மாருதி சுஸுகி ஜிம்னி நமக்கு இல்லை, நமக்கு இல்லவே இல்லை!!

மாருதி சுஸுகி ஜிம்னி அறிமுகம் குறித்து முக்கியத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி சுஸுகி ஜிம்னி நமக்கு இல்லை, நமக்கு இல்லவே இல்லை!!

மாருதி நிறுவனத்தின் வெற்றிகரமான ஆஃப்ரோடு மினி எஸ்யூவி மாடல் ஜிப்ஸி. தனி நபர் மார்க்கெட்டைவிட இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் அதிகம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், மிக நீண்ட காலமாக இந்தியாவில் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கும் ஜிப்ஸி எஸ்யூவியின் விற்பனை கடந்த மார்ச் மாதத்துடன் நிறுத்தப்பட்டது.

மாருதி சுஸுகி ஜிம்னி நமக்கு இல்லை, நமக்கு இல்லவே இல்லை!!

இதற்கு மாற்று மாடலை மாருதி சுஸுகி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.வெளிநாடுகளில் சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வரும் ஜிம்னி எஸ்யூவியை ஜிப்ஸிக்கு பதிலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறின.

மாருதி சுஸுகி ஜிம்னி நமக்கு இல்லை, நமக்கு இல்லவே இல்லை!!

அடக்கமான வகை ஆஃப்ரோடு எஸ்யூவி மாடலாக ஜிம்னி எஸ்யூவி பட்ஜெட் விலையில் வரும் என்பதால் இந்திய ஆஃப்ரோடு பிரியர்களின் ஆவலை கிளறியது. இந்த நிலையில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் எஞ்சினியரிங் பிரிவு தலைவர் சி.வி.ராமன் ஆட்டோகார் புரோஃபஷனல் தளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஜிம்னி எஸ்யூவி இந்தியாவுக்கு சரிப்பட்டு வராது என்று தெரிவித்துள்ளார்.

மாருதி சுஸுகி ஜிம்னி நமக்கு இல்லை, நமக்கு இல்லவே இல்லை!!

வெளிநாடுகளில் ஜிம்னி எஸ்யூவி 3 டோர் மற்றும் 5 டோர் மாடல்களில் விற்பனையாகிறது. இதில், 5 டோர் மாடல்தான் இந்தியாவுக்கு பொருத்தமானதாக இருக்கும். ஆனால், இந்த 5 டோர் மாடலை இந்தியாவுக்காக மாற்றங்களை செய்வதற்காக அதிக முதலீடுகளை செய்ய வேண்டி இருக்கும்.

மாருதி சுஸுகி ஜிம்னி நமக்கு இல்லை, நமக்கு இல்லவே இல்லை!!

ஆனால், அதற்கு தக்கவாறு இந்தியாவில் ஜிம்னி எஸ்யூவிக்கு வரவேற்பு இருக்கும் என்பது சந்தேகம்தான். எனவே, ஜிம்னி எஸ்யூவியை களமிறக்கும் நோக்கம் இல்லை என்று ராமன் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.

மாருதி சுஸுகி ஜிம்னி நமக்கு இல்லை, நமக்கு இல்லவே இல்லை!!

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. எனவே, பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் தேர்வுகளில் ஜிம்னி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மாருதி சுஸுகி ஜிம்னி நமக்கு இல்லை, நமக்கு இல்லவே இல்லை!!

மஹிந்திரா தார், ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவிகளுக்கு சிறந்த மாற்றாகவும், அதே பட்ஜெட்டிலும் இந்த புதிய ஜிம்னி எஸ்யூவி வரும் என்ற தகவலால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

மாருதி சுஸுகி ஜிம்னி நமக்கு இல்லை, நமக்கு இல்லவே இல்லை!!

ஆனால், ஜிம்னி எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பில்லை என்று மாருதியின் உயர் அதிகாரியே இப்போது உறுதிபட கூறி இருக்கிறார். இது ஆஃப்ரோடு பிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source: Autocarpro

Most Read Articles
English summary
According to company official, Maruti will be not be bringing the Jimny to India anytime soon.
Story first published: Friday, September 13, 2019, 14:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X