புதிய எம்ஜி இஇசட்எஸ் மின்சார எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் கார் மாடலான ஹெக்டர் எஸ்யூவியை அண்மையில் விற்பனைக்கு கொண்டு வந்தது. மிக சவாலான விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஹெக்டர் எஸ்யூவி பெரிய அளவிலான வரவேற்பை பெற்றிருக்கிறது. ஹெக்டர் காருக்கு கிடைத்திருக்கும் அபரிமிதமான வரவேற்பு கொடுத்த உற்சாகத்தை தொடர்ந்து அடுத்த கார் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் எம்ஜி மோட்டார்ஸ் இறங்கி இருக்கிறது.

புதிய எம்ஜி இஇசட்எஸ் மின்சார எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

அதன்படி, இரண்டாவது மாடலாக இஇசட்எஸ் என்ற பேட்டரியில் இயங்கும் மின்சார எஸ்யூவி ரக காரை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த புதிய மின்சார கார் மாடலானது பல கட்டங்களாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான திட்டத்தை எம்ஜி மோட்டார்ஸ் வகுத்து வைத்துள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி தெரிவிக்கிறது.

புதிய எம்ஜி இஇசட்எஸ் மின்சார எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

எம்ஜி இஇசட்எஸ் எஸ்யூயானது டெல்லி உள்ளடக்கிய என்சிஆர் பிராந்தியத்திலும், மும்பை, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் ஆமதாபாத் ஆகிய நகரங்களில் முதல்கட்டமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும், புதிய இஇசட்எஸ் மின்சார காருக்காக 50kW திறன் கொண்ட டிசி குயிக் சார்ஜர் மையங்களை மேற்கண்ட நகரங்களில் உள்ள டீலர்களில் அமைப்பதற்கும் திட்டமிட்டுள்ளது.

புதிய எம்ஜி இஇசட்எஸ் மின்சார எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

இந்த குயிக் சார்ஜர் கட்டமைப்பை அமைக்கும் பொறுப்பை பின்லாந்து நாட்டை சேர்ந்த ஃபோர்டம் நிறுவனத்திடம் அளித்துள்ளது எம்ஜி மோட்டார்ஸ். குயிக் சார்ஜர் நிலையங்கள் அமைக்கும் பணிகள் ஓரிரு மாதங்களுக்குள் முடிந்துவிடும். இதைத்தொடர்ந்து, வரும் செப்டம்பரில் இஇசட்எஸ் மின்சார எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய எம்ஜி திட்டமிட்டுள்ளது.

புதிய எம்ஜி இஇசட்எஸ் மின்சார எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

டீலர்கள் மட்டுமின்றி வாடிக்கையாளர்கள் வீடுகளிலும் சார்ஜிங் மையங்களை அமைத்துக் கொடுக்கவும் எம்ஜி திட்டமிட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் எளிதாக சார்ஜ் செய்வதற்கான வசதியையும் பெற முடியும்.

புதிய எம்ஜி இஇசட்எஸ் மின்சார எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜிங் கட்டமைப்பு வலுப்பெற்றால் மட்டுமே, மின்சார கார்களை அறிமுகம் செய்ய இயலும் பல்வேறு நிறுவனங்கள் கூறி வருகின்றன. ஆனால், அதற்காக நாங்கள் காத்திருக்கப்போவதில்லை. உடனடியாக எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்து, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடபோதவதாகவும் எம்ஜி நிறுவனம் கூறி இருக்கிறது.

புதிய எம்ஜி இஇசட்எஸ் மின்சார எஸ்யூவி கார் அறிமுக விபரம்!

புதிய எம்ஜி இஇசட்எஸ் மின்சார எஸ்யூவி காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். தினசரி பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, நடுத்தர தூர பயணங்களுக்கும் ஏதுவானதாக இருக்கும். எம்ஜி இஇசட்எஸ் எஸ்யூவியானது குஜராத் மாநிலம் ஹலோல் நகரில் உள்ள கார் ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 3, 2019, 16:42 [IST]
English summary
MG Motor recently launched their first product in the Indian market, with the mid-size Hector SUV. Now, the company is already working on the launch of its second product, the eZS electric SUV for India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+