வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி!
மாருதி பிரெஸ்ஸாவுக்கு 5 ஆண்டுகளுக்கான கட்டணமில்லா வாரண்டி திட்டத்தை மாருதி அறிவித்துள்ளது. அதாவது, இதுவரை 2 ஆண்டுகள் அல்லது 40,000 கிமீ தூரத்ததிற்கு ஸ்டான்டர்டு வாரண்டி வழங்கப்பட்டது. ஆனால், புதிய தி
இந்தியாவின் காம்பேக்ட் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் எப்போதுமே கடும் போட்டி நிலவுவது வாடிக்கைதான். ஆனாலும், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார் போட்டியாளர்களை விஞ்சி விற்பனையில் சாதித்து வருகிறது. அதுவும் போட்டி கார்களைவிட இருமடங்கு அதிகமான விற்பனை எண்ணிக்கையை மாருதி பிரெஸ்ஸா பதிவு செய்து வந்தது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஹூண்டாய் வெனியூ ஆகிய இரு மாடல்களின் வரவும் மாருதி பிரெஸ்ஸாவை டென்ஷனாக்கிவிட்டது. டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளும் குறிப்பிட்ட அளவு நெருக்கடியை அளித்து வந்தன. ஆனால், அந்த நெருக்கடி பெரிய அளவில் இல்லை.

இப்போதும் மாருதி பிரெஸ்ஸாதான் விற்பனையில் முன்னிலையில் இருக்கிறது. எனினும், இரு மாதங்களுக்கு முன்பு இருந்தது போல விற்பனை இல்லை. குறிப்பாக, ஹூண்டாய் வெனியூ வருகையால் மாருதி பிரெஸ்ஸாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

இதனை மனதில் வைத்து மாருதி பிரெஸ்ஸாவை தொடர்ந்து வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக நிலைநிறுத்தும் முயற்சிகளில் மாருதி ஈடுபட்டுள்ளது. இதற்காக, புதிய சலுகை திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

அதாவது, மாருதி பிரெஸ்ஸாவுக்கு 5 ஆண்டுகளுக்கான கட்டணமில்லா வாரண்டி திட்டத்தை மாருதி அறிவித்துள்ளது. அதாவது, இதுவரை 2 ஆண்டுகள் அல்லது 40,000 கிமீ தூரத்ததிற்கு ஸ்டான்டர்டு வாரண்டி வழங்கப்பட்டது.

ஆனால், புதிய திட்டத்தின்படி, ஸ்டான்டர்டு வாரண்டி காலத்தைவிட கூடுதலாக வழங்கப்படும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி காலத்திற்கு இனி கட்டணம் இல்லை. அதுவும் 5 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிமீ தூரத்திற்கான ஒருங்கிணைந்த வாரண்டி திட்டமாக தெரிவிக்கப்படுகிறது. டீம் பிஎச்பி தளத்தின் மூலமாக இந்த செய்தி பகிரப்பட்டுள்ளது.

இதன்மூலமாக, காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் மதிப்புமிக்க தேர்வாக பிரெஸ்ஸாவை முன்னிறுத்தும் மார்க்கெட்டிங் யுக்தியாக இதனை மாருதி கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியில் சன்ரூஃப், சைடு ஏர்பேக்குகள் ஆகியவற்றையும் விரைவில் அறிமுகம் செய்வதற்கு மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், இந்த கூடுதல் சிறப்பம்சங்கள் விரைவில் புதுப்பொலிவுடன் வர இருக்கும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்பட உள்ளதா அல்லது அதற்கு முன்னதாகவே தற்போதைய மாடலிலேயே அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து தகவல் இல்லை.

மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியில் தற்போது 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் காரணமாக, இந்த 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு விரைவில் விடை கொடுக்கப்பட இருக்கிறது. மேலும், சியாஸ் காரில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி வர இருக்கிறது.இந்த எஞ்சினுடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட மாடலிலும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா வர இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதுவரை இந்த புதிய சலுகை திட்டத்தையும், சில டீலர்களில் தள்ளுபடி திட்டங்களும் கூட அறிவிக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications