மாருதி எஸ் க்ராஸ், விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்!

மாருதி எஸ் க்ராஸ் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா கார்களின் பெட்ரோல் மாடல் அறிமுகம் குறித்த விபரங்களை மாருதி உறுதி செய்துள்ளது.

மாருதி எஸ் க்ராஸ், விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்!

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான மாடல்களை அறிமுகம் செய்வதில் மாருதி நிறுவனம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. தனது மார்க்கெட் பங்களிப்பை தக்க வைக்கும் விதத்தில், ஏற்கனவே பல பிஎஸ்-6 கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துவிட்டது.

மாருதி எஸ் க்ராஸ், விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்!

இந்த நிலையில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எஸ் க்ராஸ் எஸ்யூவிகள் டீசல் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே டீசல் கார் உற்பத்தியை நிறுத்தப் போவதாக மாருதி அறிவித்துள்ள நிலையில், விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எஸ் க்ராஸ் கார்களின் பெட்ரோல் மாடல் அறிமுகம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாருதி எஸ் க்ராஸ், விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்!

மேலும், பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்-6 மாருதி பிரெஸ்ஸா மற்றும் எஸ் க்ராஸ் கார்களை வாங்குவதே உத்தமம் என்ற ரீதியில் காத்திருக்கின்றனர். அவர்களது காத்திருப்புக்கு விடை அளிக்கும் விதத்தில் மாருதி நிறுவனத்தின் உயர் அதிகாரி ஸ்ரீ வத்சவா எக்கனாமிக் டைம்ஸ் இதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மாருதி எஸ் க்ராஸ், விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்!

அதில், மாருதி பிரெஸ்ஸா மற்றும் எஸ் க்ராஸ் கார்களின் பெட்ரோல் மாடலானது இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது, பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வருவதற்கு சில மாதங்கள் முன்பாகவே இந்த பெட்ரோல் மாடல்களை கொண்டு வருவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது.

மாருதி எஸ் க்ராஸ், விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எஸ் க்ராஸ் கார்களில் 1.5 லிட்டர் கே15 சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதே எஞ்சின்தான் மாருதி சியாஸ், எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 கார்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

மாருதி எஸ் க்ராஸ், விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்!

இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

மாருதி எஸ் க்ராஸ், விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்!

பிஎஸ்-6 மாசு உமிழவு விதிகள் காரணமாக, தற்போது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எஸ் கார்களில் பயன்படுத்தப்படும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு விரைவில் விடை கொடுக்கப்பட இருக்கிறது. மாருதி வசம் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு இருந்தாலும், அதனை பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றே தெரிகிறது. எதிர்காலத்தில் டிமான்ட் இருந்தால் முடிவு செய்ய திட்டமிட்டுள்ளது.

Source: ET Auto

Most Read Articles
English summary
Maruti Suzuki Vitara Brezza and S-Cross models will soon be offered with BS-VI compliant petrol-hybrid engine options. The petrol variants for both models has been confirmed to go on sale by December 2019.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X