மாருதி எர்டிகா எக்ஸ்எல்6 காரின் வேரியண்ட் விபரங்கள் வெளியானது!

மாருதி எர்டிகா காரின் 6 சீட்டர் மாடலானது எக்ஸ்எல்-6 என்ற பெயரில் வர இறுக்கிறது. அடுத்த மாதம் 21ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் இந்த புதிய எர்டிகா கார் பல புதிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வர இருக்கிறது.

மாருதி எர்டிகா எக்ஸ்எல்6 காரின் வேரியண்ட் விபரங்கள் வெளியானது!

புதிய மாருதி எக்ஸ்எல்-6 என்ற பெயரில் வர இருக்கும் இந்த கார் மாருதியின் நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த காரின் வேரியண்ட் விபரங்களை ஆட்டோகார் இந்தியா தளம் வெளியிட்டு இருக்கிறது.

மாருதி எர்டிகா எக்ஸ்எல்6 காரின் வேரியண்ட் விபரங்கள் வெளியானது!

அதன்படி, புதிய மாருதி எர்டிகா எக்ஸ்எல்-6 கார் மாடலானது ஆல்ஃபா மற்றும் ஸீட்டா ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இது மிகவும் பிரிமீயம் மாடலாக வர இருப்பதால், போதுமான வசதிகளை இந்த இரண்டு வேரியண்ட்டுகளில் அளிக்கப்பட இருக்கிறது.

மாருதி எர்டிகா எக்ஸ்எல்6 காரின் வேரியண்ட் விபரங்கள் வெளியானது!

இந்த இரண்டு வேரியண்ட்டுகளிலுமே நடுவரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்படும். தவிரவும், எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள் மற்றும் டெயில் லைட்டுகள் இடம்பெற இருக்கின்றன. கருப்பு வண்ண இன்டீரியர், சில்வர் வண்ண பாகங்களுடன் அலங்காரம் உட்புறத்தை பிரிமீயமாக காட்டும்.

மாருதி எர்டிகா எக்ஸ்எல்6 காரின் வேரியண்ட் விபரங்கள் வெளியானது!

இந்த காரில் புபதிய ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. ஓட்டுனர் இருக்கைக்கு அட்ஜெஸ்ட் வசதி, பின்புற விண்ட்ஷீல்டு வைப்பர் ஆகியவை இந்த காரில் இடம்பெற இருக்கின்றன.

மாருதி எர்டிகா எக்ஸ்எல்6 காரின் வேரியண்ட் விபரங்கள் வெளியானது!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

டிசைனை பொறுத்தவரையில் முன்புறத்தில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்னோவா க்ரிஸ்ட்டா போன்ற முக அமைப்புடன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஸ்கிட் பிளேட்டுகள், ரூஃப் ரெயில்கள் ஆகியவையும் கூடுதலாக இடம்பெற்றுள்ளன. கிரவுண்ட் கிளியரன்ஸும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

மாருதி எர்டிகா எக்ஸ்எல்6 காரின் வேரியண்ட் விபரங்கள் வெளியானது!

புதிய மாருதி எக்ஸ்எல்-6 காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட இருக்கிறது. அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும் என்பதுடன், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வருகிறது.

மாருதி எர்டிகா எக்ஸ்எல்6 காரின் வேரியண்ட் விபரங்கள் வெளியானது!

இந்த புதிய மாருதி எர்டிகா காரின் எக்ஸ்எல்-6 மாடலானது மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இந்த காரின் மைலேஜில் சிறிய அளவிலேயே மாற்றங்கள் இருக்கும்.

மாருதி எர்டிகா எக்ஸ்எல்6 காரின் வேரியண்ட் விபரங்கள் வெளியானது!

புதிய மாருதி எர்டிகா காரின் எக்ஸ்எல்-6 என்ற 6 சீட்டர் மாடலானது அடிக்கடி நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்வோரையும், பிரிமீயம் மாடலை விரும்புவோருக்கும் சிறந்த தேர்வாக அமையும். மாருதி எர்டிகா கார் மாருதியின் அரேனா ஷோரூம்கள் வாயிலாக தொடர்ந்து விற்பனை செய்யப்படும். புதிய எக்ஸ்எல்-6 கார் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாகவும் விற்பனை செய்யப்படும்.

Most Read Articles
English summary
Maruti Suzuki is all set to introduce its premium six-seater MPV in the Indian market on the 21st of August. The new MPV, expected to be called the XL6 will be based on the popular Ertiga model.
Story first published: Friday, July 26, 2019, 13:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X