எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் 7-சீட்டர் மாடல் அறிமுக விபரங்கள் கசிந்தன...

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் 7-சீட்டர் மாடல் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்ற விபரங்கள் தெரியவந்துள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் 7-சீட்டர் மாடல் அறிமுக விபரங்கள் கசிந்தன...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எம்ஜி ஹெக்டர் 5-சீட்டர் பிரீமியம் எஸ்யூவி வரும் மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா ஹாரியர் மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட கார்களுக்கு கடும் போட்டியை வழங்கவுள்ள எம்ஜி ஹெக்டர் 5-சீட்டர் பிரீமியம் எஸ்யூவி மாடலின் விலை ரூ.13.50 முதல் ரூ.18 லட்ச ரூபாய்க்குள் இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் 7-சீட்டர் மாடல் அறிமுக விபரங்கள் கசிந்தன...

இதில், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஹெக்டர் பிரீமியம் எஸ்யூவி காரின் 7-சீட்டர் வெர்ஷனையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2020ம் ஆண்டின் முதல் பாதியில் எம்ஜி ஹெக்டர் 7-சீட்டர் லான்ச் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சரியாக சொல்வதென்றால் அடுத்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் லான்ச் செய்யப்பட்டு விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் 7-சீட்டர் மாடல் அறிமுக விபரங்கள் கசிந்தன...

தற்போது சீன மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள பயோஜன் 530 காரின் ரீ-இன்ஜினியரிங் செய்யப்பட்ட மாடல்தான் எம்ஜி ஹெக்டர் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். எம்ஜி மோட்டார்ஸ் மற்றும் பயோஜன் நிறுவனங்களின் உரிமையாளரான செயிக் மோட்டார் கார்ப்பரேஷன், 7-சீட்டர் பயோஜன் 530 காரையும் விற்பனை செய்து வருகிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் 7-சீட்டர் மாடல் அறிமுக விபரங்கள் கசிந்தன...

எனவே 7-சீட்டர் பயோஜன் 530 காருடன், இன்டீரியர் மற்றும் டிசைனை, எம்ஜி ஹெக்டர் 7-சீட்டர் கார் பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சௌகரியத்தை மேம்படுத்துவதற்காக எம்ஜி மோட்டார்ஸ் சில மாற்றங்களை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் எம்ஜி ஹெக்டர் 5 சீட்டர் மாடலில் இருக்கும் இன்ஜின் மற்றும் வசதிகள்தான் அதன் 7 சீட்டர் மாடலிலும் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனைக்கு வரவுள்ள டாடா காஸினி மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட மாடல்களுடன் இது போட்டி போடும்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் 7-சீட்டர் மாடல் அறிமுக விபரங்கள் கசிந்தன...

முன்னதாக ஹெக்டர் 5-சீட்டர் பிரீமியம் எஸ்யூவி காருக்கு பிறகு எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள மாடல் இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி. இதுதான் இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி நிறுவனத்தின் இரண்டாவது மாடல். நடப்பாண்டின் இறுதிக்கு முன்பாக எம்ஜி இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின்புதான் எம்ஜி ஹெக்டர் 7-சீட்டர் மாடல் விற்பனைக்கு களமிறங்குகிறது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் 7-சீட்டர் மாடல் அறிமுக விபரங்கள் கசிந்தன...

எம்ஜி இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவிற்கு சிபியூ யூனிட்டாக இறக்குமதி செய்யப்படவுள்ளது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்ஜி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் 5 மாடல்கள் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவைதான். இதில் ஹெக்டர் 5 சீட்டர், இஇஸட்எஸ் எலெக்ட்ரிக், ஹெக்டர் 7 சீட்டர் என 3 மாடல்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. எஞ்சிய 2 மாடல்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகிவில்லை. ஆனால் முதல் 5 மாடல்களில் ஒரு ஹேட்ச்பேக் அல்லது செடான் ரக கார்கள் கூட கிடையாது. இதுகுறித்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, April 5, 2019, 12:19 [IST]
English summary
MG Hector 7-seater Version Launch Details. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+