புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்பி எஸ்யூவி அறிமுகம்!

சீனாவில் துவங்கி இருக்கும் ஷாங்காய் மோட்டார் ஷோவில், புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்பி எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம் செய்ப்பட்டு இருக்கிறது.

 புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்பி எஸ்யூவி அறிமுகம்!

மெர்சிடிஸ் ஜிஎல்ஏ மற்றும் ஜிஎல்சி இடையிலான ரகத்தில் இந்த புதிய ஜிஎல்பி சொகுசு எஸ்யூவி கார் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. இந்த கார் பென்ஸ் நிறுவனத்தின் MFA கட்டமைப்புக் கொள்கையின் கீழ் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ், ஏ க்ளாஸ் செடான், பி க்ளாஸ், சிஎல்ஏ, சிஎல்ஏ ஷூட்டிங் பிரேக் மற்றும் ஜிஎல்ஏ ஆகிய கார்களின் கட்டமைப்புக் கொள்கையின் கீழ்தான் இந்த புதிய கார் மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய மாடலானது 4,634 மிமீ நீளமும், 1,890 மிமீ அகலமும், 1,900 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 2,829 மிமீ வீல் பேஸ் நீளம் பெற்றுள்ளது. ஜிஎல்ஏ எஸ்யூவியைவிட 130 மிமீ கூடுதல் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த எஸ்யூவியில் மூன்று வரிசை இருக்கை அமைப்பை பெற்றிருக்கிறது. இதனால், இது 7 சீட்டர் மாடலாகவே வர இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், பெரிய அளவிலான வீல் ஆர்ச்சுகள், அலாய் வீல்கள் போன்றவை வெளிப்புறத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்பி

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் குடும்ப வரிசையில் விற்பனையாகும் பல மாடல்களின் இன்டீரியர் அம்சங்கள் இந்த காரிலும் இடம்பெற்றுள்ளன. ஏசி வென்ட்டுகள், தொடுதிரை சாதனம், ஸ்டீயரிங் வீல் ஆகியவை புதிய ஏ க்ளாஸ் காரிலிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய மெர்சிடிஸ் ஜிஎல்பி கான்செப்ட் மாடடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 221 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்பி எஸ்யூவியில் டீசல் எஞ்சின் ஆப்ஷனும் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தவிரவும், ஏஎம்ஜி வெர்ஷனிலும் வர இருக்கின்றன. அதுவும் கூடிய விரைவில் ஏஎம்ஜி வெர்ஷனும் கொண்டு வரப்பட இருப்பதாக தெரிகிறது.

 புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்பி

அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் இந்த புதிய சொகுசு எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆடி க்யூ3, பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மற்றும் வால்வோ எக்ஸ்சி40 ஆகிய எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

இந்த எஸ்யூவி கிட்டத்தட்ட தயாரிப்பு நிலை மாடலாகவே காட்சி தருகிறது. எனினும், முழுமையான தயாரிப்பு நிலை மாடலானது அடுத்த ஒரு சில மாதங்களில் பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Article Published On: Tuesday, April 16, 2019, 12:49 [IST]
English summary
Mercedes-Benz has unveiled their GLB Concept at the 2019 Shanghai Motor Show. The Mercedes-Benz GLB Concept showcased at the motor show is said to be almost production-ready.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+