எம்ஜி இஇசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஸ்பை வீடியோ வெளியானது!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள எம்ஜி இஇசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் ஸ்பை வீடியோ வெளியாகி இருக்கிறது. இதில், காரின் உருவத்தை முழுமையாக பார்க்க கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

எம்ஜி இஇசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஸ்பை வீடியோ வெளியானது!

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவியை முதலாவதாக களமிறக்கியது. இந்த எஸ்யூவி ரக காருக்கு எதிர்பாராத அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 28,000 பேர் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியை முன்பதிவு செய்துள்ளனர். ஆரம்பமே மிக அமர்க்களமாக துவங்கியிருக்கும் நிலையில், அடுத்த மாடலாக எலெக்ட்ரிக் காரை அதிரடியாக களமிறக்க உள்ளது.

எம்ஜி இஇசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஸ்பை வீடியோ வெளியானது!

ஏற்கனவே தெரிவித்தபடி, இஇசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரையே இரண்டாவது மாடலாக இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கார் தற்போது மிக தீவிரமான சாலை சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு குஜராத் மாநிலம் வதோதராவில் வைத்து சோதனை செய்யப்பட்டு வரும் எம்ஜி இஇசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

இதில், எம்ஜி இஇசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் முழுமையாக அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில் சோதனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், ஹெட்லைட், டெயில் லைட்டுகளை காணக்கூடிய வாய்ப்பு இருப்பதுடன், காரின் தோற்றத்தை ஓரளவு யூகிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

எம்ஜி இஇசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஸ்பை வீடியோ வெளியானது!

புதிய எம்ஜி இஇசட்எஸ் எஸ்யூவி கார் 4,314 மிமீ நீளமும், 1,809 மிமீ அகலமும், 1,620 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் வீல் பேஸ் 2,585 மிமீ வீல் பேஸ் பெற்றிருக்கிறது. 161 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.

எம்ஜி இஇசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஸ்பை வீடியோ வெளியானது!

இந்த எஸ்யூவியில் 150 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க்க திறனையும் வெளிப்படுத்தும் மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 - 50 கிமீ வேகத்தை 3.1 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமையை பெற்றிருக்கிறது.

எம்ஜி இஇசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஸ்பை வீடியோ வெளியானது!

இந்த எலெக்ட்ரிக் காரில் 44.5 kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் 335 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. சாதாரண சார்ஜர் மூலமாக பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு ஆறரை மணிநேரம் பிடிக்கும். ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 30 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் செய்யலாம்.

எம்ஜி இஇசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஸ்பை வீடியோ வெளியானது!

இந்த எலெக்ட்ரிக் கார் 100 கிமீ பயணிப்பதற்கு 13.8kWh மின்சாரம் தேவைப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது மிக திறன் வாய்ந்த அதிக எரிபொருள் சிக்கனம் மிகுந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியாக கருதப்படுகிறது.

எம்ஜி இஇசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஸ்பை வீடியோ வெளியானது!

புதிய எம்ஜி இஇசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரானது முதல்கட்டமாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். வாடிக்கையாளர்கள் தரும் வரவேற்பை பொறுத்து இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கு எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

Source: Barodian boy Jatin/YouTube

More from DriveSpark

Article Published On: Friday, August 2, 2019, 11:38 [IST]
English summary
MG eZS pure electric SUV has been spotted on test in India again.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+