 லட்சம் முதல் 7 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜென் எஸ்யூவி விற்பனைக்கு வந்தால் பட்ஜெட் எஸ்யூவியாக கருதப்படும் மஹிந்திரா டியூவி 300, ஹூண்டாய் கிரெட்டா போன்ற கார்களுக்கு பெரிய அடியாக இருக்கும் என தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 11, 2019, 13:41 [IST]
English summary
Maruti upcoming new ZEN launch before Diwali: Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+