10,000 ஹெக்டர்களை தயாரித்து எம்ஜி நிறுவனம் சாதனை... 6,000 யூனிட்கள் டெலிவிரி...

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி 10,000 யூனிட்கள் தயாரிக்கப்பட்டு இந்திய ஆட்டோமொபைல் மார்கெட்டில் புதிய மைல்கல்லை அடைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 5,000 யூனிட் தயாரிப்புகளுடன் இந்த எம்ஜி ஹெக்டர் அறிமுகப்படுத்தப்பட்டது.

10,000 ஹெக்டர்களை தயாரித்து எம்ஜி நிறுவனம் சாதனை... 6,000 யூனிட்கள் டெலிவிரி...

அதன்பின் இந்த 1.5 மாதங்களில் மேலும் 5,000 யூனிட் ஹெக்டர் கார்களை தயாரித்துள்ளது, எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம். முதல் 5,000 யூனிட்களை 3 மாதங்களாக தயாரித்த இந்நிறுவனம் அடுத்த 5,000 யூனிட்களை வெறும் 1.5 மாதங்களில் தயாரித்து சாதனை புரிந்துள்ளது.

10,000 ஹெக்டர்களை தயாரித்து எம்ஜி நிறுவனம் சாதனை... 6,000 யூனிட்கள் டெலிவிரி...

இக்கார் அறிமுகமான சமயத்தில் இந்நிறுவனத்தின் குஜராத்தில் உள்ள பரோடா ப்ளான்ட்டில் இருந்து மாதந்தோறும் 1,500 யூனிட் எம்ஜி ஹெக்டர் கார்கள் சந்தையில் இறக்குமதியாகின. ஆனால் அதன்பின் இக்காருக்கு ஏற்பட்ட அதிகப்படியான தேவையால், காத்திருப்பு காலத்தை அதிகரிக்க கூடாது என்பதற்காக எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் கடின உழைப்பால் இந்த எண்ணிக்கையை 3,000-மாக உயர்த்தியுள்ளது.

10,000 ஹெக்டர்களை தயாரித்து எம்ஜி நிறுவனம் சாதனை... 6,000 யூனிட்கள் டெலிவிரி...

இந்நிறுவனம் ஏற்கனவே 40,000 முன்பதிவுகளை ஏற்று கொண்டுள்ளது. இதில் 6,000 யூனிட்கள் வாடிக்கையாளர்களிடம் சென்றடைந்து விட்டன. எம்ஜி ஹெக்டாரின் விலை இந்திய எக்ஸ்ஷோரூம்களில் 12.48 லட்சத்தில் இருந்து 17.27 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

10,000 ஹெக்டர்களை தயாரித்து எம்ஜி நிறுவனம் சாதனை... 6,000 யூனிட்கள் டெலிவிரி...

எம்ஜி ஹெக்டர் காரில் இரு என்ஜின் தேர்வுகள் உள்ளன. 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் 143 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. மற்றொரு தேர்வான 2.0 லிட்டர் டீசல் என்ஜின் 173 பிஎச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது.

10,000 ஹெக்டர்களை தயாரித்து எம்ஜி நிறுவனம் சாதனை... 6,000 யூனிட்கள் டெலிவிரி...

எரிபொருள் திறனை அதிகரிக்கும், அதேநேரம் என்ஜினில் இருந்து வரும் இரைச்சலை குறைக்கும் வகையிலான பெட்ரோல் என்ஜினின் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரிடு வேரியண்ட்டும் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து என்ஜின் தேர்வுகளுடனும் ஆறு வேக நிலைகளை வழங்கக்கூடிய மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஹைப்ரிடு அல்லாத என்ஜினுடன் கூடுதலாக டிசிடி டிரான்ஸ்மிஷன் தேர்வையும் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

10,000 ஹெக்டர்களை தயாரித்து எம்ஜி நிறுவனம் சாதனை... 6,000 யூனிட்கள் டெலிவிரி...

இந்த எஸ்யூவியில் ஐ-ஸ்மார்ட் இணையத்தள வசதியுடன் மொபைல்போனை 10.4 இன்ச்சில் செங்குத்தாக வடிவமைக்கப்பட்டுள்ள இன்போடெயின்மெண்ட் தொடுதிரை அமைப்புடன் இணைக்கும் வசதியை இந்நிறுவனம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்த இணையத்தள வசதியுடன் ஓட்டுனர் தனது மொபைல்போனில் ஆப்களையும் இந்த தொடுத்திரையில் உபயோகிக்க முடியும். ஏசி, சன்ரூஃப், பின்புற கதவு போன்றவையும் இந்த காரில் உள்ள அம்சங்களாகும்.

10,000 ஹெக்டர்களை தயாரித்து எம்ஜி நிறுவனம் சாதனை... 6,000 யூனிட்கள் டெலிவிரி...

இந்தியாவின் முதல் ஏஐ செயல்படுத்தப்பட்ட வாகனமாக உள்ள இந்த ஹெக்டாரை ஒட்டுனர் தனது குரலின் உதவியுடன் கூட கண்ட்ரோல் செய்ய முடியும். இதற்காக 100 வாய்ஸ் கமெண்ட்ஸ் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. சாலைகளின் வரைபடம், அவசர உதவி அழைப்புகள், ஒரு பொத்தான் மூலம் நேரடியாக உதவி மையத்துடன் தொடர்பு, விருப்பமான பாடல்களை கேட்க கானா ஆப் போன்றவை அனைத்தும் இக்காரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தில் உள்ளன.

10,000 ஹெக்டர்களை தயாரித்து எம்ஜி நிறுவனம் சாதனை... 6,000 யூனிட்கள் டெலிவிரி...

பாதுகாப்பு அம்சங்களாக ஆறு காற்று பைகள், இஎஸ்பி, ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் அமைப்பு, 360 டிகிரி கேமிரா, முன்பக்க பார்க்கிங் சென்சார், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் என பல தொழிற்நுட்பங்கள் இக்காரில் உள்ளன.

10,000 ஹெக்டர்களை தயாரித்து எம்ஜி நிறுவனம் சாதனை... 6,000 யூனிட்கள் டெலிவிரி...

எம்ஜி ஹெக்டர் நிறுவனம் ஹெக்டாருக்கு அடுத்தப்படியான வாகனத்தை அறிமுகப்படுத்தவும் உள்ளது. இ-இசட்எஸ் என்ற பெயரில் எலக்ட்ரிக் எஸ்யூவியாக மார்கெட்டில் அறிமுகமாகவுள்ள இந்த கார் ஹூண்டாய் கோனாவிற்கு கடும் போட்டியினை தரும். இக்கார் குறித்த விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளது.

10,000 ஹெக்டர்களை தயாரித்து எம்ஜி நிறுவனம் சாதனை... 6,000 யூனிட்கள் டெலிவிரி...

எம்ஜி ஹெக்டர் நிறுவனத்தின் தயாரிப்புகள் சரியான விழா காலத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. முன்பதிவு செய்து காருக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த தயாரிப்பு அதிகரிப்பு என்கிற செய்தி கண்டிப்பாக மகிழ்ச்சியை தான் தரும்.

Most Read Articles
English summary
MG Hector 10,000 Units Production Milestone Crossed: 6,000 SUVs Already Delivered
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X