விரைவில் அறிமுகமாக உள்ள புதிய காருக்காக தளத்தை உருவாக்கிய மாருதி சுஸுகி... சிறப்பு தகவல்!

மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது தயாரித்து வரும் புதிய ரகத்திலான எம்பிவி ரக காருக்காக புதிய தளம் ஒன்று உருவாக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன், இந்த தளத்தின்மூலம் விரைவில் புக்கிங் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

விரைவில் அறிமுகமாக உள்ள புதிய காருக்காக தளத்தை உருவாக்கிய மாருதி சுஸுகி... சிறப்பு தகவல்!

மாருதி சுஸுகி நிறுவனத்தன் அடுத்த புதிய வரவாக மாருதி எக்ஸ்எல்6 எம்பிவி ரக கார் இருக்கின்றது. இந்த புதிய எம்பிவி ரக காரை அந்நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த எர்டிகா மாடலை தழுவி தயார் செய்து வருகின்றது. இருப்பினும், அதன் ஸ்டைல் எர்டிகாவைக் காட்டிலும் மாறுபட்டு காணப்படும் வகையில் புதுப்பிக்கப்பட உள்ளது.

விரைவில் அறிமுகமாக உள்ள புதிய காருக்காக தளத்தை உருவாக்கிய மாருதி சுஸுகி... சிறப்பு தகவல்!

அதேபோன்று, பிரிமியம் தரத்திலான சிறப்பம்சங்கள், ஆறு இருக்கைகள் அமைப்பு உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது. இத்துடன், இதன் பெயிண்டிங்கிற்காக நெக்ஸா நீலம் பயன்படுத்தப்பட உள்ளது. இதே நிறத்தைதான் பலேனோ, எஸ் கிராஸ், சியாஸ் மற்றும் இக்னிஸ் உள்ளிட்ட மாடல்கள் பெற்றிருக்கின்றன. அதேபோன்று, இந்த கார் நெக்ஸா அவுட்லெட்டுகள் மூலமே விற்பனைக்கு வரவிருக்கின்றது.

விரைவில் அறிமுகமாக உள்ள புதிய காருக்காக தளத்தை உருவாக்கிய மாருதி சுஸுகி... சிறப்பு தகவல்!

முன்னதாக நாம் கூறியதைப்போன்றே, புதிய க்ராஸ்ஸோவர் எக்ஸ்எல் 6 மாடலுக்கு புதுமையான தோற்றம் வழங்கும்விதமாக, புதிய ஸ்போர்ட்ஸ் லுக்கிலான முகப்பு பகுதி வழங்கப்பட உள்ளது. அதற்கேற்ப வகையில், புதிய டிசைனிலான பம்பர், ரெக்டாங்குலர் பனி விளக்கு, எல்இடி டிஆர்எல்களுடன் கூடிய ஹெட்லேம்ப் மற்றும் இரண்டு குரோம் ஸ்லேட்டுகளைக் கொண்ட கிரில் உள்ளிட்டவை பொருத்தப்பட உள்ளன.

விரைவில் அறிமுகமாக உள்ள புதிய காருக்காக தளத்தை உருவாக்கிய மாருதி சுஸுகி... சிறப்பு தகவல்!

அதேபோன்று, எக்ஸ்எல்6 மாடலின் பக்கவாட்டு பகுதியிலும் கணிசமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அந்தவகையில், பாடி கிளாடிங், பிளாக்கட் அவுட் பாகங்கள், பிளாக்கெண்ட் சி மற்றும் டி பிள்ளர்கள், விங் மிர்ரர்கள் மற்றும் புதிய அலாய் வீல் உள்ளிட்டவையும் சிறப்பான டிசைனில் வழங்கப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து, ஸ்கிட் பிளேட்டுடன் கூடிய பின்பக்க பம்பர் மற்றும் சற்று உயர்த்தப்பட்ட ரூஃப் ரெயில்கள் உள்ளிட்டவை மாருதி சுஸுகியின் எக்ஸ்எல்6 வேரியண்டில் இடம்பெற உள்ளது.

விரைவில் அறிமுகமாக உள்ள புதிய காருக்காக தளத்தை உருவாக்கிய மாருதி சுஸுகி... சிறப்பு தகவல்!

இவ்வாறு, பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய இந்த கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கின்றது. அதற்கு முன்னதாக, இந்த புதிய காரை பிரபலபடுத்தும் விதமாக, மாருதி சுஸுகி நிறுவனம், அதற்கான புதிய தளத்தை தயார் செய்துள்ளது. அந்த தளத்தில் கார்குறித்த ஸ்கெட்ச் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

விரைவில் அறிமுகமாக உள்ள புதிய காருக்காக தளத்தை உருவாக்கிய மாருதி சுஸுகி... சிறப்பு தகவல்!

அதேசமயம், இந்த காருக்கான புக்கிங்கையும் அந்நிறுவனம், விரைவில் இந்த தளத்தின் மூலமே தொடங்க இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும், இந்த புதிய காரின் இன்டீரியர் குறித்த புகைப்படமும் இந்த தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதனை நீங்கள் கீழே காணலாம்...

விரைவில் அறிமுகமாக உள்ள புதிய காருக்காக தளத்தை உருவாக்கிய மாருதி சுஸுகி... சிறப்பு தகவல்!

தற்போது, வெளியாகியிருக்கும் இந்த புகைப்படங்கள்மூலம் நமக்கு சில தகவல்கள் தெரியவந்துள்ளன. அது, புதிய மாருதிசுஸுகி எக்ஸ்எல்6 அதன் பெயருக்கேற்ப ஆறு இருக்கை கொண்ட மாடலாக தயாராகி வருகின்றது. மேலும், இரண்டாவது இருக்கை வரிசை கேப்டன் இருக்கை எனப்படும் தனிதனியான இருக்கை அமைப்பைக் கொண்டதாக இருக்கின்றது. ஆகையால், இதன் இடவசதி கூடுதலாகவே இருக்கும் என நம்பப்படுகின்றது.

விரைவில் அறிமுகமாக உள்ள புதிய காருக்காக தளத்தை உருவாக்கிய மாருதி சுஸுகி... சிறப்பு தகவல்!

அதேபோன்று, பிரிமியம் லுக்கிற்காக காரின் இன்டீரியருக்கு பீய்ச் நிறம் கொடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது. இதே நிறம்தான் ரெகுலர் எர்டிகா காரிலும் இடம்பெற்றுள்ளது. இத்துடன், அப்டேட் செய்யப்பட்ட அப்ஹோல்டரி இருக்கை கூடுதல் சிறப்பினை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், தொழில்நுட்ப வசதியாக ஸ்மார்ட் ப்ளே வசதி கொண்ட 7 இன்சிலான டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட உள்ளது.

விரைவில் அறிமுகமாக உள்ள புதிய காருக்காக தளத்தை உருவாக்கிய மாருதி சுஸுகி... சிறப்பு தகவல்!

அது, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு வசதி கொண்டதாகும். இத்துடன், க்ளேமட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், உயரத்தை மாற்றியமைத்துக் கொள்ளும் தன்மைக் கொண்ட ஓட்டுநர் இருக்கை, ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் மற்றும் மழைக்காலத்தில் தானாக வைப்பிங் செய்யக்கூடிய திறன் கொண்ட வைப்பர் உள்ளிட்டவை இணைக்கப்பட உள்ளது.

விரைவில் அறிமுகமாக உள்ள புதிய காருக்காக தளத்தை உருவாக்கிய மாருதி சுஸுகி... சிறப்பு தகவல்!

மாருதி சுஸுகியின் இந்த எக்ஸ்எல்6 காரில் பாதுகாப்பு வசதிகளாக இரண்டு ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், ஓட்டுநர் மற்றும் பாசஞ்சர்களுக்கான சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது.

விரைவில் அறிமுகமாக உள்ள புதிய காருக்காக தளத்தை உருவாக்கிய மாருதி சுஸுகி... சிறப்பு தகவல்!

இந்த அம்சங்கள் அனைத்தும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்டாண்டர்டு சிறப்பம்சமாக இருக்கின்றது. ஆகையால், அந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளிலும் இந்த அம்சங்கள் காணப்படுகின்றது. ஆனால், டாப் என்ட் வேரியண்டுகளில் மட்டும் கூடுதலாக ரியர் பார்க்கிங் கேமிரா வழங்கப்படுகின்றது.

விரைவில் அறிமுகமாக உள்ள புதிய காருக்காக தளத்தை உருவாக்கிய மாருதி சுஸுகி... சிறப்பு தகவல்!

இந்த காரில் 1.3 லிட்டர் டீசல் எஞ்ஜின் இடம்பெறாத என கூறப்படுகின்றது. ஏனென்றால், மாருதி சுஸுகி நிறுவனம், இந்த எஞ்ஜினை கூடிய விரைவில் பயன்பாட்டில் இருந்து முடக்க இருக்கின்று. இதற்கு புதிய மாசு உமிழ்வு விதியே காரணமாக இருக்கின்றது. ஆகையால், இந்த கார் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே கிடைக்கும் என கூறப்படுகின்றது.

விரைவில் அறிமுகமாக உள்ள புதிய காருக்காக தளத்தை உருவாக்கிய மாருதி சுஸுகி... சிறப்பு தகவல்!

ஆகையால், சிறிய ஹைபிரிட் தரத்திலான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினே இந்த காருக்கு வழங்கப்பட உள்ளது. இதே எஞ்ஜின்தான், தற்போதைய எர்டிகா மற்றும் சியாஸ் உள்ளிட்ட கார்களில் நிறுவப்பட்டுள்ளது. இந்த பிஎஸ்-VI தரத்திலான பெட்ரோல் எஞ்ஜின் 105 எச்பி பவரையும், 138 என்எம் டார்க்கையும் வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. இத்துடன், இதில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் இடம்பெற உள்ளது. அதேசமயம், 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் எதிர்பார்க்கப்படுகின்றது.

விரைவில் அறிமுகமாக உள்ள புதிய காருக்காக தளத்தை உருவாக்கிய மாருதி சுஸுகி... சிறப்பு தகவல்!

புதிய மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரை அந்நிறுவனம் வருகின்ற 21ம் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் விலை ரூ. 7.45 லட்டசத்தில் இருந்து ரூ. 9.57 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் ஜெட்டா மற்றும் ஆல்ஃபா ட்ரிம்களில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Article Published On: Sunday, August 4, 2019, 12:21 [IST]
English summary
Maruti Suzuki Launched Website For Upcoming Ertiga Based XL6. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+