கழுதை முரண்பாடை அடுத்து நடு ரோட்டில் தானாக தீ பிடித்த புத்தம் புதிய கார்... வீடியோ..!
கழுதை முரண்பாடை அடுத்து எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் கார் தானாக நடுரோட்டில் தீப்பிடித்து எரியும் வீடியோக் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்திய வாகன உலகம் இதுவரை சந்தித்திராத இமாலய அளவிலான வரவேற்பை எம்ஜி நிறுவனம் பெற்றிருக்கின்றது. இந்நிறுவனம் அறிமுகம் செய்த முதல் மாடலிலேயே வரலாறு காணாத வரவேற்பினைப் பெற்றிருக்கின்றது.
இங்கிலாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம்தான் இந்த காரை இந்தியாவில் கால் தடம் பதிக்கும் விதமாக அறிமுகம் செய்தது.

தன்னுடைய வருகையை நாடு முழுவதும் பிரதிபலிக்க வைக்க எண்ணிய எம்ஜி நிறுவனம், ஹெக்டரை யாரும் எதிர்பாராத விலையில் அறிமுகம் செய்தது. இதுமட்டுமின்றி, அதன்போட்டி நிறுவனங்களில் காணப்படாத பல்வறு சிறப்பம்சங்களை ஹெக்டரில் எம்ஜி நிறுவனம் வழங்கியது.
ஆகையால், இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் எந்தவொரு நிறுவனமும் காணாத ஓர் அதீத வரவேற்பினை அது பெற்றது.

உண்மையில், எம்ஜி நிறுவனம் இந்தியாவின் ஜம்பவானான டாடா நிறுவனத்தின் ஹாரியருக்கே கடுமையான போட்டியைக் கொடுத்து வருகின்றது. இதுமட்டுமின்றி, ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட கார்களுக்கும் கடும் நெரக்கடியை எம்ஜி ஹெக்டர் கொடுத்து வருகின்றது.

அந்தவகையில், கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஹெக்டர் தற்போதுவரை 13 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகளை விற்றுத் தீர்த்துள்ளது. இதுமட்டுமின்றி 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஹெக்டரை வாங்குவதற்காக புக்கிங்கும் செய்துள்ளனர்.
இத்தகைய வரவேற்பால் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த காருக்கான காத்திருப்பு காலம் 6 மாதங்களுக்கும் அதிகமாக நீடித்துள்ளது.

இவ்வாறு, ஒருபக்கம் இந்த காருக்கான புக்கிங் அமோகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேலையில், மறுபுறம் அந்த காரைப் பற்றிய முரண்பட்டக் கருத்துகளும் உலா வந்த வண்ணம் இருக்கின்றது.
அந்தவகையில், அண்மையில் எம்ஜி ஹெக்டர் காரை வாங்கிய ராஜஸ்தாந் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர், அந்த காரின் கியர்பாக்ஸில் கோளாறு ஏற்பட்டதாக அதன் டீலரை அனுகியுள்ளார்.

ஆனால், இதற்கு டீலர்கள் முறையாக பதலிளிக்கவில்லை என கூறப்படுகின்றது. இதனால், அதிருப்தியடைந்த அந்த இளைஞர் ஹெக்டரைச் சுற்றிலும் 'இது கழுதை கார்' என்ற வாசகத்துடன் பேனர்களை ஒட்டியிருந்தார்.
இந்த சம்பவம்குறித்த தகவல் அதிகளவில் வைரலானதை அடுத்து எம்ஜி நிறுவனம் அந்த வாடிக்கையாளரின் அசௌகரியத்திற்கு உடனடி தீர்வு வழங்கப்பட இருப்பதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், புத்தம் புதிய எம்ஜி ஹெக்டர் நடு சாலையில் தீப்பிடித்து எரிவதைப் போன்ற காட்சிகள் தற்போது யுடியூபில் வலம் வந்த வண்ணம் இருக்கின்றது.
இந்த காரில் எதனால் தீப்பற்றியது என்பது குறித்த தகவல் இதுவரை முழுமையாக தெரிய வரவில்லை. இருப்பினும், அந்த காரின் எஞ்ஜினில் இருந்து தீயினால் உருவாகிய புகை வந்துக் கொண்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது. மேலும், காரின் எஞ்ஜின் பகுதியில் இருந்து நெருப்பு சொட்டு சொட்டாக விழுவதையும் நம்மால் காண முடிகின்றது.

இந்த சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரத்தில் உள்ள பந்த்ரா என்னும் பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் தீப்பிடிப்புகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேசமயம், இந்த காரின் எஞ்ஜினில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. ஏற்கனவே, எம்ஜி ஹெக்டர்குறித்து பரவி வரும் முரண்பட்ட கருத்துகளுக்கு மத்தியில் இந்த தீப்பிடிப்பு சம்பவம் கூடுதல் கலங்கத்தை எம்ஜி நிறுவனத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








