விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது புதிய மாருதி வேகன் ஆர்!

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது புதிய மாருதி வேகன் ஆர் கார். கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது புதிய மாருதி வேகன் ஆர்!

நகர்ப்புறத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற சிறந்த பட்ஜெட் கார் மாடல் என்ற பெருமையை மாருதி வேகன் ஆர் பெற்றிருக்கிறது. விற்பனையிலும் இந்தியாவின் டாப் -5 கார்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. அடக்கமான வடிவம், போதுமான வசதிகள், அதிக ஹெட்ரூம் இடவசதியுடன் இந்த கார் கைக்கு தோதான விலையில் கிடைக்கிறது.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது புதிய மாருதி வேகன் ஆர்!

இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வடிவமைப்பிலும், வசதிகளிலும் முற்றிலும் புதிய மாடலாக வந்தது. அத்துடன் வழக்கமான 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மட்டுமின்றி, 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் வந்தது. மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைத்தது.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது புதிய மாருதி வேகன் ஆர்!

இதனால், இந்த காருக்கு தொடர்ந்து சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டு நெருங்கும் நிலையில், புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் காரின் விற்பனை ஒரு லட்சத்தை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த மாதம் வரை 1,03,325 வேகன் ஆர் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது புதிய மாருதி வேகன் ஆர்!

மேலும், கடந்த மாதம் 14,650 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில், கடந்த மாத விற்பனை 29.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, தொடர்ந்து மாருதி வேகன் ஆர் காருக்கு நல்ல டிமான்ட இருந்து வருகிறது.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது புதிய மாருதி வேகன் ஆர்!

பழைய மாடலைவிட அதிக பிரிமீயம் அம்சங்களை இந்த புதிய கார் பெற்றிருக்கிறது. அதிக க்ரோம் பாகங்கள், இரட்டை வண்ண இன்டீரியர் தீம் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது புதிய மாருதி வேகன் ஆர்!

இந்த காரில் இருக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். சிஎன்ஜி மாடலிலும் கிடைக்கிறது.

விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது புதிய மாருதி வேகன் ஆர்!

பெட்ரோல் மாடல்கள் ரூ.4.42 லட்சம் முதல் ரூ.5.91 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த கார் கிடைக்கிறது. சிஎன்ஜி மாடல் ரூ.4.99 லட்சம் விலையில் கிடைக்கிறது. இந்த கார் டாடா டியாகோ உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 18, 2019, 14:09 [IST]
English summary
Maruti Suzuki's current-generation Wagon R model has crossed the 1 lakh mark for units sold in India. The company's A2-Segment offering has registered 1,03,325 units in sales since it was launched in January this year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+