ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்வளவு தூரம் பயணமா? இந்த காருக்கு எதிர்பார்ப்பு எகிற காரணம் இதுதான்...

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்வளவு தூரம் பயணமா? இந்த காருக்கு எதிர்பார்ப்பு எகிற காரணம் இதுதான்...

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் (MG-Morris Garages), இந்திய மார்க்கெட்டில் களமிறங்க உள்ளது. இந்தியாவில் தனது முதல் தயாரிப்பாக ஹெக்டர் பிரீமியம் எஸ்யூவி (Hector Premium SUV) வகை காரை எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. நடப்பாண்டின் மத்தியில், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி இந்தியாவில் லான்ச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்வளவு தூரம் பயணமா? இந்த காருக்கு எதிர்பார்ப்பு எகிற காரணம் இதுதான்...

டாடா ஹாரியர் (Tata Harrier), ஜீப் காம்பஸ் (Jeep Compass) மற்றும் டாப் எண்ட் ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) உள்ளிட்ட எஸ்யூவி ரக கார்களுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில், எம்ஜி ஹெக்டர் காரின் விலை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹெக்டர் எஸ்யூவி வெற்றி பெற்றால், இந்தியாவில் எம்ஜி நிறுவனத்தின் செயல்பாடுகள் வேகமெடுக்கும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்வளவு தூரம் பயணமா? இந்த காருக்கு எதிர்பார்ப்பு எகிற காரணம் இதுதான்...

பட்ஜெட் விலையில் மட்டுமே கார்களை வாங்கி கொண்டிருந்த இந்திய வாடிக்கையாளர்களின் கவனம் தற்போது சற்று பிரீமியமான எஸ்யூவி ரக கார்களின் மீது திரும்பியுள்ளது. இதனால் இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான டிமாண்ட் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை பயன்படுத்தி கொண்டு, இந்தியாவின் எஸ்யூவி செக்மெண்ட்டில் வலுவாக காலூன்றி விட திட்டமிட்டு வருகிறது எம்ஜி நிறுவனம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்வளவு தூரம் பயணமா? இந்த காருக்கு எதிர்பார்ப்பு எகிற காரணம் இதுதான்...

ஹெக்டர் எஸ்யூவியை தொடர்ந்து, எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் ஒன்றை எம்ஜி நிறுவனம் இந்தியாவில் களமிறக்குகிறது. இஇஸட்எஸ் (eZS) எனும் பெயர் கொண்ட இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்தான் எம்ஜி நிறுவனத்தின் இந்தியாவிற்கான இரண்டாவது தயாரிப்பு. இந்த தகவலை எம்ஜி நிறுவனம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்வளவு தூரம் பயணமா? இந்த காருக்கு எதிர்பார்ப்பு எகிற காரணம் இதுதான்...

எம்ஜி இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரானது, அடுத்த ஆண்டுதான் (2020) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நடப்பாண்டில் இறுதியிலேயே இந்த கார் இந்திய மார்க்கெட்டை வந்தடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்வளவு தூரம் பயணமா? இந்த காருக்கு எதிர்பார்ப்பு எகிற காரணம் இதுதான்...

இந்திய எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் இன்னும் பெரிதாக சூடுபிடிக்கவில்லை. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் ஃபேம் இந்தியா (FAME India) திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதையடுத்துதான், இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் மெல்ல மெல்ல எழுச்சி பெற தொடங்கியுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்வளவு தூரம் பயணமா? இந்த காருக்கு எதிர்பார்ப்பு எகிற காரணம் இதுதான்...

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்க வேண்டும், எலெக்ட்ரிக் வாகன துறைக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காகதான் 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு. கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்வளவு தூரம் பயணமா? இந்த காருக்கு எதிர்பார்ப்பு எகிற காரணம் இதுதான்...

இதன்பின்புதான் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் பிரீமியம் எலெக்ட்ரிக் வாகன செக்மெண்ட்டில் தற்போது பெரும் வெற்றி நிலவி கொண்டுள்ளது. இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மூலமாக அந்த வெற்றிடத்தை நிரப்ப துடியாய் துடிக்கிறது எம்ஜி நிறுவனம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்வளவு தூரம் பயணமா? இந்த காருக்கு எதிர்பார்ப்பு எகிற காரணம் இதுதான்...

ஆரம்பத்தில் இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் விற்பனை செய்ய சிபியூ (CBU-Completely Built Up) வழியை எம்ஜி நிறுவனம் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிபியூ வழியில் நேரடியாக இந்தியாவிற்கு விற்பனைக்கு கொண்டு வந்தால் இறக்குமதி வரி உள்ளிட்ட காரணங்களால் விலை சற்று அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்வளவு தூரம் பயணமா? இந்த காருக்கு எதிர்பார்ப்பு எகிற காரணம் இதுதான்...

ஆனால் டிமாண்ட்டை பொறுத்து, குஜராத் மாநிலம் ஹலோலில் உள்ள பிளாண்ட்டில், இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை உற்பத்தி செய்யவும் எம்ஜி நிறுவனம் தயங்காது என கூறப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டால், குறைவான விலையில் விற்பனை செய்ய முடியும். ஆனால் டிமாண்ட் அதிகமாக இருந்தால் மட்டுமே இந்த முடிவை எம்ஜி நிறுவனம் எடுக்கும் என தெரிகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்வளவு தூரம் பயணமா? இந்த காருக்கு எதிர்பார்ப்பு எகிற காரணம் இதுதான்...

எம்ஜி இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 350 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஒரு முறை சார்ஜ் செய்தால் சென்னையில் இருந்து பெங்களூர் சென்று விடலாம். ஓரளவிற்கு நல்ல ரேஞ்ச் உள்ள சூழலில், இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டால், இந்த மாடல் பெரும் வெற்றியை பெறும் என்பதே ஆட்டோமொபைல் வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது.

இந்த சூழலில் பிஐஎம்எஸ் எனப்படும் பாங்காக் இன்டர்நேஷனல் மோட்டார் ஷோ (BIMS-Bangkok International Motor Show) தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை எம்ஜி நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கார், அங்கும் பார்வையாளர்களை கவர்ந்திழுத்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 27, 2019, 12:22 [IST]
English summary
MG eZS Electric SUV Showcased At BIMS: India Launch In 2020. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+