மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

கடந்த மார்ச் மாதம் நடந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட்டது. சிறிய அளவிலான மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்ட மாடலாக இந்த கார் களமிறக்கப்பட்டது. இந்த நிலையில், அண்மையில் இந்த கார் இந்திய மண்ணில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்படுவது குறித்த ஸ்பை படங்கள் வெளியாகின.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

தற்போது இந்த கார் வரும் டிசம்பர் 3ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. புதிய க்ரில் அமைப்பு, பம்பர் அமைப்புடன் வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை சந்தித்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

அதேபோன்று, விரைவில் இந்தியா வர இருக்கும் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவியில் இருப்பது போன்ற சாயலில் புதிய டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. இதனால், முந்தைய மாடலைவிட அதிக வசீகரத்தை பெற்றிருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

இந்த காரின் உட்புறத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்லன. இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. மெர்சிடிஸ் ஹை - டெக் எம்பக்ஸ் சிஸ்டம் தொழில்நுட்பத்தை இந்த சாதனம் பெற்றிருக்கிறது. வாய்ஸ் கமாண்ட் வசதியை வழங்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

ஜிஎல்சி வரிசையில் முதல்முறையாக பெரிய தொடு உணர் பட்டன்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவியில் முற்றிலும் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு உள்ளிட்ட இதர அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவியில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் ஏற்கனவே சி க்ளாஸ் மற்றும் இ க்ளாஸ் கார்களில் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர்த்து, பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் இந்த காரை எதிர்பார்க்கலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவியானது லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், பிஎம்டபிள்யூ எக்ஸ்-3, வால்வோ எக்ஸ்சி60 ஆகிய கார்களுடன் போட்டி போடும். ரூ.55 லட்சம் முதல் ரூ.60 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, 2020ம் ஆண்டு துவக்கத்தில் புதிய ஜிஎல்இ எஸ்யூவியும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 26, 2019, 13:38 [IST]
English summary
Mercedes Benz will launch the GLC facelift model in India on December 3, 2019.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+