'மேட் இன் சைனா' கார் என்பதை அவ்வப்போது நிரூபித்து வரும் எம்ஜி ஹெக்டர்!

பெரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதிக இடவசதி, எக்கச்சக்க தொழில்நுட்ப அம்சங்களுடன் யாரும் எதிர்பாராத குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டதால், பெரும் வரவேற்பை பெற்றது.

'மேட் இன் சைனா' கார் என்பதை மணிக்கொரு முறை நிரூபிக்கும் எம்ஜி ஹெக்டர்!

குறிப்பாக, இந்த காரில் இடம்பெற்ற நேரடி இணைய வசதியை அளிக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் உள்ளிட்ட பல அம்சங்கள் வாடிக்கையாளர்களை வசியம் செய்தது. இந்த நிலையில், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் தொழில்நுட்ப மற்றும் எஞ்சின் பிரச்னைகள் குறித்த தகவல்கள் வருவது தொடர்கதையாகி இருக்கிறது.

'மேட் இன் சைனா' கார் என்பதை மணிக்கொரு முறை நிரூபிக்கும் எம்ஜி ஹெக்டர்!

அண்மையில் எஞ்சின் பிரச்னை காரணமாக, எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிகள் நடுரோட்டில் நின்றது குறித்த சம்பவங்கள் இணையதளங்களில் வைரலாகின. ஹைதராபாத்தில் முக்கிய சாலையில் ஒரு எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி எஞ்சின் பழுது காரணமாக நின்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் இருக்கும் புதிய பிரச்னை குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.

'மேட் இன் சைனா' கார் என்பதை மணிக்கொரு முறை நிரூபிக்கும் எம்ஜி ஹெக்டர்!

இதுகுறித்து அக்ஷய் சிவசா என்பவர் எம்ஜி ஹெக்டர் உரிமையாளர்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள வீடியோ பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆம், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் மேற்கூரையில் இருந்து கனமழையால் தண்ணீர் கசிந்து தொர தொரவென டேஷ்போர்டை ஒட்டி, சென்ட்ரல் கன்சோல் பகுதியில் கொட்டுகிறது.

'மேட் இன் சைனா' கார் என்பதை மணிக்கொரு முறை நிரூபிக்கும் எம்ஜி ஹெக்டர்!

இதனை வீடியோவாக எடுத்து அதன் உரிமையாளர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் செயல்படும் கார், பைக் குழுக்களின் பக்கங்களில் அதிகம் கலாய்க்கப்படும் விஷயமாகி இருக்கிறது.

ஒருவர் சில படி மேலே போய், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் கனமழையை உடனடியாக குடி நீராக மாற்றும் வசதியில் ஏற்பட்ட பிரச்னையால் இவ்வாறு தண்ணீர் கொட்டுவதாக நக்கலடித்துள்ளார். இதேபோன்று, ஆளாளுக்கு எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் இந்த பிரச்னையை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

'மேட் இன் சைனா' கார் என்பதை மணிக்கொரு முறை நிரூபிக்கும் எம்ஜி ஹெக்டர்!

சிலர் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் அருவி போன்ற புதிய தொழில்நுட்ப அம்சம் கொடுக்கப்பட்டு இருப்பதாக கிண்டலடித்து வருகின்றனர். தனது எம்ஜி ஹெக்டர் ஷார்ப் மைல்டு ஹைப்ரிட் வேரியண்ட்டில் இந்த தண்ணீர் ஒழுகும் பிரச்னை இருப்பதாக இதன் உரிமையாளர் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். இந்த வேரியண்ட்டில் சன்ரூஃப் இருக்கிறது. சன்ரூஃப் உள்ள சில கார்களில் இதுபோன்ற பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

MOST READ: மீண்டும் 8 போட தயாரா இருங்க: தமிழக வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அடுத்த ஆப்பு... முக்கிய தகவல்!

'மேட் இன் சைனா' கார் என்பதை மணிக்கொரு முறை நிரூபிக்கும் எம்ஜி ஹெக்டர்!

இந்த வேரியண்ட்டானது ரூ.20 லட்சத்தை நெருங்கிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்து வாங்கிய புத்தம் புது காரில் இவ்வாறு தண்ணீர் ஒழுகும் பிரச்னை எந்த அளவுக்கு அவருக்கு மன உளைச்சலை தரும் என்று எண்ணி பார்க்கத் தோன்றுகிறது.

MOST READ: வேற லெவல்... மகள் பள்ளிக்கு செல்லும் சமயத்தில் போலீஸ் அவதாரம் எடுக்கும் பெண்... எதற்காக தெரியுமா?

'மேட் இன் சைனா' கார் என்பதை மணிக்கொரு முறை நிரூபிக்கும் எம்ஜி ஹெக்டர்!

தண்ணீர் எங்கிருந்து கசிகிறது. இது உண்மையில் வடிவமைப்பு பிரச்னையா என்பதை உடனடியாக எம்ஜி மோட்டார் நிறுவனம் சோதித்து பார்த்து, அதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் சரிசெய்து தர வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது. எம்ஜி மோட்டார் நிறுவனம் இங்கிலாந்தை சேர்ந்த பாரம்பரிய நிறுவனமாக இருந்தாலும் தற்போது சீனாவை சேர்ந்த செயிக் குழுமத்தின் கீழ் செயல்படுகிறது.

MOST READ: சாலை விழிப்புணர்விற்காக சிக்னலாக மாறிய ஒன் பிளஸ் 7டி செல்போன்: சிறப்பு தகவல்!

'மேட் இன் சைனா' கார் என்பதை மணிக்கொரு முறை நிரூபிக்கும் எம்ஜி ஹெக்டர்!

செயிக் குழுமத்தால், சீனாவில் தயாரிக்கப்பட்ட பவ்ஜுன் 530 எஸ்யூவிதான் சில மாற்றங்களுடன் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாக எம்ஜி பிராண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பபிடத்தக்கது. அதாவது, மேட் இன் சைனா தயாரிப்பு என்பது கவனிக்கத்தக்கது.

Most Read Articles

English summary
MG Hector SVU's water leak problem video is going viral in social media. Hector Owners and lovers has urged MG Motor to check this issue immediately.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X