மீண்டும் கசிந்த மாருதி எக்ஸ்எல்5 காரின் ஸ்பை படங்கள்... தகவல்களும் வெளியானது

மாருதி சுசுகி நிறுவனம் இந்திய மார்கெட்டில் தனது பிரபலமான மாடல் காரான வேகன்ஆர் ஹேட்ச்பேக்கின் ப்ரீமியம் வெர்சனை வெளியிடவுள்ளது. இந்த ப்ரீமியம் வெர்சனுக்கு மாருதி எக்ஸ்எல்5 எனவும் அந்நிறுவனம் பெயரிட்டு அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸோ நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

மீண்டும் கசிந்த மாருதி எக்ஸ்எல்5 காரின் ஸ்பை படங்கள்... தகவல்களும் வெளியானது

இதற்காக இந்த கார் இந்திய சாலைகளில் பல முறை டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்க்கப்பட்டு வருகின்றன. அப்படி சமீபத்தில் முழு மறைப்புடன் டெஸ்ட் செய்யப்பட்ட எக்ஸ்எல்5 காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனுடன் இதுவரை வெளிவராத இக்காரின் சில தகவல்களும் வெளியாகியுள்ளன.

மீண்டும் கசிந்த மாருதி எக்ஸ்எல்5 காரின் ஸ்பை படங்கள்... தகவல்களும் வெளியானது

இந்த புதிய படத்திலிருந்து பார்க்கும் போது எக்ஸ்எல்5 காரின் அங்க அடையாளங்கள் முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் முன்புற பகுதி காரில் இரட்டை ஹெட்லைட் அமைப்பு உள்ளதை தெளிவாக காட்டுகிறது. இதற்கு மேல் புறத்தில் பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் கசிந்த மாருதி எக்ஸ்எல்5 காரின் ஸ்பை படங்கள்... தகவல்களும் வெளியானது

தற்போதுள்ள வேகன்ஆர் காரில் இருக்கும் முன்புற க்ரிலை விட வித்தியாசமான க்ரில் அமைப்பை இந்த ப்ரீமியம் வெர்சனில் எதிர்பார்க்கலாம். இந்த ஸ்பை புகைப்படங்கள் மூலம் இரு ஏர் டேம்கள் பம்பரின் மீது உள்ளதை அறிய முடிகிறது. மேலும் இதே பம்பரின் முனைகளில் தான் பனி விளக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

மீண்டும் கசிந்த மாருதி எக்ஸ்எல்5 காரின் ஸ்பை படங்கள்... தகவல்களும் வெளியானது

இந்த புகைப்படங்களின் மூலம் பார்த்தால், காரின் பின்புற பகுதி வேகன்ஆரில் உள்ளது போலவே இருப்பதாக தோன்றுகிறது. ஆனால் எப்படியிருந்தாலும் எக்ஸ்எல்5 புதியதாக வடிவமைக்கப்பட்ட பின்புற விளக்குகள் மற்றும் மேலும் சில மாறுதல்களையும் கொண்டிருக்கும்.

மீண்டும் கசிந்த மாருதி எக்ஸ்எல்5 காரின் ஸ்பை படங்கள்... தகவல்களும் வெளியானது

இந்த புதிய எக்ஸ்எல்5யின் உட்புற பாகங்கள் பற்றிய எந்த தகவல்களையும் பெற முடியவில்லை. ஆனால் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி எக்ஸ்எல்5-ன் உட்புற பாகங்கள் வேகன்ஆரில் உள்ளதை விட மிக சிறிய அளவிலான வேறுபாடுகளையே கொண்டிருக்கும்.

மீண்டும் கசிந்த மாருதி எக்ஸ்எல்5 காரின் ஸ்பை படங்கள்... தகவல்களும் வெளியானது

இதன் என்ஜின் பிஎஸ்-6 தரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் வெளியிடப்படும் ஆற்றல், வேகன்ஆரில் உள்ளதை போலவே 82 பிஎச்பி பவரையும் 114 என்எம் டார்க் திறனையும் வெளியிடவுள்ளது. மேலும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக வேகன்ஆரில் உள்ள அதே ஐந்து வேக நிலைகளை வழங்கும் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஜிஎஸ் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன.

மீண்டும் கசிந்த மாருதி எக்ஸ்எல்5 காரின் ஸ்பை படங்கள்... தகவல்களும் வெளியானது

இந்த மாருதி எக்ஸ்எல்5 மாடல் மாருதி நிறுவனத்தின் நெக்ஸா டீலர்ஷிப்பால் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த டீலர்ஷிப் இக்னிஸ், பலேனோ, எஸ்-கிராஸ் மற்றும் எக்ஸ்எல்6 மாடல்களின் வரிசையில் விலை குறைவான மாடலாக இந்த எக்ஸ்எல்5-ஐயும் விற்பனை செய்யவுள்ளது.

மீண்டும் கசிந்த மாருதி எக்ஸ்எல்5 காரின் ஸ்பை படங்கள்... தகவல்களும் வெளியானது

இந்த மாருதி சுசுகி எக்ஸ்எல்5 வேகன்ஆர் மாடலின் ப்ரீமியன் வெர்சனாக இந்தியா முழுவதும் நெக்ஸா டீலர்ஷிப்களால் விற்பனை செய்யப்படவுள்ளது. இதனால் இக்காரின் தயாரிப்பிலும் விற்பனையிலும் மாருதி நிறுவனம் வேகன்ஆருக்கு பின்பற்றிய சூத்திரத்தையே பின்பற்றவுள்ளது. ஆனால் இந்த புதிய மாடலின் விலை வேகன்ஆர்-ஐ விட அதிகமாக ரூ.4.5 லட்சத்திற்கு எக்ஸ்ஷோரூம்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் அறிமுகம் 2020 ஆட்டோ எக்ஸோ நடக்கும் என தெரிகிறது.Most Read Articles

English summary
Maruti XL5 (Premium WagonR) Spied Testing Yet Again: Fresh Details Revealed Ahead Of Launch
Story first published: Monday, October 14, 2019, 17:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X