ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியை கட்டம் கட்டிய எம்ஜி நிறுவனம்... !!

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டிலேயே முதல் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியை கட்டம் கட்டிய எம்ஜி நிறுவனம்... !!

இங்கிலாந்தை சேர்ந்த பாரம்பரியம் மிக்க எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது சீனாவை சேர்ந்த செயிக் வாகன தயாரிப்பு குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், விரைவில் தனது முதல் கார் மாடலுடன் இந்திய சந்தையில் கால் பதிக்க இருக்கிறது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியை கட்டம் கட்டிய எம்ஜி நிறுவனம்... !!

முதல் மாடலாக ஹெக்டர் என்ற எஸ்யூவி வகை காரை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதியில் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலையும் அறிமுகம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியை கட்டம் கட்டிய எம்ஜி நிறுவனம்... !!

கடந்த ஆண்டு சீனாவின் குவாங்ஸோ ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த eZS என்ற எஸ்யூவி மாடலையே இந்தியாவில் அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக 250 எஸ்யூவிகளை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.

குறைவான எண்ணிக்கையில் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு வழங்கியுள்ள புதிய சலுகையின் அடிப்படையில் இந்த எஸ்யூவியை களமிறக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்மூலமாக, காரில் எந்த மாற்றங்களையும் செய்யாமலேயே விற்பனை செய்ய வாய்ப்பு இருக்கிறது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியை கட்டம் கட்டிய எம்ஜி நிறுவனம்... !!

இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில், குஜராத் மாநிலம், ஹலோல் பகுதியில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்து விற்பனை செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவியானது ஹெக்டர் எஸ்யூவியைவிட அளவில் சற்று சிறிய மாடலாக இருக்கும். இந்த மின்சார எஸ்யூவி மாடலை ரூ.20 லட்சத்திற்குள் விலை நிர்ணயித்து விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் எம்ஜி மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியை கட்டம் கட்டிய எம்ஜி நிறுவனம்... !!

இதனால், ஹூண்டாய் கோனா எஸ்யூவி மாடலைவிடவும் இது மிக குறைவான விலை தேர்வாக அமையும் என்பது சாதகமாக பார்க்கப்படுகிறது. இது நிச்சயம் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு போட்டியை தரும் வகையிலேயே நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியை கட்டம் கட்டிய எம்ஜி நிறுவனம்... !!

இந்த புதிய இஇசட்எஸ் எஸ்யூவியில் 110 kW எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 45.6 kWh லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 355 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் மாடலில் இருக்கும் பேட்டரி 400 கிமீ தூரத்திற்கும் மேல் ரேஞ்ச் வழங்கும் என்று தெரிகிறது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியை கட்டம் கட்டிய எம்ஜி நிறுவனம்... !!

இந்த எஸ்யூவியின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 8 மணிநேரம் பிடிக்கும். குயிக் சார்ஜர் மூலமாக 30 நிமிடங்களில் பேட்டரியை 80 சதவீதம் வரை சார்ஜ் ஏற்றிவிட முடியும். இந்த எஸ்யூவி 0 -50 கிமீ வேகத்தை 3.1 வினாடிகளில் எட்டிவிடும்.

More from DriveSpark

Article Published On: Friday, February 22, 2019, 16:59 [IST]
English summary
Chinese-owned British carmaker Morris Garage (MG) is set to bring its eZS electric SUV to India by the end of 2018 according to a new media report. The MG eZS is the pure-electric version of the British marque's ZS SUV and was unveiled to the world at the Guangzhou Motor Show in November 2018.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+