பவர்ஃபுல்லான மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ35 செடான் கார் வெளியீடு!

மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டில் குறைவான விலையில் வரும் புதிய செடான் கார் மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரின் படங்கள், தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பவர்ஃபுல்லான மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ35 செடான் கார் வெளியீடு!

கடந்த ஆண்டு பாரிஸ் மோட்டார் ஷோவில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ35 ஹேட்ச்பேக் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அடிப்படையிலான மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ35 செடான் கார் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரில் ஏஎம்ஜி பாரம்பரியத்தை பரைசாற்றும் ஏராளமான சிறப்பு ஆக்சஸெரீகள், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் அதிசெயல்திறன் மிக்க எஞ்சினுடன் வந்துள்ளது.

பவர்ஃபுல்லான மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ35 செடான் கார் வெளியீடு!

ஏஎம்ஜி ஏ35 ஹேட்ச்பேக் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே 2.0 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்சின்தான் இந்த காரிலும் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 302 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

பவர்ஃபுல்லான மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ35 செடான் கார் வெளியீடு!

இந்த காரில் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக காரின் நான்கு சக்கரங்களுக்கும் எஞ்சின் சக்தி கடத்தப்படுகிறது. இந்த ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக, இந்த கார் 0 -100 கிமீ என்ற வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் விதத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பவர்ஃபுல்லான மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ35 செடான் கார் வெளியீடு!

இந்த காரில் 5 விதமான டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. பனிபடர்ந்த சாலைகளில் அதிக தரைப்பிடிப்புடன் செல்வதற்கான ஸ்லிப்பரி டிரைவிங் மோடு முக்கியமானதாக இருக்கும். கம்ஃபோர்ட் டிரைவிங் மோடில் சொகுசான பயணத்தை வழங்கும் விதத்தில் எஞ்சின் இயக்கம் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பு மாறிக் கொள்ளும்.

பவர்ஃபுல்லான மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ35 செடான் கார் வெளியீடு!

ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் ப்ளஸ் மோடில் எஞ்சின் அதிகபட்சமான செயல்திறனை வெளிக்கொணரும். மேலும், அடாப்டிவ் டேம்பர் மூலமாக சாலைநிலைகளுக்கு தக்கவாறு சஸ்பென்ஷன் அமைப்பில் மாறுதல் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது. தவிரவும், ஈக்கோ ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டமும் இந்த காரின் முக்கிய தொழில்நுட்ப அம்சம்.

பவர்ஃபுல்லான மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ35 செடான் கார் வெளியீடு!

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ35 காரில் பூட்லிட் ஸ்பாய்லர் அமைப்பு, இரட்டை குழல் சைலென்சர்கள், 18 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர் விருப்பத்தின் பேரில், 19 அங்குல அலாய் வீல்களையும் வாங்கி பொருத்தும் வசதி உள்ளது.

பவர்ஃபுல்லான மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ35 செடான் கார் வெளியீடு!

இந்த காரின் முன்சக்கரங்களில் 4 பிஸ்டன் காலிபர்களுடன் 350 மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்குகளும், பின்சக்கரங்களில் சிங்கிள் பிஸ்டன் காலிபர் பொருத்தப்பட்ட 330 மிமீ டிஸ்க் பிரேக்குகளும் உள்ளன. பிரேக் பிடிக்கும்போது டிஸ்க்குகள் அதிக சூடாவதை தவிர்ப்பதற்காக காற்று எளிதாக புகுந்து வரும் வகையில் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பவர்ஃபுல்லான மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ35 செடான் கார் வெளியீடு!

வழக்கம்போல் ஏஎம்ஜி பிராண்டு கார்களுக்குரிய விசேஷ க்ரில் அமைப்பு, பம்பர்கள் இடம்பெற்றுள்ளன. கவர்ச்சியை சேர்க்கும் பல விசேஷ ஆக்சஸெரீகளும் உள்ளன. ஏஎம்ஜி பிராண்டின் ஸ்போர்ட்ஸ் லெதர் இருக்கைகளும் இந்த காரின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. மேலும், விசேஷ இன்ஃபோடெயின்மென்ட் சாதனமும் உள்ளது.

பவர்ஃபுல்லான மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ35 செடான் கார் வெளியீடு!

மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டில் வரும் குறைவான விலை செடான் மாடல் என்பதால் வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆடி எஸ்-3 செடான் காருக்கு நேர் போட்டியாக இருக்கும்.

பவர்ஃபுல்லான மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஏ35 செடான் கார் வெளியீடு!

மெர்சிடிஸ் ஏஎம்ஜி பிராண்டு

ஏஎம்ஜி என்ற சிறப்பு பிரிவின் கீழ் அதிசக்திவாய்ந்த கார் மாடல்களை மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டில் விற்பனையாகும் சாதாரண சொகுசு கார்களின் அடிப்படையிலான இந்த கார்கள் கூடுதல் செயல்திறன் மிக்க மாடலாகவும், சிறந்த ஏரோடைனமிக்ஸை வழங்கும் விதத்தில் சிறப்பு ஆக்சஸெரீகள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்படுகிறது. இந்த கார்களுக்கு உலக அளவில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 28, 2019, 11:09 [IST]
English summary
German carmaker Mercedes-Benz has revealed the latest member of the 35 lineup in the form of the sedan variant of the A35 AMG. The all-new Mercedes-AMG A35 is the sedan version of the hot hatchback revealed last year at the 2018 Paris Motor Show.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+