கூடுதல் அம்சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கார் அறிமுகம்!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

கூடுதல் அம்சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கார் அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் சொகுசு கார் மாடலாக சி க்ளாஸ் செடான் கார் உள்ளது. கடந்த ஆண்டு அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, மேலும் சில கூடுதல் அம்சங்களுடன் கூடிய சி க்ளாஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

கூடுதல் அம்சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கார் அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரின் சி300டீ ஏஎம்ஜி லைன் மற்றும் சி220டீ புராக்ரெஸ்ஸிவ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளிலும் கூடுதலாக பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. Night Package என்ற பெயரில் இந்த கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கூடுதல் அம்சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கார் அறிமுகம்!

சி300டீ ஏஎம்ஜி லைன் வேரியண்ட்டில் முன்புற மற்றும் பின்புற பம்பர்களில் விசேஷ கருப்பு பூச்சு, கருப்பு வண்ணத்திலான 18 அங்குல ஏஎம்ஜி அலாய் வீல்கள், வயர்லெஸ் மொபைல்போன் சார்ஜர், 225 வாட் ஆம்பிளிஃபயர் மற்றும் 9 ஸ்பீக்கர்களுடன் கூடிய மிட்லைன் சவுண்ட் சிஸ்டம், 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை சேர்க்ககப்பட்டுள்ளன.

கூடுதல் அம்சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கார் அறிமுகம்!

சி 220டீ புரொக்ரெஸ்ஸிவ் வேரியண்ட்டில் கூடுதலாக வயர்லெஸ் மொபைல்சார்ஜர், மிட்லைன் சவுண்ட் சிஸ்டம், 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஓட்டுனர் மற்றும் முன் பயணி இருக்கைகளுக்கான மெமரி மற்றும் எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் வந்துள்ேளது.

கூடுதல் அம்சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கார் அறிமுகம்!

இந்த இரண்டு வேரியண்ட்டுகளிலுமே 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சி300டீ வேரியண்ட்டில் பொருத்தப்பட்டு இருக்கும், இந்த எஞ்சின் அதிபட்சமாக 245 எச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

கூடுதல் அம்சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கார் அறிமுகம்!

மற்றொரு சி220டீ வேரியண்ட்டில் இதே எஞ்சின் 194 எச்பி பவரையும்,400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இரண்டிலுமே 9ஜி ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

கூடுதல் அம்சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் கார் அறிமுகம்!

மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரின் நைட் பேக்கேஜ் அடங்கிய சி300டீ வேரியண்ட்டிற்கு ரூ.49.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், சி220டீ வேரியண்ட்டிற்கு ரூ.46.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சி300டீ வேரியண்ட்டைவிட நைட் பேக்கேஜ் வேரியண்ட்டிற்கு ரூ.1 லட்சம் வரையிலும், சி220டீ நைட் பேக்கேஜின் வேரியண்ட் ரூ.2.25 லட்சம் கூடுதல் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
English summary
The Mercedes Benz C class car have received additional standard equipment in C300d AMG and C220d variants in India.
Story first published: Monday, September 2, 2019, 10:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X