மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் விரைவில் பெட்ரோல் மாடல்!
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் விரைவில் பெட்ரோல் எஞ்சின் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. தற்போது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி டீசல் மாடலில் மட்டுமே கிடைத்து வருகிறது.

எனினும், நேரடி போட்டியாளர்களாக விளங்கும் டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் விரைவில் வர இருக்கும் புதிய ஹூண்டாய் வெனியூ ஆகிய கார்களில் பெட்ரோல் ஆப்ஷனும் இருக்கிறது. இதனால், மாருதி பிரெஸ்ஸாவுக்கு பின்னடைவாக இருக்கிறது.

இதனை மனதில் வைத்து மாருதி பிரெஸ்ஸா காரில் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனை வழங்குவதற்கு மாருதி முடிவு செய்துள்ளது. அண்மையில் மாருதி சியாஸ் மற்றும் எர்டிகா கார்களில் வழங்கப்பட்ட புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியிலும் வழங்குவதற்கு மாருதி முடிவு செய்துள்ளது.

முதலில் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியில் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனை வழங்க மாருதி திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது 1.5 லிட்டர் எஞ்சின் கைவசம் இருப்பதால், கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த பெட்ரோல் எஞ்சின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வர இருக்கிறது.

மேலும், இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். மேலும், 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இந்த எஸ்யூவியில் வழங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இதே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்தான் மாருதி சியாஸ் காரிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது.
Source: ACI


Click it and Unblock the Notifications








