ஹூண்டாய் வென்யூவை முந்தி மீண்டும் முதலிடம் பெற்ற மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா!

மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா மாடல் கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட செப்டம்பர் மாதத்தில் விற்பனையில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதனால் ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூவை முந்திக்கொண்டு மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஹூண்டாய் வென்யூவை முந்தி மீண்டும் முதலிடம் பெற்ற மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா!

கடந்த மாதத்தில் 10,362 விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிகளை விற்பனை செய்துள்ள மாருதி சுசுகி நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட 28.17 சதவீத வீழ்ச்சியை அடைந்திருந்தாலும் 2019 ஆகஸ்ட் மாதத்தை விட 45 சதவீத முன்னேற்றத்தை பெற்றுள்ளது.

ஹூண்டாய் வென்யூவை முந்தி மீண்டும் முதலிடம் பெற்ற மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா!

இதனால் அதன் போட்டி நிறுவனங்கள் அனைத்தையும் முந்தி சிறந்த முறையில் விற்பனையான எஸ்யூவி என பெயர் எடுத்தது மட்டுமல்லாமல், சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமாகி தொடர்ந்து முதலிடம் வகித்து வந்த ஹூண்டாய் வென்யூவையும் முந்தி முதலிடத்தை பெற்றுள்ளது.

ஹூண்டாய் வென்யூவை முந்தி மீண்டும் முதலிடம் பெற்ற மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா!

இந்த வரிசையில் இரண்டாம் இடம் பிடித்த ஹூண்டாய் வென்யூ 7,942 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனையாகி 9,342 யூனிட்கள் விற்பனையான ஆகஸ்ட் மாதத்தை விட 15 சதவீதம் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது.

ஹூண்டாய் வென்யூவை முந்தி மீண்டும் முதலிடம் பெற்ற மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா!

இதற்கு அடுத்ததாக முன்றாவது இடத்தில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி 3,139 யூனிட்கள் விற்பனை நிலவரத்துடன் உள்ளது. 2,882 யூனிட்கள் விற்பனையான கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட இந்த எண்ணிக்கை 8.9 சதவீதம் உயர்வாகும்.

ஹூண்டாய் வென்யூவை முந்தி மீண்டும் முதலிடம் பெற்ற மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா!

நான்காவது இடத்தை 2,842 யூனிட்கள் விற்பனையாகி டாடா நெக்ஸானும், அதற்கு அடுத்தடுத்த இடங்களை மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஹோண்டா டபிள்யூ-ஆர்வி, மஹிந்திரா டியூவி300 மாடல் கார்களும் பெற்றுள்ளன. மேற்கூறப்பட்ட அனைத்து மாடல்களும் விற்பனையில் ஆகஸ்ட் மாதத்தை விட முன்னேற்றத்தையே பெற்றுள்ளன. அதன் முழு விபரம் கீழேயுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வென்யூவை முந்தி மீண்டும் முதலிடம் பெற்ற மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா!
Rank Models September 2019 September 2018 YoY Diff %
1 Maruti Brezza 10,362 14,425 -28.17
2 Hyundai Venue 7,942 - -
3 Ford EcoSport 3,139 3,789 -17.15
4 Tata Nexon 2,842 4,297 -33.86
5 Mahindra XUV300 2,492 - -
6 Honda W-RV 1,341 2,421 -44.61
7 Mahindra TUV300 995 1,786 -44.29

மாருதி சுசுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா மாடல் காருக்கு ரூ.45,000 பணம் தள்ளுபடி மற்றும் 5 வருட உத்தரவாதம் என பல சலுகைகளை நடைபெற்று கொண்டிருக்கின்ற விழா காலத்தில் அறிவித்துள்ளது. இதனால் விட்டாரா பிரெஸ்ஸாவின் இந்த மாதத்திற்கான யூனிட்கள் இன்னும் அதிகளவில் விற்பனையாகக்கூடும்.

ஹூண்டாய் வென்யூவை முந்தி மீண்டும் முதலிடம் பெற்ற மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா!

இந்த மாடலுக்கு மட்டுமல்லாமல் தனது பிரபலமான மாடல் கார்களுக்கும் விழா கால சலுகைகளை மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.

ஹூண்டாய் வென்யூவை முந்தி மீண்டும் முதலிடம் பெற்ற மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா!

மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் இந்த விஸ்வரூப வளர்ச்சியை வைத்து பார்க்கும்போது, மாருதி நிறுவனம் அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருவது தெள்ள தெளிவாக தெரிகிறது. விட்டாரா பிரெஸ்ஸா தான் தற்சமயம் இந்திய மார்கெட்டில் மிக நீண்ட நாட்களாக பிரபலமான எஸ்யூவி காராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 8, 2019, 19:55 [IST]
English summary
Maruti Suzuki Vitara Brezza Sales: Overtakes Hyundai Venue To Regain Top-Selling SUV Title In India
மேலும்... #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+