இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் எம்ஜி எலக்ட்ரிக் கார்... வீடியோ வெளியீடு...!
பிரிட்டிஷ் நாட்டு வாகன உலகின் ஜாம்பவானாக செயல்பட்டு வரும் எம்ஜி நிறுவனம், அதன் முதல் இந்திய வெளியீடு எலக்ட்ரிக் கார் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த கார் குறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிரிட்டிஷ், வாகன உலகில் ஜாம்பவானாக செயல்பட்டு எம்ஜி நிறுவனம், இந்தியாவிலும் அதன் ஆதிக்கத்தைச் செலுத்தும் விதமாக நுழைந்துள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக அந்த நிறுவனம் அதன் முதல் எஸ்யூவி ரகத்திலான ஹெக்டார் காரை மிக விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இதற்கான பணியில்தான் தற்போது எம்ஜி நிறுவனம், அதி தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், கூடுதலாக ஒரு காரையும் அந்த நிறுவனம், இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இ-இசட்எஸ் எனப்படும் எலக்ட்ரிக் காரைத்தான் அந்த நிறுவனம் அறிமுகம் வருகின்ற டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இதுகுறித்த தகவலை ரஷ்லேன் ஆங்கில இணையதளம் செய்தியாக வெளியிட்டுள்ளது. மேலும், இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், எம்ஜி நிறுவனம், எஸ்யூவி ரகத்திலான இ-இசட்எஸ் எலக்ட்ரிக் காரை தயாரிப்பது போன்ற டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவே இந்தியாவில், இந்த நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் முதல் எலக்ட்ரிக் காராகும்.
இந்த எலக்ட்ரிக் காரின் அழகான தோற்றத்திற்காக, அதன் முகப்பு பகுதியில், இந்தியர்கள் இதுவரை காணாத வடிவிலான க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், ஸ்லீக் ரகத்திலான புரொஜக்டர் ஹெட்லேம்ப் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த டிசைனானது, பார்வையாளர்களை எளிதில் கவரும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இ-இசட்எஸ் எலக்ட்ரிக் காரை, இசட்எஸ் எனும் காம்பேக்ட் வேரியண்டாக ஏற்கனவே சைனாவில் இந்த நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது. அதேசமயம், இதுபோன்ற ஜீரோ எமிஸன் வாகனங்களையும் இங்கிலாந்து, மத்திய கிழக்கு நாடுகள், தென்கிழக்கு ஆசியா நாடுகள், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் முன்னதாகவே விற்பனைச் செய்து வருகின்றது.

எஸ்யூவி ரகத்திலான இ-இசட்எஸ் எலக்ட்ரிக் கார் பார்ப்பதற்கு அதன் எரிபொருள் வேரியண்டைப் போன்றே காட்சியைக் கொண்டிருக்கிறது. இருப்பினும், சிறு மாற்றங்களாக, அதன் க்ரில் பகுதியில் சார்ஜிங் போர்ட், புதிய வடிவிலான அலாய் வீல் மற்றும் புதிய வண்ணத் தேர்வு உள்ளிட்டவற்றால் இது எரிபொருள் வேரியண்டில் சற்று வித்தியாசம் கொண்டதாக இருக்கின்றது.

மேலும், நகர்புற வாசிகளை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் இந்த எலக்ட்ரிக் காரில் தொழில்நுட்ப அம்சமாக, எம்ஜி நிறுவனத்தின் ஐ-ஸ்மார்ட் கனெக்டிவிட்டி இணைக்கப்பட உள்ளது. இத்துடன் கேபினுக்குள் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டமும் நிறுவப்பட உள்ளது. இதுபோன்ற சில அம்சங்களால், இந்தியர்கள் மத்தியில் இந்த காருக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

எம்ஜி நிறுவனத்தின் இந்த புதிய எலக்ட்ரிக் கார் குறித்த மற்ற எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த நிறுவனம் எஸ்யூவி ரகத்தில் சீன சந்தையில் விற்பனைச் செய்து வரும் எலக்ட்ரிக் காரில், 150 குதிரைத் திறனை வெளிப்படுத்தும் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முழுமையகா சார்ஜ் செய்தால் 335 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.

இ-இசட்எஸ் காருக்கு, நமது இந்திய அரசு வழங்கும் ஃபேம்-2 திட்டத்தின்கீழ் மானியம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் கார், வருகின்ற ஜூலை மாதம் 9ம் தேதி களமிறங்க இருக்கும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








