மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் தனது பிரபலமான கார்களின் விலைகளை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த முழு தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்த விலை அதிகரிப்பை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தவுள்ளது. மேலும் இந்த அதிகரிப்பு அனைத்து மாடல்களுக்கும் பொதுவாக 3 சதவீதத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் இந்த விலை அதிகரிப்பிற்கு இந்நிறுவனத்தின் கார்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற பாகங்களின் விலை அதிகரிப்பு தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த விலை அதிகரிப்பு குறித்து மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஒ மார்டின் ஸ்ச்வென்க் கூறுகையில், எங்களது நிறுவனம் வெவ்வேறு விதமான விலைகளில் வாகனங்களை விற்பதால் பெரிய அழுத்தத்தில் உள்ளது. நிலையான வணிகத்திற்கு விலைகளை குறைந்து கொண்டே செல்ல முடியாது. எங்களுக்கு விலைகளை அதிகரிப்பதை தவிர வேற வழி தெரியவில்லை என்றார்.

மேலும் கூறிய அவர், எங்களது நிறுவனத்தின் உதவி ப்ரோகிராம்களான ஸ்டார் அகிலிட்டி+, விஷ் பாக்ஸ், ஸ்டார் ஃபைனான்ஸ் உள்ளிட்டவை மெர்சிடிஸ்-பென்ஸ் தயாரிப்புகளை வாங்க முன்பை விட நல்ல வாய்ப்புகளை வழங்கும் என்றார். மெர்சிடிஸ் நிறுவனத்தின் இந்த ப்ரோகிராம்கள் தான், உலகின் முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தாலும், இந்நிறுவனத்தை நம்பர் ஒன் லக்சரி வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்க வைக்கிறது.

1994ல் இந்தியாவில் காலடி எடுத்து வைத்த மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் சமீபத்தில் தான் 25ஆம் ஆண்டு விழா கொண்டாடியது. இந்நிறுவனத்தின் 95 அவுட்-லெட்கள் இந்தியாவில் முக்கியமாக நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம் மொத்தம் 15 ரெகுலர் மாடல்கள், 8 ஏஎம்ஜி கார்கள் மற்றும் ஒரு மேபாக் மாடலை விற்பனை செய்துவருகிறது.

லக்சரி கார் பிரிவில் இந்நிறுவனத்தின் செடான் மற்றும் சலூன் மாடல்கள் தான் வாடிக்கையாளர்களுக்கு எளிதில் பிடித்துவிடுகிறது. இந்த பிரிவில் பிஎம்டபிள்யூ, ஆடி மற்றும் மெர்சிடிஸ் நிறுவனங்களுக்கு இடையே தான் எப்போதும் போட்டி.

ஆனால் இவற்றில் மெர்சிடிஸ் நிறுவனம் தான் விற்பனையில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக நல்ல விற்பனை எண்ணிக்கைகளை பெற்றுவரும் இந்நிறுவனம் இந்த பிரிவில் முதலிடம் வகித்து வருகிறது.

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தில் இருந்து கடைசியாக ரூ.52.75 லட்ச விலையுடன் ஜிஎல்சி மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் அறிமுகமானது. 5 இருக்கை மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் பிரபலமான மாடலாக விளங்கும் ஜிஎல்சி, பிஎம்டபிள்யூ எக்ஸ்3, வால்வோ எக்ஸ்சி60 மற்றும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மாடல்களுடன் விற்பனையில் போட்டியிட்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் அடுத்த அறிமுகமாக புதிய தலைமுறை ஜிஎல்இ எஸ்யூவி கார் அறிமுகமாகவுள்ளது. இதன் அறிமுகம் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








