பிஎஸ்-6 எஞ்சினுடன் மாருதி வேகன் ஆர் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் மாடல் அறிமுகம்

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்ட மாருதி வேகன் ஆர் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் மாருதி வேகன் ஆர் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் மாடல் அறிமுகம்

கடந்த ஜனவரி மாதம் மூன்றாம் தலைமுறையாக மேம்படுத்தப்பட்ட புதிய மாருதி வேகன் ஆர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதுவரை 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே கிடைத்து வந்தது. ஆனால், மூன்றாம் தலைமுறை மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட்டன.

பிஎஸ்-6 எஞ்சினுடன் மாருதி வேகன் ஆர் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் மாடல் அறிமுகம்

நகர்ப்புற பயன்பாட்டு மாடலாக இருந்த இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு மூலமாக நீண்ட தூர பயணங்களுக்கும் சிறந்ததாக மாறியது. இதன் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 68 எச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் மாருதி வேகன் ஆர் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் மாடல் அறிமுகம்

இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 83 எச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த நிலையில், மாருதி வேகன் ஆர் காரின் 1.2 லிட்டர் எஞ்சின் பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக கிடைத்து வருகிறது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் மாருதி வேகன் ஆர் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் மாடல் அறிமுகம்

இதையடுத்து, தற்போது 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த புதிய எஞ்சின் எல்எக்ஸ்ஐ, எல்எக்ஸ்ஐ ஆப்ஷனல், விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ ஆப்ஷனல், விஎக்ஸ்ஐ ஏஜிஎஸ் (ஏஎம்டி கியர்பாக்ஸ்), விஎக்ஸ்ஐ ஆப்ஷனல் ஏஜிஎஸ் (ஏஎம்டி கியர்பாக்ஸ்) ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

பிஎஸ்-6 எஞ்சினுடன் மாருதி வேகன் ஆர் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் மாடல் அறிமுகம்

மாருதியின் ஹார்ட்டெக் பிளாட்ஃபார்மில் முற்றிலும் புதிய மாடலாக மூன்றாம் தலைமுறை வேகன் ஆர் கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டால்பாய் டிசைன் கான்செப்ட்டில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

MOST READ: 15 மனைவிகளுக்காக 19 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் வாங்கிய ஆப்பிரிக்க மன்னர்... மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பிஎஸ்-6 எஞ்சினுடன் மாருதி வேகன் ஆர் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் மாடல் அறிமுகம்

புதிய மாருதி வேகன் ஆர் காரில் புதிய டேஷ்போர்டு அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. தொடுதிரையுடன் கூடிய புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இந்த சாதனம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும்.

MOST READ: ஓட்டுனர் முன்பே எலக்ட்ரிக் ரிக்‌ஷாக்களை அடித்து நொறுக்கிய போலீசார்... எதற்காக தெரியுமா?

பிஎஸ்-6 எஞ்சினுடன் மாருதி வேகன் ஆர் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் மாடல் அறிமுகம்

இந்த காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஓட்டுனருக்கான ஏர்பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

MOST READ: சோனியா காந்தி, ராகுலுக்கு பழைய டாடா சஃபாரி கார்கள் ஒதுக்கீடு... மத்திய அரசு அதிரடி!

பிஎஸ்-6 எஞ்சினுடன் மாருதி வேகன் ஆர் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் மாடல் அறிமுகம்

புதிய மாருதி வேகன் ஆர் கார் ரூ.4.42 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து ரூ.5.41 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை வரை கிடைக்கிறது. பிஎஸ்-4 மாடலைவிட ரூ.8,000 வரை கூடுதல் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

Most Read Articles

English summary
Maruti Suzuki has silently introduced the BS-VI compliant 1.0-litre petrol engine on the WagonR hatchback in the Indian market. The new Maruti WagonR 1.0-litre BS6 engine is now offered with a starting price of Rs 4.42 lakh, ex-showroom (Delhi). This is around Rs 8,000 more than the older BS-IV compliant engine variants.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X