மாருதி எக்ஸ்எல்-6 காரின் ஸ்கெட்ச் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

விரைவில் விற்பனைக்கு வரும் புதிய மாருதி எர்டிகா எக்ஸ்எல்-6 காரின் டிசைன் ஸ்கெட்ச் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த படங்களையும், கூடுதல் விபரங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

மாருதி எக்ஸ்எல்-6 காரின் ஸ்கெட்ச் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

எம்பிவி கார் மார்க்கெட்டில் மாருதி எர்டிகா கார்தான் விற்பனை எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறது. சரியான பட்ஜெட்டில் சிறந்த 7 சீட்டர் மாடலாக பெயர் பெற்றுவிட்டது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாம் தலைமுறை மாடலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

மாருதி எக்ஸ்எல்-6 காரின் ஸ்கெட்ச் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இந்த நிலையில், அடிக்கடி நீண்ட தூரம் பயணிப்போர் மற்றும் சொகுசான எர்டிகா காரை விரும்பும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், எக்ஸ்எல்-6 என்ற பெயரில் புதிய மாடலை மாருதி கார் நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

மாருதி எக்ஸ்எல்-6 காரின் ஸ்கெட்ச் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இந்த புதிய மாடலில் இரண்டாம் வரிசையில் சாதாரண பெஞ்ச் இருக்கைகளுக்கு பதிலாக இரண்டு கேப்டன் சொகுசு இருக்கைகளுடன் வர இருப்பதே வாடிக்கையாளர்களின் ஆவலை பெரிதும் தூண்டி இருக்கிறது. மேலும், வெளிப்புறத்திலும் பல்வேறு மாற்றங்களுடன் பிரிமீயம் மாடலாக வர இருக்கிறது.

மாருதி எக்ஸ்எல்-6 காரின் ஸ்கெட்ச் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இந்த நிலையில், மாருதி எர்டிகா எக்ஸ்எல்-6 காரின் டிசைன் ஸ்கெட்ச் படங்கள் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளன. இதில், காரின் முகப்பில் புதிய க்ரில் அமைப்பு, ஹெட்லைட் க்ளஸ்ட்டர், பகல்நேர விளக்குகள், ஸ்கிட் பிளேட், ரூஃப் ரெயில்கள் ஆகியவை இடம்பெற்றிருப்பதை பார்க்க முடிகிறது.

மாருதி எக்ஸ்எல்-6 காரின் ஸ்கெட்ச் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இந்த காரில் உட்புறமும் முற்றிலுமாக கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று, அலங்கார மர மற்றும் சில்வர் பாகங்களுடன் கவர்ச்சியாக இருக்கும். தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

மாருதி எக்ஸ்எல்-6 காரின் ஸ்கெட்ச் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோரல் எஞ்சின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வர இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

மாருதி எக்ஸ்எல்-6 காரின் ஸ்கெட்ச் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

புதிய மாருதி எர்டிகா எக்ஸ்எல்-6 கார் வரும் 21ந் தேதி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மாருதியின் நெக்ஸா பிரிமீயம் டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும். மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Maruti Suzuki has released the first design sketches of the upcoming Ertiga based XL6 MPV car.
Story first published: Friday, August 2, 2019, 11:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X