இந்தியாவின் விலையுயர்ந்த நம்பர் பிளேட்: எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

காரின் விலையில் பாதியை அடக்கிக் கொள்ளும் வகையில், அதிக தொகை செலவு செய்யப்பட்டு, காருக்கு பதிவெண் வாங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவின் விலையுயர்ந்த நம்பர் பிளேட்: எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

இந்தியர்கள் பெரும்பாலானோர் வாகனம் வாங்குவதில் அலாதியான விருப்பம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அதிலும், தங்களுடைய வாகனம் மற்றவர்களின் வாகனங்களைக் காட்டிலும் தனித்து தெரியவேண்டும் என்பதற்கு, காரை வாங்கும்போது, பல விதங்களில் கவனத்தைக் கொண்டு வாங்குகின்றனர்.

இந்தியாவின் விலையுயர்ந்த நம்பர் பிளேட்: எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

அந்தவகையில், அதன் வண்ணம், ஸ்டைல், தோற்றம் உள்ளிட்டவற்றில் அதிகம் அக்கறை எடுத்துக்கொள்கின்றார்கள். இவ்வாறு, பல வழிகளில் பார்த்து பார்த்து செயல்படும் அவர்கள், காரின் பதிவெண்ணைப் பெறுவதில் அதிக கவனத்தைச் செலுத்துகின்றனர்.

மேலும், வாகனத்தின் பதிவெண்ணிற்காக, அவர்கள் வாங்கியிருக்கும் வாகனத்தின் விலையைக் காட்டிலும், பல மடங்கு அதிகத் தொகையை செலவு செய்து, பேன்சியான நம்பர்களைப் பெறுகின்றனர்.

இந்தியாவின் விலையுயர்ந்த நம்பர் பிளேட்: எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

இதுபோன்ற சம்பவத்தை உறுதிச் செய்யும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் குழு செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், அதேமாதிரியான ஓர் சம்பவம் மீண்டும் குஜராத் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

இதுகுறித்த தகவலை கீழே காணலாம்...

இந்தியாவின் விலையுயர்ந்த நம்பர் பிளேட்: எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்த்பாய் ஹன்ஸ்ரஜ்பாய் பர்சனா. அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானம் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகின்றார்.

இவர், அண்மையில் தனது பயன்பாட்டிற்காக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜிஎல்சி 220 டி 4மேட்டிக் எஸ்யூவி ரக சொகுசு காரை வாங்கியுள்ளார். இதன் விலை ரூ. 63 லட்சம் ஆகும்.

இந்தியாவின் விலையுயர்ந்த நம்பர் பிளேட்: எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

இந்நிலையில், காரை பதிவு செய்வதற்காக அவர் கூடுதலாக, ரூ. 19.01 லட்சத்தை வழங்கியதாகக் கூறப்படுகின்றது. இந்த பெரும் தொகையை ஜிஜே 03 எல்பி 0007 என்ற பதிவெண்ணை வாங்குவதற்காக அவர் செலவு செய்திருப்பாதகக் கூறப்படுகின்றது.

இந்தியாவின் விலையுயர்ந்த நம்பர் பிளேட்: எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

இத்தகைய நடவடிக்கையின் மூலம், கோவிந்த்பாய் ஓர் புதிய சாதனையைப் படைத்துள்ளார். ஏனென்றால், குஜராத்தில் இதற்கு முன்னதாக, இந்த அளவில் பெரும் தொகையை, காரின் நம்பர் பிளேட்டிற்காக செலவு செய்ததில்லை என கூறப்படுகின்றது.

இந்தியாவின் விலையுயர்ந்த நம்பர் பிளேட்: எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

அதேசமயம், முன்னதாக ரூ. 8.53 லட்சம் செலவில் ஜிஜே 03 எல்பி 0001 என்ற நம்பரை உபேந்த்ரா சூடஸமா என்பவர் வாங்கியதாக கூறப்படுகின்றது. இந்த நம்பர் பிளேட்டும் அண்மையில்தான் வாங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், உபேந்த்ரா சூடஸமா, அவரின் புதிய ரேஞ்ச் ரோவர் காருக்காக இந்த நம்பர் பிளேட்டை வங்கியிருந்தார். இதனை முறியடிக்கும் வகையில், அதிக அளவு தொகையைக் கொடுத்து ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த கோவிந்த்பாய் தற்போது வாங்கியுள்ளார்.

இந்தியாவின் விலையுயர்ந்த நம்பர் பிளேட்: எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

இந்த நம்பரை கடவுள் நம்பிக்கையின் பெயரில் அவர் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது. குஜராத் மொழியில் எண் 7-னை எழுதுவது, விநாயகரை குறிக்கும் எழுத்தாக இருக்கின்றது.

அதேசமயம், கோவிந்த்பாய் ஓர் தீவிர விநாயகர் பக்தர் என கூறப்படுகின்றது. ஆகையால், இத்தகைய செலவில், 0007 என்ற நம்பர் பிளேட்டை அவர் வாங்கியுள்ளார்.

இந்தியாவின் விலையுயர்ந்த நம்பர் பிளேட்: எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

0007 என்ற நம்பரை அவர் வாங்கியபோது, பலர் கோவிந்த்பாய் ஜேம்ஸ்பாண்ட் ரசிகர் என எண்ணி வந்தனர். ஆனால், தான் ஒரு விநாயக பக்தன் என்பதை உறுதி செய்யும் வகையில், அவர் தற்போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரூ .19 லட்சம் செலுத்தி, அவரது அதிர்ஷ்ட எண்ணைப் பெற்றபின், கோவிந்த்பாயால் அந்த எண்ணை, குஜராத் மொழியில் எழுத முடியாது என்பது தெரியவந்துள்ளது. ஏனென்றால், அது சட்டத்திற்கு புரம்பானதாகும்.

இந்தியாவின் விலையுயர்ந்த நம்பர் பிளேட்: எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

இந்தியர்கள் எந்த அளவிற்கு வாகனங்களை விரும்புகிறார்களோ, அதே அளவிற்கு அதன் பதிவெண்னை தேர்வு செய்வதிலும் அதிக விருப்பம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இதன் காரணமாகவே, பெரும்பாலானோர், மிகப் பெரிய தொகையை கட்டணமாகச் செலுத்தி அவர்களுக்கு பிடித்தமான எண்ணை தேர்வு செய்து வருகின்றனர்.

இந்தியாவின் விலையுயர்ந்த நம்பர் பிளேட்: எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

அந்தவகையில், அவர்களின் பிறந்த நாள், திருமண நாள், குழந்தைகளின் பிறந்த தேதி, ராசியான எண் உள்ளிட்ட பலவிதமான எண்களை தேர்வு செய்து வருகின்றனர். அதிலும், மிக முக்கியமாக சிலர் 1,7,9,11 மற்றும் 99 உள்ளிட்ட எண்களின்மீது விருப்பம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

இந்தியாவின் விலையுயர்ந்த நம்பர் பிளேட்: எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

மேலும், இதனைப் பெற அவர்கள் அதிகளவில் பணத்தைச் செலவு செய்தும் வருகின்றனர். அந்தவகையில், அவர்கள் வாங்கும் காரின் விலையைக் காட்டிலும் அதிகத் தொகையை செலுத்தி, அந்த காருக்கான பதிவெண்ணைப் பெறுகின்றனர்.

இந்தியாவின் விலையுயர்ந்த நம்பர் பிளேட்: எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

இதனை உறுதி செய்யும் வகையில், முன்னதாக இதேபோன்று பல சம்பவங்கள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. அவ்வாறு, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கே.எஸ். பாலகோபால் என்பவர் கூப் ரக போர்ஷே 718 பாக்ஸ்டர் காருக்கு ரூ. 33 லட்சம் செலவில் பேன்சி நம்பரை வாங்கியிருந்தார்.

இந்தியாவின் விலையுயர்ந்த நம்பர் பிளேட்: எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்துபோவீர்கள்...

அவ்வாறு, ரூ.1.2 கோடி மதிப்புள்ள அந்த காருக்கு கேஎல் 01 சிபி 1 (KL-01-CB-1) என்ற பேன்சி எண்ணை அவர் வாங்கினார். இவர் செலவு செய்த இந்த தொகையானது, புத்தம் புதிய டோயோடா பார்ச்சூனர் காரின் விலையாகும்.

Source: TOI

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mercedes Owner Pays Rs.19 L For No7. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X