இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த எம்ஜி ஹெக்டார் கார் புக்கிங் விபரம்!
இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கும் எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டார் காருக்கான புக்கிங் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

இங்கிலாந்து வாகன உலகில் ஜாம்பவானாக திகழ்ந்து வரும் எம்ஜி நிறுவனம், இந்தியாவில் அண்மையில்தான் அதன் கால் தடத்தை பதித்தது. அந்த வகையில், எஸ்யூவி ரகத்திலான ஹெக்டார் காரைதான் அந்த நிறுவனம் முதலில் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. இது இன்னும் ஓர் சில நாட்களிலேயே அறிமுகமாகவும் இருக்கின்றது.

இதன் அறிமுகத்திற்கான ஏற்பாடுகள் மும்பையில் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அதற்கான பணிகளை அந்த நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹெக்டார் காருக்கான முன்பதிவு தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த செய்தியை ஆட்டோகார் இந்தியா ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது. ரூ. 51 ஆயிரம் தொகையைச் செலுத்தி இந்த காருக்கான முன் பதிவு செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான தகவல் எம்ஜி நிறுவனத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் இந்த தகவல்கள், மும்பை மற்றும் கோவாவில் மிக விரைவில் களமிறங்க இருக்கும், எம்ஜி நிறுவனத்தின் டீலர்களே வெளியிட்டுள்ளனர். இந்த காரை விருப்பமுள்ளவர்கள், ஆன்லைன் மூலம் ரீஜியினல் டீலர்களை அறிந்துக்கொண்டு அவர்களிடம், தங்களுக்கான ஹெக்டார் காரை புக்செய்து கொள்ளலாம்.

அதேசமயம், இந்த நிறுவனத்தின் முதல் ஷோரூம் டெல்லியில் தான் தொடங்கப்பட உள்ளது. இந்த ஷோரூம், வருகின்ற ஜீன் மாதம் 4ம் தேதி திறக்கப்பட இருக்கின்றது. முன்னதாக, எம்ஜி நிறுவனம் 120 டச் பாயிண்டுகளை நாடு முழுவதும் திறக்க இருப்பதாக அறிவித்திருந்தது. மேலும், 50க்கும் மேற்பட்ட டீலர்கள் ஷோரூமையும் திறக்க இருப்பதாக தெரிவித்திருந்தது.

தற்போது இவையனைத்தும் திறக்கப்படுவதற்கான நிலை தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் இதுபோன்ற டச் பாயிண்டுகள் 250 ஆக அதிகரிக்க அந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஜீப் காம்பஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மற்றும் டாடா ஹாரியருக்கு போட்டியாக களமிறங்கும் இந்த காரில், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 143 ஹெச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

அதேபோன்று, இந்த கார் 48வோல்ட் மைல்ட் ஹைபிரிட், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆப்ஷனிலும் கிடைக்க இருக்கின்றது. இது அதிகபட்சமாக 143 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றுள்ளது.

இத்துடன் இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக, ஏர் பேக்குகள், 360 டிகிரி சர்ரவுண்ட் வியூ கேமரா, க்ரூஸ் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோமெட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் என பல்வேறு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








