மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ சொகுசு எஸ்யூவி இந்திய அறிமுக தேதி!

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ சொகுசு எஸ்யூவி இந்திய அறிமுக தேதி!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஜி க்ளாஸ் வரிசையில் பல்வேறு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், மேலும் ஒரு ஜி க்ளாஸ் சொகுசு எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ சொகுசு எஸ்யூவி இந்திய அறிமுக தேதி!

ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் உள்ள மெர்சிடிஸ் ஜி63 ஏஎம்ஜி மாடலின் சாதாரண வகை மாடலாக ஜி350டீ எஸ்யூவி களமிறக்கப்பட இருக்கிறது. அடுத்த மாதம் 16ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் நாள் குறித்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ சொகுசு எஸ்யூவி இந்திய அறிமுக தேதி!

இந்தியாவில் விற்பனையில் உள்ள பென்ஸ் எஸ் க்ளாஸ் 350டீ மாடலில் பயன்படுத்தப்படும் அதே 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இந்த புதிய எஸ்யூவி மாடலிலும் இடம்பெற்றுள்ளது. இந்த எஞ்சின் 286 பிஎஸ் பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ சொகுசு எஸ்யூவி இந்திய அறிமுக தேதி!

இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை 7.4 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 199 கிமீ வேகம் வரை செல்வதற்கான திறனை பெற்றிருக்கிறது. இதன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக முன்புற சக்கரங்களுக்கு 40 சதவீதம் பவரும், பின்புற சக்கரங்களுக்கு 60 சதவீத பவரும் செலுத்தப்படுகிறது. இந்த கார் சிறந்த ஆஃப்ரோடு எஸ்யூவி மாடலாகவும் இருக்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ சொகுசு எஸ்யூவி இந்திய அறிமுக தேதி!

புதிய ஜி350டீ எஸ்யூவி காரில் வட்ட வடிவிலான ஹெட்லைட் க்ளஸ்ட்டர், செவ்வக வடிவிலான க்ரில் அமைப்பு, பம்பர் அமைப்பு மிரட்டுகிறது. இந்த காரின் 21 அங்குல அலாய் வீல்களும் காரின் தோற்றத்தை பிரம்மாண்டமாக காட்டுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ சொகுசு எஸ்யூவி இந்திய அறிமுக தேதி!

ஜி63 ஏஎம்ஜி மாடலில் வழங்கப்படும் விண்ட்ஸ்க்ரீன் காக்பிட் அமைப்புடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இந்த காரிலும் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ சொகுசு எஸ்யூவி இந்திய அறிமுக தேதி!

இந்தியாவில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ எஸ்யூவி சொகுசு கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் ஏஎம்ஜி வெர்ஷனான ஜி63 ஏஎம்ஜி மாடல் ரூ.2.19 கோடி விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த கார் ரூ.1 கோடி விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 26, 2019, 18:04 [IST]
English summary
German luxury car maker, Mercedes-Benz will launch of its flagship SUV mode G350d in India on October 16.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+