உயிர் காக்கும் சீட் பெல்டில் புதிய தொழில்நுட்பம்: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு

சொகுசு கார்களைத் தயாரித்து வரும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், உயிர்காக்கும் சீட் பெல்டில் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

உயிர் காக்கும் சீட் பெல்டில் புதிய தொழில்நுட்பம்: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு...!

விபத்தின்போது உயிர்காப்பதில், சீட் பெல்ட்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றது. ஆனால், இந்த சீட் பெல்டினை பெரும்பாலான வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதில்லை. அதேபோன்று, காரின் முன் பக்கம் அமர்ந்து செல்லும் பயணிகளும் கூட சீட் பெல்ட் அணிவதைத் தவிர்க்கின்றனர். இந்த அலட்சியத்தின் காரணமாக கார் விபத்தைச் சந்திக்கும்போது, உயிரிழப்பு சம்பவங்கள் அதிகமாக அரங்கேறுகின்றன.

உயிர் காக்கும் சீட் பெல்டில் புதிய தொழில்நுட்பம்: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு...!

இத்தகையச் சூழலைத் தவிர்க்கும் விதமாக, பயணிகள் மற்றும் ஓட்டுநர்களை, சீட் பெல்ட் அணிவதர்க்கு தூண்டும் வகையிலான புதிய தொழில்நுட்பம் கொண்ட சீட் பெல்ட்களை, சொகுசு கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

உயிர் காக்கும் சீட் பெல்டில் புதிய தொழில்நுட்பம்: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு...!

அந்தவகையில், மெர்சிடிஸ் பென்ஸ் தற்போது தயார் செய்திருக்கும் இந்த சீட் பெல்ட், மிதமான வெப்பத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது பயணிகளைச் சீட் பெல்ட்டை பயன்படுத்த தூண்டும்.

உயிர் காக்கும் சீட் பெல்டில் புதிய தொழில்நுட்பம்: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு...!

முன்னதாக இந்த நிறுவனம், இதேபோன்று, ஹீடட் ஆரம் ரெஸ்ட், டூர் பேனல், ஹீடட் இருக்கை, மற்றும் ஹீடட் ஸ்டியரிங் வீல் ஆகியவற்றை அதன் ஹை என்ட் வேரியண்ட் கார்களில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான், தற்போது இந்த புதிய ரகத்திலான ஹீடட் சீட் பெல்டை அந்த நிறுவனம் தயார் செய்துள்ளது.

உயிர் காக்கும் சீட் பெல்டில் புதிய தொழில்நுட்பம்: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு...!

அந்தவகையில், பரிசோதனை முறையில் இந்த ஹீடட் பெல்டை, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், காரில் பொருத்தி சோதித்து வருகின்றது. மேலும், சர்வதேச அளவில் இருக்கும் வாகனத் துறைச் சார்ந்த எழுத்தாளர்களுக்கு, அதனைப் பயன்படுத்திப் பார்க்கும் வாய்ப்பு ஒன்றை அண்மையில் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

உயிர் காக்கும் சீட் பெல்டில் புதிய தொழில்நுட்பம்: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு...!

இந்த பெல்டை பயன்படுத்திய பத்திரிக்கையாளர்கள் கூறியதாவது, "ஹீடட் சீட் பெல்ட் மற்ற சீட் பெல்டுகளைக் காட்டிலும் சற்று அடர்த்தியாக இருக்கின்றது. மேலும், அது மிதமான வெப்பத்தை ஏற்படுத்துகிறது. இது, வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளை, சீட் பெல்ட் பயன்படுத்துவதற்கான ஆர்வத்தைத் தூண்டுகிறது" என்றனர்.

உயிர் காக்கும் சீட் பெல்டில் புதிய தொழில்நுட்பம்: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு...!

இதுபோன்ற தொழில்நுட்பத்தை இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. அதேசமயம், இது தற்போது பரிசோதனை கட்டத்தில் தான் இருக்கின்றது. இன்னும் பொது பயன்பாட்டிற்காக கொண்டு வருவதற்கான ஏற்பாடுகல் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

உயிர் காக்கும் சீட் பெல்டில் புதிய தொழில்நுட்பம்: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு...!

ஆனால், இதுபோன்ற ஹீடட் சீட் பெல்ட், ஹார்ம் ரெஸ்ட்டுகள் எல்லாம் குளிர்பிரதேசங்கள் மற்றும் பனி சார்ந்து இருக்கும் நாடுகளுக்கு தான் தோதுவாக அமையும். இது இந்தியா போன்ற நாடுகளுக்கு பொருந்துமா என்பது கேள்விக்குறிதான், ஏனென்றால் அனைத்து விதமான சீதோஷ்ன நிலைகளையும் சந்திக்கும் நாடாக இருக்கின்றது.

உயிர் காக்கும் சீட் பெல்டில் புதிய தொழில்நுட்பம்: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு...!

அதேபோன்று, இங்கிருக்கும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் குளிரை விரும்புகின்றனர். ஆகையால், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய தொழில்நுட்பம், அதிகபட்சம் மேலை நாடுகளுக்கு தயாரிக்கப்படும் கார்களில் தான் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 25, 2019, 16:43 [IST]
English summary
Mercedes Developing Heated Seat Belts — Hopes To Motivate People To Use Them. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+