இந்தியாவில் களமிறங்கிய பிரிட்டீஷ் இன்டர்நெட் காருக்கு உச்சகட்ட வரவேற்பு... மலிவான விலைதான் காரணம்

மலிவான விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரிட்டீஷ் இன்டர்நெட் காருக்கு உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் களமிறங்கிய பிரிட்டீஷ் இன்டர்நெட் காருக்கு உச்சகட்ட வரவேற்பு... மலிவான விலைதான் காரணம்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கார் எம்ஜி ஹெக்டர். இது 5 சீட்டர் பிரீமியம் எஸ்யூவி ரக கார் ஆகும். இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள முதல் கார்தான் ஹெக்டர். எம்ஜி ஹெக்டர் கார் இந்தியாவில் நேற்று (ஜூன் 27) முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் களமிறங்கிய பிரிட்டீஷ் இன்டர்நெட் காருக்கு உச்சகட்ட வரவேற்பு... மலிவான விலைதான் காரணம்

எம்ஜி ஹெக்டர் காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுமே வழங்கப்பட்டுள்ளன. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 143 பிஎஸ் பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. அதே சமயம் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது.

இந்தியாவில் களமிறங்கிய பிரிட்டீஷ் இன்டர்நெட் காருக்கு உச்சகட்ட வரவேற்பு... மலிவான விலைதான் காரணம்

இதுதவிர ஹெக்டர் காரின் டாப் 3 பெட்ரோல் வேரியண்ட்கள் உடன் 48V ஹைப்ரிட் சிஸ்டத்தையும் எம்ஜி நிறுவனம் ஆப்ஷனலாக வழங்குகிறது. இந்த செக்மெண்ட்டில் ஹைப்ரிட் டிரைவ்டிரெய்ன் உடன் வரும் ஒரே கார் எம்ஜி ஹெக்டர் மட்டுமே. கியர் பாக்ஸ் என எடுத்து கொண்டால், பெட்ரோல் வேரியண்ட்கள் 7 ஸ்பீடு ட்யூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனை ஆப்ஷனலாக பெற்றுள்ளன.

இந்தியாவில் களமிறங்கிய பிரிட்டீஷ் இன்டர்நெட் காருக்கு உச்சகட்ட வரவேற்பு... மலிவான விலைதான் காரணம்

அதே சமயம் எஞ்சிய அனைத்து வேரியண்ட்களும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸை பெற்றுள்ளன. ஹெக்டர் காரில் அதிநவீன வசதிகளுக்கு துளி கூட பஞ்சமில்லை. பல்வேறு தனித்துவமான வசதிகளுடன்தான் எம்ஜி நிறுவனம் ஹெக்டர் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில், பல வசதிகள் இந்த செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக ஹெக்டர் காரில்தான் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் களமிறங்கிய பிரிட்டீஷ் இன்டர்நெட் காருக்கு உச்சகட்ட வரவேற்பு... மலிவான விலைதான் காரணம்

இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் என்ற பெருமையை எம்ஜி ஹெக்டர் தாங்கி வந்துள்ளது. எம்ஜி ஹெக்டர் கார் M2M (Machine to Machine) வகை கம்யூனிகேஷன் சிப்பை பெற்றுள்ளது. இதன் மூலம் அனைத்து நேரங்களிலும் நேரடி இணைய வசதியை பெறலாம். எம்ஜி ஹெக்டர் காரில், 10.4 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் களமிறங்கிய பிரிட்டீஷ் இன்டர்நெட் காருக்கு உச்சகட்ட வரவேற்பு... மலிவான விலைதான் காரணம்

வாய்ஸ் கமாண்ட் மூலமாக 100 விதமான செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வசதியும் எம்ஜி ஹெக்டர் காரில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர இந்த செக்மெண்ட்டிலேயே மிகப்பெரிய பூட் ஸ்பேஸையும் எம்ஜி ஹெக்டர் கார் பெற்றுள்ளது. அத்துடன் மிகப்பெரிய பனரோமிக் சன் ரூஃப் வசதியையும் எம்ஜி நிறுவனம் ஹெக்டர் காரில் வழங்கியுள்ளது.

இந்தியாவில் களமிறங்கிய பிரிட்டீஷ் இன்டர்நெட் காருக்கு உச்சகட்ட வரவேற்பு... மலிவான விலைதான் காரணம்

இந்திய மார்க்கெட்டில் இந்த விலைக்கு வேறு எந்த காரிலும் இத்தகைய பனரோமிக் சன் ரூஃப்பை பார்க்க முடியாது. அதிநவீன வசதிகள் மட்டுமல்லாது டிசைனிலும் எம்ஜி ஹெக்டர் கார் அசத்துகிறது. அத்துடன் ஹெக்டர் காரின் இன்டீரியரில் எம்ஜி நிறுவனம் தேவையான அளவிற்கு ஸ்டோரேஜ் வசதிகளையும் வழங்கியுள்ளது.

இந்தியாவில் களமிறங்கிய பிரிட்டீஷ் இன்டர்நெட் காருக்கு உச்சகட்ட வரவேற்பு... மலிவான விலைதான் காரணம்

எம்ஜி நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மிகவும் சவாலான விலையில்தான் ஹெக்டர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த எதிர்பார்ப்பை எம்ஜி நிறுவனம் பொய்யாக்கவில்லை. இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்ற வகையில், மிகவும் ஆச்சரியமான விலையில் ஹெக்டர் காரை எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் களமிறங்கிய பிரிட்டீஷ் இன்டர்நெட் காருக்கு உச்சகட்ட வரவேற்பு... மலிவான விலைதான் காரணம்

எம்ஜி ஹெக்டர் காரின் ஆரம்ப விலை 12.18 லட்ச ரூபாய் மட்டுமே (எக்ஸ் ஷோரூம், டெல்லி). இது எம்ஜி ஹெக்டர் காரின் நேரடி போட்டியாளரான டாடா ஹாரியர் காரை (12.99 லட்ச ரூபாய், எக்ஸ் ஷோரூம், டெல்லி) விட குறைவு. எம்ஜி ஹெக்டர் காரின் டாப் எண்ட் டீசல் வேரியண்ட்டின் விலை 16.88 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி).

இந்தியாவில் களமிறங்கிய பிரிட்டீஷ் இன்டர்நெட் காருக்கு உச்சகட்ட வரவேற்பு... மலிவான விலைதான் காரணம்

எனவே எம்ஜி ஹெக்டர் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த சூழலில் எம்ஜி ஹெக்டர் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பினை வழங்கியிருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு கடந்த ஜூன் 4ம் தேதிதான் தொடங்கப்பட்டது.

இந்தியாவில் களமிறங்கிய பிரிட்டீஷ் இன்டர்நெட் காருக்கு உச்சகட்ட வரவேற்பு... மலிவான விலைதான் காரணம்

ஆனால் வெறும் 23 நாட்களில் எம்ஜி ஹெக்டர் காருக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. இதன்மூலம் 10 ஆயிரத்திற்கும் அதிகமான முன்பதிவுகளை விரைவாக பெற்ற கார்களில் ஒன்றாக எம்ஜி ஹெக்டர் உருவெடுத்துள்ளது. ஆனால் இதன் காரணமாக எம்ஜி ஹெக்டர் காருக்கான காத்திருப்பு காலம் (Waiting Period) நீளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் களமிறங்கிய பிரிட்டீஷ் இன்டர்நெட் காருக்கு உச்சகட்ட வரவேற்பு... மலிவான விலைதான் காரணம்

முன்னதாக டாடா ஹாரியர் கார் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டாடா ஹாரியர் காருக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் நல்ல வரவேற்பை வழங்கினர். எனவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட அடுத்த மாதத்தில், டாடா ஹாரியர் காருக்கான காத்திருப்பு காலம் 3 மாதங்களுக்கும் மேலாக இருந்தது.

இந்தியாவில் களமிறங்கிய பிரிட்டீஷ் இன்டர்நெட் காருக்கு உச்சகட்ட வரவேற்பு... மலிவான விலைதான் காரணம்

அதே சமயம் ஒரு காரின் காத்திருப்பு காலம் என்பது, தொழிற்சாலையின் உற்பத்தி திறனையும் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக எம்ஜி நிறுவனத்தின் முதல் பிளாண்ட் குஜராத் மாநிலம் ஹலோலில் நிறுவப்பட்டுள்ளது. இங்கே ஒரு ஆண்டுக்கு சுமார் 80,000 கார்களை உற்பத்தி செய்ய முடியும். இந்த சூழலில் மிகவும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், எம்ஜி ஹெக்டர் காருக்கான டிமாண்ட் வரும் மாதங்களில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் களமிறங்கிய பிரிட்டீஷ் இன்டர்நெட் காருக்கு உச்சகட்ட வரவேற்பு... மலிவான விலைதான் காரணம்

இதனிடையே எம்ஜி ஹெக்டர் காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது. அனேகமாக ஜூலை முதல் வாரத்தில் இருந்து எம்ஜி ஹெக்டர் கார் டெலிவரி செய்யப்படலாம். எம்ஜி ஹெக்டர் கார் டாடா ஹாரியர் மட்டுமல்லாது, ஜீப் காம்பஸ், கியா செல்டோஸ் உள்ளிட்ட கார்களுக்கும் சவால் அளிக்கவுள்ளது. இதில், கியா செல்டோஸ் வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, June 28, 2019, 15:06 [IST]
English summary
MG Hector Bookings Cross 10,000 Units In The First Month — Deliveries To Begin From July. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+