ஹைப்ரிட் மாடலிலும் வருகிறது புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை வசீகரிக்க வருகிறது. போட்டியாளர்களை விஞ்சும் விதத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த எஸ்யூவி களமிறக்கப்பட இருக்கிறது.

ஹைப்ரிட் மாடலிலும் வருகிறது புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

இந்த நிலையில், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ஹைப்ரிட் ஆப்ஷனிலும் வர இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கார் பெட்ரோல் - எலெக்ட்ரிக் மோட்டார் துணையில் இயங்கும் ஹைப்ரிட் மாடலிலும் வர இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ஹைப்ரிட் மாடலிலும் வருகிறது புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

அதாவது, ஆரம்ப நிலையில், மின் மோட்டார் மூலமாக கூடுதல் டார்க் திறனை பெற முடிவதால், சிறப்பான பிக்கப்பை பெறும் வாய்ப்புள்ளது. இந்த வசதி மூலமாக சற்று கூடுதல் எரிபொருள் சிக்கனம், குறைவான மாசு உமிழ்வு அம்சத்தையும் பெறும் வாய்ப்புள்ளது.

ஹைப்ரிட் மாடலிலும் வருகிறது புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

இந்த காரில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டிருப்பதால், பிரேக் பிடிக்கும்போது விரயமாகும் இயக்க ஆற்றல், மின் ஆற்றலாக மாற்றப்பட்டு இதன் 48 வோல்ட் பேட்டரியில் சேமிக்கப்படும். இதன்மூலமாக, மின் மோட்டாருக்கு மின்சாரத்தை பெறும் வாய்ப்பும் ஏற்படும்.

ஹைப்ரிட் மாடலிலும் வருகிறது புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

மறுபுறத்தில் எஞ்சின் ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டம் மூலமாக சிக்னல் உள்ளிட்ட இடங்களில் குறிப்பிட்ட வினாடிகளுக்கு மேல் கார் நிற்கும்போது எஞ்சின் தானாக அணைந்துவிடும். ஆக்சிலரேட்டரை அழுத்தினால் கார் எஞ்சின் உயிர் பெற்றுவிடும். இந்த தொழில்நுட்ப வசதியும் எரிபொருள் விரயத்தை தவிர்க்கும்.

ஹைப்ரிட் மாடலிலும் வருகிறது புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

எனினும், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் ஹைப்ரிட் மாடலின் மைலேஜ் விபரங்கள் தெரியவில்லை. சாதாரண பெட்ரோல் மாடலைவிட 12 சதவீதம் வரை கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, கிட்டத்தட்ட டீசல் மாடலை நெருங்கும் விதத்தில் இந்த ஹைப்ரிட் மாடலின் மைலேஜ் இருக்கலாம்.

ஹைப்ரிட் மாடலிலும் வருகிறது புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

மேலும், அடுத்த ஆண்டு அமலுக்கு வர இருக்கும் புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்ட பெட்ரோல், டீசல் எஞ்சின்களை மேம்படுத்தும் நிலை இருக்கிறது. ஆனால், இந்த பெட்ரோல் ஹைப்ரிட் மாடலை வைத்து இந்த மாசு உமிழ்வு விதிமுறையை கடந்து விடும் வாய்ப்பும் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு உள்ளது.

ஹைப்ரிட் மாடலிலும் வருகிறது புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் மைல்டு ஹைப்ரிட் மாடல் மிக சரியான விலையில் களமிறக்கப்படும் வாய்ப்பு இருப்பதால் வாடிக்கையாளர்களிடத்திலும் ஆதரவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து, பேட்டரி கார்களையும் களமிறக்கும் முனைப்பில் இருக்கிறது எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான சீனாவை சேர்ந்த செயிக் குழுமம்.

முதல் மாடலாக eZS மின்சார எஸ்யூவியை இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு செயிக் குழுமம் திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவியின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 428 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

Most Read Articles
English summary
According to reports, MG Hector SUV will come with a petrol-hybrid option in addition to the petrol and diesel engine versions.
Story first published: Saturday, March 30, 2019, 11:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X