எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் தள்ளிப்போகிறது!

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் இந்திய அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் தள்ளிப்போகிறது!

அண்மையில் ஹெக்டர் எஸ்யூவியுடன் இந்திய கார் சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் கால் பதித்தது. இந்தியாவின் முதல் நேரடி இணைய வசதியை அளிக்கும் பெருமையுடன் வந்த ஹெக்டர் எஸ்யூவிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் தள்ளிப்போகிறது!

இந்த உற்சாகத்துடன், அடுத்ததாக புத்தம் புதிய இ-இசட்எஸ் என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் களமிறக்க எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், இந்த புதிய எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் தள்ளிப்போகிறது!

ஆனால், தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, எம்ஜி இ-இசட்எஸ் எஸ்யூவியின் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்வதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் தள்ளிப்போகிறது!

இந்தியாவின் தனி நபர் பயன்பாட்டு கார் சந்தையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு அடுத்து, அதிக எதிர்பார்ப்பை இந்த புதிய எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் ஏற்படுத்தி உள்ளது. இது 5 சீட்டர் எஸ்யூவி மாடலாக வர இருக்கிறது.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் தள்ளிப்போகிறது!

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் 44.5kWh திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 262 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் தள்ளிப்போகிறது!

இதன் லித்தியம் அயான் பேட்டரியை முழுமையாக சார்ஜ் ஏற்றுவதற்கு 7 மணிநேரம் பிடிக்கும். ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 40 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும்.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் தள்ளிப்போகிறது!

இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் சிங்க்ரோனஸ் எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 143 எஎச்பி பவரையும்,, 353 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக மின் மோட்டார் பவர் சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது.

எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் தள்ளிப்போகிறது!

இந்தியாவில் முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்து குஜராத்தில் உள்ள ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. ரூ.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவியை எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, August 30, 2019, 17:08 [IST]
English summary
MG India has postponed the launch of the all-electric ZS to next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+