பிரம்மாண்டமான எம்ஜி மேக்சஸ் டி90 எஸ்யூவி குறித்த முக்கியத் தகவல்கள்!

எம்ஜி நிறுவனத்தின் முதல் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ஹெக்டர் எஸ்யூவிக்கு அபரிதமிதமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதையடுத்து, எம்ஜி நிறுவனத்தின் தாய் நிறுவனமான சீனாவை சேர்ந்த செயிக் குழுமம் இந்தியாவில் வர்த்தகத்தை வலுவாக மாற்றுவதற்கான திட்டங்களை கையில் எடுத்துள்ளது.

பிரம்மாண்டமான எம்ஜி மேக்சஸ் டி90 எஸ்யூவி குறித்த முக்கியத் தகவல்கள்!

அதன்படி, தனது கீழ் செயல்படும் மற்றொரு கார் பிராண்டான மேக்சஸ் எஸ்யூவியை எம்ஜி மோட்டார் வழியாக இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. மேக்சஸ் பிராண்டில் டி90 என்ற பிரம்மாண்ட எஸ்யூவி மாடலை இந்தியாவில் களமிறக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

பிரம்மாண்டமான எம்ஜி மேக்சஸ் டி90 எஸ்யூவி குறித்த முக்கியத் தகவல்கள்!

அண்மையில் இந்த புதிய எஸ்யூவி கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுவது குறித்த ஸ்பை படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், புதிய மேக்சஸ் டி90 எஸ்யூவி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

பிரம்மாண்டமான எம்ஜி மேக்சஸ் டி90 எஸ்யூவி குறித்த முக்கியத் தகவல்கள்!

செயிக் குழுமத்தின் கீழ் செயல்படும் மேக்சஸ் கார் நிறுவனத்தின் விலை உயர்ந்த எஸ்யூவி மாடலாக சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த எஸ்யூவி விற்பனை செய்யப்படுகிறது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் எல்டிவி பிராண்டில் இந்த எஸ்யூவி விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமான எம்ஜி மேக்சஸ் டி90 எஸ்யூவி குறித்த முக்கியத் தகவல்கள்!

இந்த புதிய மேக்சஸ் டி90 எஸ்யூவி 5,005 மிமீ நீளமும், 1,932 மிமீ அகலமும், 1,875 மிமீ உயரமும் கொண்ட பிரம்மாண்டமான எஸ்யூவியாக உள்ளது. இதன் வீல்பேஸ் 2,950 மிமீ என்பதும் முக்கிய விஷயம். டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் போன்ற எஸ்யூவி மாடல்களுடன் போட்டியாக இருக்கும் என்றாலும், அளவில் இதுதான் பெரிய எஸ்யூவியாக இருக்கும்.

பிரம்மாண்டமான எம்ஜி மேக்சஸ் டி90 எஸ்யூவி குறித்த முக்கியத் தகவல்கள்!

இந்த எஸ்யூவியின் தோற்றம் பிரம்மாண்டமாகவும், முரட்டுத்தனத்துடன் இருக்கிறது. இதன் பின்புறத்தில் 5 லிங்க் டபுள் விஷ்போன் சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளது. 210 மிமீ அளவுக்கு தரை இடைவெளியுடன் இந்திய சாலைகளை ஒரு கை பார்க்கும் அம்சங்கள் உள்ளன. அத்துடன், 19 அங்குல அலாய் வீல்களும் இதன் முரட்டுத்தனத்திற்கும், அதிக தரை இடைவெளிக்கும் இசைவாக உள்ளது.

பிரம்மாண்டமான எம்ஜி மேக்சஸ் டி90 எஸ்யூவி குறித்த முக்கியத் தகவல்கள்!

இந்த எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள், பனரோமிக் சன்ரூஃப், ஹீட்டடு விங் மிரர்கள், கால் அசைவு மூலமாக பின்புற கதவை திறக்கும் வசதி, ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், 3 ஸோன் ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம், 8.0 அங்குல திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

பிரம்மாண்டமான எம்ஜி மேக்சஸ் டி90 எஸ்யூவி குறித்த முக்கியத் தகவல்கள்!

இந்த காரில் லெத்ர அப்ஹோல்ஸ்ட்ரி, வெதுவெதுப்பான உணர்வை ஏற்படுத்தும் இருக்கைகள், மசாஜ் வசதிகளும் உள்ளன. மொத்தத்தில் மிகவும் சொகுசான எஸ்யூவி மாடலாக நிலைநிறுத்தப்படும்.

பிரம்மாண்டமான எம்ஜி மேக்சஸ் டி90 எஸ்யூவி குறித்த முக்கியத் தகவல்கள்!

மேக்சஸ் டி90 எஸ்யூவி காரில் 6 ஏர்பேக்குகள், அவசர காலத்தில் உதவும் பிரேக் அசிஸ்ட், அதிக நிலைத்தன்மையை வழங்கும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், மலைச்சாலைகளில் கார் பின்னோக்கி செல்வதை தவிர்க்கும் ஹில் ஹோல்டு அசிஸ்ட், பின்புறமாக நகர்த்தும்போது தடைகள், பொருட்கள் குறித்து எச்சரிக்கும் ரியர் பார்க்கிங் சென்சார்கள், டயர்களில் காற்றின் அளவு குறைவது குறித்து எச்சரிக்கும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா என பாதுகாப்பு அம்சங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

பிரம்மாண்டமான எம்ஜி மேக்சஸ் டி90 எஸ்யூவி குறித்த முக்கியத் தகவல்கள்!

புதிய மேக்சஸ் டி90 எஸ்யூவி காரில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 224 எச்பி பவரை அளிக்க வல்லது. இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் டீசல் மாடலிலும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பிரம்மாண்டமான எம்ஜி மேக்சஸ் டி90 எஸ்யூவி குறித்த முக்கியத் தகவல்கள்!

இந்த கார் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆகிய மாடல்களில் வரும் வாய்ப்புகள் உள்ளன. டாப் வேரியண்ட்டுகளில் டிரைவிங் மோடுகள் உள்ளிட்ட ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற சில கூடுதல் அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.

பிரம்மாண்டமான எம்ஜி மேக்சஸ் டி90 எஸ்யூவி குறித்த முக்கியத் தகவல்கள்!

வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய மாடல் காட்சிப்படுத்தப்படும் வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2021ம் ஆண்டு முதல் பாதியில் இந்த புதிய பிரிமீயம் எஸ்யூவியை செயிக் குழுமம் எம்ஜி மோட்டார் துணையுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.30 லட்சம் முதல் ரூ.35 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 23, 2019, 18:11 [IST]
English summary
Here we bring you 9 most important things to know about New Maxus D90 SUV.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+